நான் வெளியே வந்ததற்கு வருத்தப்படவில்லை..ரசிகர்களும் வருத்தப்பட வேண்டாம்..ஆறுதல் கூறிய இசைவாணி
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு தன்னுடைய ரசிகர்களுக்காக இசைவாணி பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
எனக்கு இதுவரைக்கும் வாக்களித்து ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பலர் இவர் வெளியே வந்து விட்டதால் இனி அந்த நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என்று கூறியதாகவும் அதற்கு அப்படி செய்யாதீர்கள் என அவர்களுக்கு அறிவுரை கூறி இருக்கிறாராம் இசைவாணி.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒருசில போட்டியாளர்களின் வெளியேற்றம் ரசிகர்களின் மனதை அதிகமாக காயப்படுத்தி விடும். அந்த மாதிரிதான் தற்போதைய சீசனில் இசை வாணியின் வெளியேற்றம் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைக்கிறது. இந்த வீட்டில் இவர் இன்னும் அதிக நாட்கள் இருக்க வேண்டும் என்று இவருக்கு ஆதரவு கொடுத்து வந்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து கொண்டிருந்தனர். இவர் விளையாட்டை நன்றாக விளையாட வேண்டும் என்று அவ்வப்போது அறிவுரைகளையும் வழங்கி வந்தனர்.

தொடர்ந்து வந்த பிரச்சனைகள்
ரசிகர்களின் எதிர்பார்ப்பு படியே ஆரம்பத்தில் நன்றாக விளையாட வேண்டும் என்று தொடங்கிய இசைவாணி அந்த பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு சில பிரச்சினைகளால் இவருடைய முடிவுகளை சரியாக எடுக்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது என்று கூறியிருக்கிறார். இந்த வீட்டிற்குள் வருவதற்கு முன்பு வரைக்கும் நான் நன்றாகத் தான் இருந்தேன். ஆனால் இங்கேதான் என்னால் என்னுடைய கேரக்டரில் இருக்க முடியவில்லை என அவ்வபோது இவரும் கூறிக் கொண்டுதான் இருந்தார். இதை ரசிகர்கள் பார்த்து கொண்டு இருந்ததால் இவருக்கு பல நேரங்களில் ஆதரவாக ரசிகர்கள் கமெண்டுகளை அனுப்பி வந்து கொண்டிருந்தனர்.

பாடலை மறந்து விட்டாரோ??
சாதாரண குடும்பத்தில் பிறந்து தற்போது கானா பாடலால் இந்தியாவின் தலைசிறந்த பெண்கள் எனும் வரிசையில் இவருடைய பெயரும் இடம் பெற்றிருப்பது ரசிகர்கள் பலருக்கும் இவர் மீது நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தி இருந்தது. அதனால் தான் இவருக்கு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து. இருந்தாலும் இவருடைய பாடலை உலகமெங்கும் ஒலிக்க செய்வார் என்று அவருடைய ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இவருக்கும் ஒரு சிலரோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய பாடலை மறந்து போய் விட்டார் என்று பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இசை வாணியின் அறிவுரை
இவருடைய விளையாட்டை இவர் சரியாக விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் கமல் இவருக்கு கொடுத்த அட்வைஸ் தான் இவரை வேறுமாதிரியாக விளையாட்டை திசைதிருப்பி விட்டது என்று பலர் கூறிவருகின்றனர். ஆரம்பத்தில் அண்ணாச்சி உடன் இவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய முடிவுகளில் தடுமாறிக் கொண்டிருந்தவர், கடைசியாக தாமரைச்செல்வி உடன் ஏற்பட்ட தகராறால் ரசிகர்கள் ஒரு சிலர் இவரை வெறுக்க தொடங்கி விட்டனர். அதனாலேயே இவருக்கு இந்த கடைசி வாரத்தில் வாக்குகள் குறைந்துவிட்டது போல. ஆனாலும் வெளியே வந்த இசைவாணி தான் சந்தோஷமாக தான் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்துள்ளேன் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய ரசிகர்கள் ஒரு சிலர் இவர் இல்லாத பிக் பாஸ் இனி பார்க்க மாட்டோம் என்று கூறி இருக்கிறார்களாம். அதனால் அவர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். இப்படியெல்லாம் செய்யாதீர்கள் என்று அறிவுரையும் கூறியிருக்கிறார்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications