தினமும் ஒரு ப்ரமோ... அழுகாச்சியா.!!?? கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: இந்த பிக் பாஸ் க்கு என்னதான் ஆச்சு என்று ரசிகர்கள் ஒரு பக்கம் குழம்பி வருகின்றனர்.
தினமும் ஒரு ப்ரோமோவில் அழுகாச்சி சீன்களை காட்டுவது வாடிக்கை ஆகிவிட்டது போல.
இது நிஜமாகவே நடக்குதா அல்லது கண்டெண்ட்டுக்காக இப்படி பண்றாங்களா என்று நெட்டிசன்கள் கொளுத்திப் போட்டு வருகின்றனர்.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
எப்பவாது இப்படி பண்ணினா பரவாயில்ல..தினமுமே இப்படி ஒருத்தர் அழுதுக்கிட்டே இருந்தா??நிகழ்ச்சியை பார்க்கும் ஆர்வமே குறைந்துவிடும் என்று ரசிகர்கள் குறை கூறி வருகின்றனர். ஆரம்பத்தில் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்று சொல்வது போல பாடிக் கொண்டும், ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்த போட்டியாளர்கள் தற்போது வஞ்சனையில்லாமல் ரசிகர்களையும் அழ வைத்து வருகிறார்கள்.

ரசிகர்களின் விரக்தி
சின்னத்திரையில் சீரியல்களை பார்த்தால் தான் இப்படி அழுகாச்சி சீன்கள் வருகிறது என்று ரியாலிட்டி ஷோ பக்கம் திரும்பினால் அங்கேயும் இப்படியா என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இதற்காக பலர் ஹாஸ்ட்ஸ்டார் டவுன்லோட் செய்து அதில் தொடர்ந்து பார்த்து வருகிறார்களாம். ஆனால் அங்கேயும் அழுகை சீன்களை பார்த்ததும் முடியலடா சாமி...இப்படியே போய்க்கொண்டிருந்தால் இனி எதையும் பார்க்க போவதில்லை என்று பலர் விரக்தியில் கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.

என்ன நடக்குதோ தெரியலையே
பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி ரசிகர்கள் ஒரு பக்கம் கலாய்த்துக் கொண்டு இருந்தாலும் ஒரு பக்கமாக ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சிக்கு டிஆர்பி அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் இதில் வரும் சண்டை சச்சரவுகளும் என்று கருத்துக்கணிப்புகள் கூறி வந்த நிலையில் தற்போது பலரும் தினமும் நடக்கும் அழுகை சீன்களை பார்த்து கடுப்பாகி வருகின்றனர். இதுவரைக்கும் அதிகரித்து வந்த டிஆர்பி அதிகரிக்குமா அல்லது குறைந்து விடுமா என்று தான் பலர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

தொடரும் அழுகாச்சி சீன்கள்
இந்த வாரத்தின் முதல் நாளில் இருந்து இன்று வரைக்கும் ஒரு ப்ரோமோவில் யாராவது அழும் சீன்கள் எப்படியும் இடம் பிடித்துவிடுகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு தாமரை கதறி அழுத ஒரு ப்ரோமோ வந்து கொஞ்ச நேரத்தில் அடுத்த ப்ரோமோ விலும், விரிவான அழுகை சீன்கள் தான் தொடர்ந்து மூன்று ப்ரோமோவாக வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் பாவனி ஒரு பக்கமும், சுருதி ஒரு பக்கமும் கண்ணீரை பிழிந்து கொண்டிருந்தனர். இன்று அதுபோல இசைவாணி ஒருபக்கம், மதுமிதா ஒரு பக்கம் அழுது ரசிகர்களையும் அழவைத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications