இணையத்தில் தீயாய் பரவும் சீரியல் நடிகையின் சிக்ஸ் பேக் ஃப்ரீ வெட்டிங் சூட்.. கோபத்தில் 90's கிட்ஸ்
சென்னை: சீரியல் நடிகை சுபலட்சுமி தன்னுடைய திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவருடன் எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.
ப்ரீ வெட்டிங் சூட்டில் இந்த மாதிரி எல்லாம் புகைப்படம் எடுத்தால் எங்க நிலைமை என்னாகும் என்று சிங்கிள்ஸ் கொதித்து வருகிறார்கள்.
அன்பே வா சீரியலை விட்டு விலகிய சுபலட்சுமி தற்போது திருமணத்திற்கு பிறகு வெளியிடும் போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சீரியல் நடிகையின் திருமணம்
பொதுவாக சீரியல்களில் கதாநாயகிகள் மட்டுமல்லாமல் வில்லிகளும் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். சீரியலில் மட்டும் தான் நாங்கள் வில்லத்தனத்தை காட்டுவோம். நிஜ வாழ்க்கையில் அப்படி அல்ல என்று ஒரு சிலர் சீரியலை தாண்டிய நிகழ்ச்சிகளில் கலகலப்பாக இருந்து தங்களுடைய ரசிகர்களின் மத்தியில் மின்னி வருகிறார்கள். அந்த மாதிரி தான் சீரியல்களில் வில்லியாக மிரட்டி பலருடைய திட்டல்களை வாங்கிக் கொண்டிருக்கும் சீரியல் நடிகை சுபலட்சுமி தற்போது திருமணம் செய்துள்ளார்.

அன்பே வா சீரியல்
நடிகை சுபலட்சுமியின் திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வந்தனர். சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சுபலட்சுமி தற்போது சீரியல்களை விட்டு விலகி விட்டதாக கூறப்படுகிறது. கடைசியாக அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அன்பே வா சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். திடீரென இந்த சீரியல் விட்டு இவர் விலகியதும் இவருக்கு பதிலாக இப்போது வேற ஒரு நடிகை நடித்து வருகிறார். இந்த சீரியலை விட்டு விலகியதற்கான காரணத்தை இவர் கூறவில்லை. இவருடைய ரசிகர்கள் இவரை அதிகமாக தேடி வருகின்றனர். தன்னுடைய மிரட்டலான பார்வையால் நடிக்கும் சீரியல் எல்லாமே இவருக்கு நெகட்டிவ் கேரக்டர் வந்து கொண்டிருப்பதால், அதிகமாக பலரும் இவரை திட்டுவதாகவும் அதனால் இனி அப்படி நடிக்கப் போவதில்லை என்றும் இவர் கூறியதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
ஜீ தமிழில் ஒளிபரப்பான திருமதி ஹிட்லர், அழகிய தமிழ் மகள் மற்றும் அருந்ததி, சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என பல சீரியல்களில் சுபலட்சுமி நடித்துக் கொண்டிருக்கிறார். சீரியலில் நடிக்கும் போது புசுபுசுவென இருந்த இவர் தீவிரமான உடற்பயிற்சியின் மூலமாக தற்போது கதாநாயகிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் மாறி இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இவருக்கு சீரியலை தாண்டியும் சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இவருடைய திடீர் திருமணம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து வந்தது. ஆனாலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கடற்கரை போட்டோ சூட்
திருமணத்திற்கு பிறகு சுபலட்சுமி தனது கணவருடன் விதவிதமாக ஃப்ரீ போட்டோ சூட் புகைப்படங்களை எடுத்து குவித்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தான் தற்போது பலராலும் பேசப்படும் ஒரு பொருளாக இருந்து வருகிறது. கடற்கரையில் இவர் புடவை கட்டிக்கொண்டு நகைகளோடு ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய கணவர் வேஷ்டி மட்டும் அணிந்து கொண்டு மேல் சட்டை எதுவும் அணியாமல் தன்னுடைய சிக்ஸ் பேக்கை திறந்து காட்டி இருக்கிறார். கணவருடைய சிக்ஸ்பேக் உடம்பில் சுபலட்சுமி முத்தங்களை பொழியும் விதமாக ஃப்ரீ போட்டோ சூட் எடுத்து இருக்கின்றார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படி பண்ணலாமா
மேல்சட்டை அணியாமல் இருக்கும் தனது கணவரை ரசித்தபடியே சுபலட்சுமி நடந்து செல்லும் வீடியோக்களும், தனது கணவரின் மார்பில் சாய்ந்த படி கண் மூடி இருக்கும் சுபலட்சுமி இன் புகைப்படங்களும் 90ஸ் கிட்ஸ்களை அதிகமாக வெறுப்பேற்றி இருக்கிறதாம். அதனால் இந்த மாதிரி எல்லாம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டால் எங்களுடைய நிலைமை என்னாகும் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். வீட்டிற்குள் செய்வதை எல்லாம் வெளியிலே செய்து முடித்து விடுவார்கள் போல என்றும் சிலர் வெகுண்டு எழுந்து வருகிறார்கள். ரசிகர்கள் ஒரு பக்கம் இந்த வீடியோ பார்ப்பதற்கு அழகாகத் தான் இருக்கிறது என்று வாழ்த்துக்களை கூறி வந்தாலும், நெட்டிசன்கள் ஃப்ரீ போட்டோ சூட் என்று கண்டமேனிக்கு இப்படியா??போட்டோக்களை எடுத்து குவிப்பது என்று கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications