எதிர்நீச்சல் 2வில் என்ட்ரி கொடுத்த பிரபல நடிகர்.. டிஆர்பியில் விழுந்த அடி, அதிரடியாக மாற்றப்படும் கதை!
சென்னை: சன்டிவியின் 'எதிர்நீச்சல் தொடர்கிறது' சீரியலை பார்த்து வர்ற ரசிகர்களுக்கு ஒரு விஷயம் மட்டும் தொடர்ந்து மனசுல ஓடிக்கிட்டே இருக்கு. "இதுல பெண்கள் எப்போதும் தான் எதிர்நீச்சல் அடிக்க போறாங்களோன்னு. ஆரம்பத்தில் பெண்கள் முன்னேற்றம், ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் என்ற கான்செப்ட்டோட தொடங்கிய இந்த சீரியல், போகப் போக பெண்களை தோற்கடிக்கும் காட்சிகளிலேயே அதிக கவனம் செலுத்துற மாதிரி இருக்குதுன்னு பலரும் கிண்டலடிச்சுட்டு வர்றாங்க.

ஜனனிக்கு நடந்த விபத்து
இன்றைய எபிசோட்ல ஜனனி ரெளடிகளிடம் இருந்து தப்பிக்க ஓடி, கடைசியில் கார் மோதி மயங்கி விழுற சீன் ரசிகர்களை கொஞ்சம் டென்ஷன் ஆக்கிருக்கு. "சரி, இப்போ ஜனனி தான் அடுத்த டார்கெட் போல"ன்னு கமெண்ட்ஸ் போய்க்கிட்டே இருக்கு. பெண்கள் கதாபாத்திரங்கள் தொடர்ந்து பிரச்சனைகளில் சிக்கி, உதவி தேவைப்படுற நிலைமைக்கு தான் கொண்டு வரப்படுறாங்களோ என்ற விமர்சனமும் எழுந்திருக்கு.
'கேப்டன்' ஆலிவர் தேவசகாயம்
ஆனால் இதுக்கிடையில் ஒரு பாசிட்டிவ் சிக்னல் என்னன்னா, ஜனனியை காப்பாற்றி வரும் புதிய கேரக்டர் ஆலிவர் தேவசகாயம். முன்னாள் பாதுகாப்புப் படை வீரர் என்ற பின்னணி கொண்ட இந்த கேரக்டர், கதைக்கு ஒரு புதிய திருப்பத்தை கொடுக்கும்னு எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஆதி குணசேகரன் கேரக்டரின் ஆதிக்கமே அதிகமாக இருந்த நிலையில், "இப்போ அவனுக்கு ஒரு நிஜமான ஆபத்து வரப்போறதா?"ன்னு ரசிகர்கள் காத்திருக்கிறாங்க.
சமூக வலைதளங்களில் கூட "இந்த கேப்டன் கேரக்டர் வந்ததோட இனிமேல் கதை ஒரே பக்கம் போகாம, கொஞ்சம் பேலன்ஸ் ஆகுமா?"ன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க.
விவாகரத்து ட்ராக்
மறுபுறம், கதிர் - ஞானம் விவாகரத்து முடிவு, ரேணுகா - நந்தினி போட்ட கண்டிஷன் எல்லாமே கதையை இன்னும் சீரியஸா கொண்டு போயிருக்கு. ஆனாலும் இதுலயும் பெண்கள் தான் அதிகமாக எமோஷனலா பாதிக்கப்படுற மாதிரி காட்டப்படுறது, வழக்கமான டிவி சீரியல் ஃபார்முலா தானா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்புறாங்க.
ரசிகர்களின் ஒரே ஆசை
'எதிர்நீச்சல் தொடர்கிறது'ன்னு பெயர் வச்சிருக்குற சீரியல்ல, உண்மையிலேயே எதிர்நீச்சல் போட்டு பெண்கள் வெல்லுற சீன்கள் அதிகமாக வரணும் என்பதே ரசிகர்களின் ஆசை. தொடர்ந்து பெண்கள் தோற்றுக்கிட்டே இருக்குற மாதிரி கதை போறதை கலாய்ச்சாலும், இப்போ புதுசா வந்த ஆலிவர் தேவசகாயம் கேரக்டர் மூலம் கதை பாசிட்டிவா மாறுமா, ஒவ்வொரு எபிசோடும் பெண்கள் பக்கம் ஒரு வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கு.
இனி வரும் எபிசோட்களில் ஆதி குணசேகரனுக்கு நிஜமான ஒரு ரிவர்ஸ் அடியா? ஜனனி உள்ளிட்ட பெண்களுக்கு வலிமையான திருப்பமா? என்ற கேள்விகளோட, ரசிகர்கள் காத்திருக்கிறாங்க. இந்த முறை 'எதிர்நீச்சல்' உண்மையிலேயே எதிர்நீச்சலா மாறுமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கணும்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications