வெட்கத்துக்கே வெட்கம் வரும் அழகி..கேப்ரில்லா வா இது சும்மா கிக் ஏறுதே.. ஓடிவந்து ரசிக்கும் ரசிகர்கள்
சென்னை : பாவாடை தாவணியில் பால் வடியும் முகத்தை பார்ப்பதற்காக ஓடிவரும் ரசிகர்களால் இன்ஸ்டாகிராமில் பெரிய ட்ராஃபிக் ஜாம் ஏற்பட்டுவிட்டதாமே.
கேப்ரில்லா கேப் விடாமல் வெளியிட்ட போட்டோவை பார்த்து அசந்துபோன ரசிகர்கள் பேசவே வார்த்தைகளின்றி தவிக்கிறார்களாம்.
இதுவரை காட்டாத அழகை மொத்தமாக காட்டி மூச்சடைக்க வைத்துவிட்டாரே என்று குமுறும் ரசிகர்கள் கேப்ரில்லாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

அந்தப் பூவாசம் இங்க வரைக்கும் வீசுது
தலை நிறைய மல்லிகைப்பூ, கரு விழிகளில் ஒரு ஏக்கத்தோடு பாவாடை தாவணியில் பார்ப்பவர்களை பதற வைத்திருக்கும் கேப்ரில்லாவை பார்த்ததும் அசந்து போன ரசிகர்கள் உச்சி கொட்டி வருகின்றனர். இது வரைக்கும் பார்த்த கேபியா இது என்று உளறி வருகின்றனர். ரசிகர்களை இந்த அளவிற்கு காலை வேளையிலே அதிர்ச்சியடைய வைத்திருப்பதை பார்த்து வைத்த கண் வாங்காமல் ரசிக்கும் கூட்டம் ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிலரால் டக்கென்று கண்டுபிடிக்க முடியவில்லையாம். அந்த அளவிற்கு லாவண்டர் பட்டுப்பாவாடை, தாவணியில் லாவகமாக ரசிகர்களின் இதயத்தை கவர்ந்திருக்கிறார். இவர் மாடர்ன் உடையில் வந்தாலே பின்னாடி சுற்றும் ரசிகர்களின் மனது தற்போது பாவாடை தாவணியில் சில்லு சில்லா உடைந்து விட்டதாம், ஏனென்றால் பார்வையில் அந்த அளவிற்கு சூடாக இருக்கிறதாம்.

டான்ஸில் பட்டையைக் கிளப்புகிறாரே
கேப்ரில்லாவை பலருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தான் தெரிந்திருக்கும். இந்த நிகழ்ச்சியில் இவர் நான்காவது இடத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இருந்தாலும் இவருடைய ரசிகர்கள் இவர் டைட்டில் வின் பண்ண வில்லையே என்று ஃபீல் பண்ணி வந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 ஜூனியர்ஸ் நிகழ்ச்சியில் குழந்தை நட்சத்திரமாக ஆட்டம் போட்டு ரசிகர்களை மட்டுமல்லாமல் அங்கிருந்த நடுவர்களையும் அசர வைத்துவிட்டார். அதனால்தான் இந்த நிகழ்ச்சியில இவர் எதார்த்தமான நடனத்தால் வெற்றியும் பெற்றிருக்கிறார். அதற்குப்பிறகு ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் 2013ல் மீண்டும் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியிலும் இவர் வெற்றி பெற்று விட்டார்.அந்த வயதிலேயே அப்படி என்றால் இப்போ சொல்லவா வேண்டும். தற்போதும் டான்ஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். இப்போ கூட பிக் பாஸ் டான்ஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் மீண்டும் களம் இறங்கி ஒரு கை பார்த்து விடலாம் என்று பார்வையாளர்களை மிரட்டி வருகிறார். தன்னுடைய டான்ஸ் திறமையினால் ஒவ்வொரு வாரமும் இவர் நல்ல கமெண்டுகளை நடுவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறார். நடுவர்களிடமிருந்து மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் இவருடைய டான்ஸுக்கு அடிமையாக மாறிவிட்டனர். அந்த அளவிற்கு நடனத்தில் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

இப்படியே பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல. .
சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக 2012-இல் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் சுமி கேரக்டரில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு சென்னையில் ஒரு நாள் படத்தில் ரியா கேரக்டரிலும் அப்பா படத்தில் ரஷிதா பானு என்னும் முன்னணி கேரக்டரிலும் நடித்திருந்தார். அதிலும் அப்பா படத்தில் இவருக்கு நடிப்பதற்கு நன்றாகவே கதை அமைந்திருந்தது. கிடைத்த வாய்ப்பை விட்டுவிடாமல் கேப்ரில்லா, பானு கதாபாத்திரத்தில் பட்டையைக் கிளப்பி விட்டார். அதற்குப் பிறகு மீண்டும் விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்தார். அது இது எது மற்றும் முரட்டு சிங்கிள்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்திருக்கிறார். என்னதான் இவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தாலும் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக தான் இருந்து கொண்டிருக்கிறார். அதனாலேயே இவருக்கு சமூகவலைத்தளத்தில் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து தன்னுடைய ரசிகர்களுக்கு எனர்ஜி ஊட்டுவதில் தனி கவனம் செலுத்துகிறார். அதுமட்டுமல்லாமல் ப்ரீயாக இருக்கும் நேரத்தில் ரீல்ஸ் வீடியோக்களையும் எடுத்து குவிக்கிறார். இதனை பார்த்து இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் இவருக்கு ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றனர். தற்போது கூட இவருக்கு இன்ஸ்டாகிராமில் 1.2 மில்லியன் பாலோவர்ஸ் இருக்கின்றனர்.

நாணமோ ஏக்கத்தை கூட்டுது
ரசிகர்களின் ஆதரவை பார்த்து இவரும் ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து போட்டோக்களை எடுக்க ஆரம்பித்துவிட்டார். அதுவும் இதுவரைக்கும் இவர் மாடர்ன் உடைகளில் டுகே கிட்ஸ் ஆக வலம் வந்து கொண்டிருந்தார். தற்போது முதல்முறையாக பாவாடை தாவணியில் அப்படியே கிராமத்து பைங்கிளி ஆக மாறி இருக்கிறார். இவருடைய அழகைப் பார்த்ததும் அசந்து போன ரசிகர்கள் கமெண்ட்டில் கொஞ்சி வருகின்றனர். அதுவும் அசத்தலான இவருடைய இந்த லாவண்டர் கலர் பாவாடை தாவணியை பலர் தன்னுடைய டிபி ஆக மாற்றி விட்டார்களாம். அவர் பல போட்டோக்களை அப்லோட் செய்து இருந்தாலும் அதில் நாணத்தோடு,முகத்தில் வெட்கம் சிந்த, தலைகுனிந்தபடி நெற்றியில் கைவைத்து லேசாக சிரிக்கும் சிரிப்பை பார்த்து சிலருக்கு பசியே எடுக்கவில்லையாம். இந்த போட்டோவை பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்று அப்படியே இன்ஸ்டாகிராமில் தவம் கிடக்கின்றனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications