ஆஜீத்தின் தோளில் கையை ஊன்றி... தலைக்கு மேலே காலை சுற்றி ரவுண்டு போட்ட கேப்ரில்லா!
சென்னை : பார்ப்பவர்கள் எல்லாம் அசந்து போகிற மாதிரி கேப்ரில்லா செய்த ஸ்டாண்டிங் பர்ஃபாமன்ஸ் தான் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் ஃப்ரீ டைமில் கூட கெத்து காட்டியிருக்கும் கேப்ரில்லாவுக்கும், ஆஜித்துக்கும் வாழ்த்துக்கள் குவிகின்றது.
என்ன இருந்தாலும் கேப்ரில்லாவுக்குள் இப்படி ஒரு சிங்கப்பெண் ஒளிந்திருப்பது இவ்வளவு நாளா தெரியவில்லையே என அவருடைய ரசிகர்கள் சிலாகிக்க தவறவில்லை.

இப்போ கேக்கவா வேணும்!
ஒன்பதாம் வயசிலேயே டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட கேப்ரில்லா, இப்போ டான்ஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். குழந்தையாக இருக்கும்போதே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகத் தொடங்கியது. இப்போது குமரிப் பெண்ணாக இருக்கும்போது கேட்கவே வேண்டாம்!.அந்த அளவிற்கு பெருகிவிட்டது. தன்னுடைய ரசிகர்களின் ஆராவாரத்துடன் நாளுக்கு நாள் தனது திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கும் கேப்ரில்லா நடிப்பில் மட்டுமல்லாமல் எப்போதுமே டான்ஸில் கெட்டிக்காரி தான் என்று என்று தற்போது நிரூபித்திருக்கிறார். இவருடைய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பார்த்த ரசிகர்கள் அசந்து போய் இருக்கின்றனர். இத்தனை நாளாய் இவரை கலாய்த்த நெட்டிசன்கள் கூட தற்போது இவருடைய திறமையை பார்த்து உச்சு கொட்டி வருகின்றனர்.

செட்டான கெமிஸ்ட்ரி
அனைவரும் அதிசயிக்கத்தக்க வகையில் இவர் அப்படி என்ன செய்து விட்டார் என்று பார்த்தால், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் டான்ஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பல ஜோடிகள் கலந்து கொண்டு வருகிறது. ஆனால் அதில் ஒரு சில ஜோடிகளை தான் ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். அந்த ஜோடிகளில் கேப்ரில்லாவும் ஆஜித்தும் இருக்கின்றனர். இவர்களின் ஜோடியான ஆட்டத்தை பார்த்து அசந்துபோன ரசிகர்கள் இவருக்காக ஒவ்வொரு வாரமும் கமெண்டுகளை கொட்டுகின்றனர். அதுவும் வரும் வாரத்தில் இவருடைய ஆட்டம் வெறித்தனமாக இருக்கிறது. அதில் தல தளபதி இருவரையும் சேர்த்துவைத்து இவர்கள் போட்ட ஆட்டம் தான் தற்போது விஜய் டிவியில் அடிக்கடி ப்ரோமோவில் போட்டு வருகின்றனர். இந்த ஆட்டத்தை பார்த்ததும் ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்காகி இருக்கின்றனர். அஜித், விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இவர்களின் ரசிகர்களும் இந்த குத்தாட்டத்தை பார்த்து குதூகலிக்க தவறவில்லை.

நல்ல சப்போர்ட் கொடுக்குறாங்கப்பா
அந்த பிரோமோவில் வேஷ்டி சட்டை போட்டுக்கொண்டு கேப்ரில்லாவும், விஜய்யின் கெட்டப்பில் ஆஜித்தும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்று டான்ஸில் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது ஜோடியாக ஆட்டம் போட்டிருந்தனர். அதற்கு பிறகு மீண்டும் இவர்கள் ஜோடி சேர்ந்து இருப்பதைப் பார்த்து இவர்களுடைய ரசிகர்கள் இவர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கேப்ரில்லாவும், ஆஜித்தும் தான் அதிகமாக ஒன்றாகவே இருந்தனர் .இதனால் இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி நன்றாக செட் ஆகிவிட்டது. நண்பர்களாக இவர்கள் அடிக்கடி பார்ட்டி கொண்டாடி வருவதை போல தான் தற்போதும் இந்த பிக்பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியும் செலப்ரேட் பண்ணி வருகிறார்கள். இருவருடைய ரசிகர்களும் இவர்களுக்கு அதிகமான சப்போர்ட் கொடுத்து வருவதால் இவர்களும தங்களுடைய திறமையை நன்றாக நிரூபித்து வருகின்றனர்.

மேலே பறந்து...கலக்கல் தான்...
ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஏழாம் வகுப்பு c' பிரிவு என்னும் சீரியலில் கேபி கேரக்டரில் பள்ளி குழந்தையாக நடிப்பில் பட்டையைக் கிளப்பி இருந்தார். இந்த சீரியலுக்கு பிறகு இவர் சீரியலில் நடிக்க வில்லை என்றாலும் திரைப்படத்தில் காலடி எடுத்து வைத்து விட்டார். 3 படத்தில் சமி கேரக்டரில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக மாறிவிட்டார். இவருக்கு இளைஞர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பு இருக்கின்றது. ரசிகர்களின் அதிகமானோர் இளைஞர்களாக இருப்பதால் தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது அதிகமான சப்போர்ட்டும் கிடைத்திருக்கிறது. ரசிகர்களின் ஓட்டினால் இந்த நிகழ்ச்சியில் இவர் அதிக நாட்கள் இருந்தாலும் டைட்டிலை வின் செய்யாவிட்டாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு விட்டார். அந்த மாதிரிதான் தற்போதும் கூட இவருடைய நடனத்தை பார்த்து ரசிகர்கள் அசந்துபோய் உருகி உருகி கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். ஆனால் யார் என்ன சொன்னாலும் ஆஜித்தின் மேலே பறந்தபடி கேபியை பார்த்ததும் எல்லோருக்கும் கொஞ்சம் ஷாக் தான்..
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications