கோபிநாத் நீயா நானா நிகழ்ச்சிக்கு வர காரணமே இது தானாம்...ஆனாலும் இவருடைய பெருந்தன்மை பெருசு தான்..!!
சென்னை: பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் தான் நீயா நானா நிகழ்ச்சிக்குள் வந்தது பற்றியும் நிகழ்ச்சியில் நடந்த பல சுவாரசியங்களை குறித்தும் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
2006 முதல் தற்போது வரை நீயா நானா நிகழ்ச்சியின் ஒரே தொகுப்பாளராக தான் இருந்து வருவதை பற்றியும், இந்தப் பெருமையை தன்னை மட்டும் சார்ந்ததில்லை என்றும், வேறு யார்? யார்?காரணம் என்பதை பற்றியும் கோபிநாத் கூறியுள்ள கருத்துக்கள் நீயா நானா நிகழ்ச்சி குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கும்.

கோபிநாத் சிறிய அறிமுகம்
நீயா? நானா? கோபிநாத் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர். ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கியாக தன் வாழ்க்கையை துவங்கினார். பின்பு ராஜ் டிவி,ஜெயா டிவி, மற்றும் சில பத்திரிகைகளில் நிருபராகவும் பணியாற்றியுள்ளார். பின்பு தனக்கு விஜய் டிவியில் கிடைத்த மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்களை மட்டுமல்ல சேனலையும் இவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். கோபிநாத்தின் திக்குமுக்காடாத தமிழ் உச்சரிப்பும், குரல் வசீகரமும் அரசியல் மற்றும் பொதுப்பிரச்சினை குறித்து கோபிநாத் பேசுவதை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்த்தது.

எல்லாத்துக்கும் ஆரம்ப புள்ளி
இன்று பல செய்தி சேனல்கள் அரசியல் குறித்த விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன அதற்கெல்லாம் ஆரம்பப் புள்ளி கோபிநாத்தின் மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சி தான். ஆர்.ஜே, பத்திரிக்கையாளர்,நிருபர், நிகழ்ச்சி தொகுப்பாளர், என்று பன்முகத் திறமை கொண்ட கோபிநாத் சிறந்த எழுத்தாளரும் கூட. கோபிநாத் எழுதிய புத்தகங்களில் தயவு செய்து இந்த புத்தகத்தை வாங்காதீங்க புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது. விஜய் டிவி நிறுவனத்தார் நீயா நானா நிகழ்ச்சி தொடங்குவது குறித்த பேச்சுவார்த்தையின் போதே அவர்கள் கண் முன் வந்தது மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியை அருமையாக தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த கோபிநாத் தானாம்.

நீயா நானா முதல் அனுபவம்
நீயா நானா நிகழ்ச்சியின் ஆரம்பத்தை பற்றி கூறியுள்ள கோபிநாத், இரு வேறு கருத்துக்களை கொண்டவர்களை எதிர் எதிராக அமர வைத்து பேசினால் எப்படி இருக்கும்? என்று டிவி சேனல் தரப்பினர் யோசித்து வந்த பொழுது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது நான் தான் என்று முடிவு செய்து விட்டனர். என்னுடைய முதல் நிகழ்ச்சியில் "சினிமா நடிகர்களின் ரசிகர் மன்றத்தாரும்-அவர்களது குடும்பமும்" என்ற தலைப்பில் கருத்து விவாதத்தை நடத்தினோம். அந்த நிகழ்ச்சி சிறப்பான வரவேற்பை பெற்றது. தான் மிகவும் சிறிய வயதிலே அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்த நிகழ்ச்சி தொகுப்புக்கு வந்து விட்டதாகவும் இப்பவும் கூட நான் தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சியில் உள்ள என்னுடைய தோற்றத்தையும், நடை, உடை பாவனைகளையும் வைத்து என்னை கலாய்ப்பதற்கு என் குடும்பத்தினர்கள் பயன்படுத்துவதுண்டு என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.

கெடுக்காமல் இருப்பதே என்னுடைய வேலை
நீயா நானா நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதற்கான திறமை, தகவல் திரட்டுவது போன்றவை நிகழ்ச்சி ஷூட்டிற்கான ஆரம்ப பணியில் இருந்து மட்டும் வந்து விடாது, நிகழ்ச்சிக்கான தலைப்பு தெரிந்தவுடன் ஒரு சிலர் தகவல்களை கூடுதலாக தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம். ஆனால் வாழ்க்கையில் நமக்கு கிடைக்கிற தகவல்கள் மற்றும் தரவுகளை மூளையில் சேமித்து வைத்திருந்தால் மட்டுமே அவ்வப்போது வெளியே எடுத்து பேசி நிகழ்ச்சியை தொய்வில்லாமல் தெளிவான முறையில் கொண்டு செல்ல முடியும்.நீயா நானா நிகழ்ச்சியின் வெற்றிக்கு கேமராவுக்கு பின்னால் மூன்று தலைமுறை சார்ந்த இளைஞர்களின் உழைப்பு இருக்கிறது. கேரவனில் ஹாயாக இருந்து கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் என்னை விட தூக்கம் இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் அவர்களின் உழைப்பை கெடுக்காமல் சரியாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மட்டுமே தன்னுடைய வேலை என்று பெருந்தன்மையாக கூறியுள்ளார்.

கோபிநாத்தின் பெருந்தன்மை
ஒரே ஒரு ஷோவில் சில நிமிடங்கள் வந்தாலும், தான் தான் அந்த ஷோவின் வெற்றிக்கு காரணம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்தத் துறையில், இத்தனை வருடங்களாக தொடர்ந்து தனி ஒருவராக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் நிகழ்ச்சியின் வெற்றிக்கு தன்னைவிட இயக்குனரும், உதவி இயக்குனரும், பணியாளர்களும் தான் முக்கிய காரணம் என்று கூறிய கோபிநாத்தின் பெருந்தன்மையை பலர் பாராட்டி வருகின்றனர்
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications