பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியாவிற்கு கிடைத்த விருது...வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: சின்னத்தரை ரசிகர்களின் மனதை கவர்ந்த காவியா அறிவு மணிக்கு கிடைத்த விருதுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளத்திலும் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் தற்போது ஆர்ப்பரித்து வருகின்றனர்.
இது ஆரம்பம் தான் இன்னமும் இருக்கிறது என்று ரசிகர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிக்காட்டி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போதைய முல்லை கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் காவியா அறிவு மணிக்கு சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். தற்போது இவருடைய ரசிகர்கள் இவருக்குக் கிடைத்திருக்கும் விருதுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

பாரதிகண்ணம்மாவில் அறிமுகம்
இவர் ஒரு மாடல் பெண்ணாக அறிமுகமாகி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலின் சைடு ரோலில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பு பெரிய வாய்ப்பாக இருந்ததால் இவர் உடனே பாரதிகண்ணம்மா சீரியலை விட்டு விலகிவிட்டார்.

ரசிகர்களை கவர்ந்த காவியா
தற்போது ஒரு வருட காலமாக இவர்தான் இந்த சீரியலின் முல்லை கேரக்டரில் நடித்து வந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே இந்த சீரியலின் முல்லை கேரக்டருக்கு பெரிய வரவேற்பு இருந்த நிலையில், இவருடைய அழகும் நடிப்பும் இந்த கேரக்டருக்கு செட் ஆகிவிட்டது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இவருக்கு சீரியலில் அதிகமாக ரசிகர்கள் உருவாக ஆரம்பித்து விட்டனர்.

நடிப்புக்கு அங்கீகாரம்
ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் தற்போது சீரியலிலும் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். அதனால் இவருக்கு தற்போது பெஸ்ட் டெலிவிஷன் ஆக்ட்ரஸ் அவார்டு 2021 ஆம் ஆண்டிற்காக ராய் ஃபேஷன் ஈவன்ட் மூலம் கிடைத்திருக்கிறது. இதற்கு இவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

கலக்கும் கதிர் முல்லை ஜோடி
முல்லை கேரக்டரில் இவருடைய அழகான நடிப்பு பல பெண் ரசிகர்களையும் கவர்ந்து இருக்கிறது. ஆரம்பத்தில் இவர் இந்த கேரக்டருக்கு செட்டாவாரா என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் கூட தற்போது இவருடைய நடிப்பு யதார்த்தமாக இருக்கிறது என்று கூறிவருகின்றனர். அதுவும் கதிர், முல்லை காம்பினேஷன் தற்போது அதிகமாக ஒர்க் அவுட் ஆகி வருகிறது என்று ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். அதனால் தான் இந்த சீரியலில் கதிர், முல்லைக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது என்றும் கூறிவருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications