ப்ரமோவிற்காக.. பிராப்ளம் கிரியேட் பண்றாங்களோ...!!??போட்டியாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்றைய ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் நிஜத்தில் எபிசோடு பார்த்ததும் பலர் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள்.

மொத்தமாக கதையே மாறிப் போச்சு என ரசிகர்கள் விரக்தி அடைந்து இருக்கின்றனர்.

தாமரையை தவறாக நினைத்த ரசிகர்கள் பின்பு உண்மை தெரிந்ததும் ரொம்பவே பீல் பண்ணி வருகின்றனர்.

சீரிய சுருதி

சீரிய சுருதி

ரசிகர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் வார்த்தைகளை வெளிப்படுத்துவதன் மூலம் ப்ரோமோ வில் வந்துவிடலாம் என்று சுருதிக்கு யாரோ சொல்லி அனுப்பி இருப்பார்கள் போல... எனவே தான் நேற்றைய நிகழ்ச்சியில் வார்த்தையே வராமல் வெம்பி வெம்பி அழுதுகொண்டிருந்த தாமரையைப் பார்த்து..,வார்த்தையை விடாதீங்க.. வார்த்தையை விடாதீங்க.. என்று வான்டட் ஆக சீறிக் கொண்டிருந்தார்.

 அநாகரிகமான செயல்

அநாகரிகமான செயல்

நாடகக் கலைஞர்களின் பிரதிநிதித்துவப் படுத்தும் முகமாக பிக்பாஸ் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள தாமரை, தன் வாழ்க்கையில் பட்ட கஷ்ட நஷ்டங்களை கூறி ரசிகர்களின் அனுதாபத்தை மட்டுமின்றி தன்னுடைய அப்பாவித்தனமான ஆட்டிட்யூட்டாலும் ,கிராமிய வாசம் வீசும் பேச்சாலும் ரசிகர்களிடம் பரவலான ஆதரவைப் பெற்று பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக பெர்பாமன்ஸ் செய்து வந்து கொண்டிருக்கிறார். அவரது வெகுளி தனத்தையும்,எளிதில் உணர்ச்சிவசப்படும் குணத்தையும் சீண்டிப் பார்க்க நினைத்த சுருதியும் பாவனி ரெட்டியும் அவரது காயினை அநாகரிகமாக எடுத்துள்ளனர்.

வார்த்தையை விடாதீங்க

வார்த்தையை விடாதீங்க

விஷமத்தனமான செயலை செய்ததோடு மட்டுமின்றி தாங்கள் செய்த தவறை திசைதிருப்ப வேண்டி.. குரலை உயர்த்தி பேசுவதோடு மட்டுமின்றி நடந்த சம்பவத்தையும் ,பாச துரோகத்தையும் எண்ணி வெம்பி வெம்பி அழுது கொண்டிருக்கும் தாமரையைப் பார்த்து...'வார்த்தையை விடாதீங்க..' 'வார்த்தையை விடாதீங்க..'என்று நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களே வெறுப்பாகவும் அளவிற்கு சுருதி தாமரையை வம்பிழுத்து வருகிறார். ப்ரமோவில் வருவதற்காக அவர் அப்படி செய்திருந்தால் அவர் நினைத்த காரியம் வெற்றி தான். ஆனால் ப்ரமோவை பார்த்து நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களுக்கு தான் கொஞ்சம் ஏமாற்றம்.

கடைசியில் கதையே மாறிப் போச்சு

கடைசியில் கதையே மாறிப் போச்சு

ப்ரமோவில் தாமரை அழுவதையும், சுருதியின் ஆர்கியுமென்டையும் பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் தாமரை மீதுதான் தவறு இருந்திருக்கும் என்றே நினைத்திருந்தனர். ப்ரமோவிலே தாமரை பற்றி எதிர்மறையான கமெண்டுகளை பதிவு செய்திருந்தனர்.ஆனால் நிகழ்ச்சியை முழுமையாக பார்த்த பிறகு சுருதி ஆர்க்யூமென்டில் ஸ்ருதியே இல்லை...என்றும் தாமரை தங்கம்.. என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.பாவ..னி வரவர நீங்க புடுங்குறது எல்லாம் தேவையில்லாத ..ஆணி என்று ரசிகர்கள் நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+