‘மெட்டி ஒலி’ நிர்மலா ஞாபகம் இருக்கா? சினிமாவை விட்டு விலக காரணம்! இப்போ பலருக்கும் முன்மாதிரியாக மாறிட்டாங்களே
சென்னை: ஒரு காலத்தில் சின்னத்திரையில் 'வில்லி'ன்னா யாருனு கேட்டா, பலருக்கும் முதல்ல நினைவுக்கு வர்ற பெயர் - 'மெட்டி ஒலி' நிர்மலா (Metti Oli Aruna Devi). அந்த கேரக்டரை உயிரோட நடிச்ச அருணா தேவி, திரையில் வந்தாலே வீட்டுக்குள்ள இருந்தவங்க "அட... இவ வந்துட்டாளே!"னு டிவி முன்னாடி உட்கார முடியாத அளவுக்கு கோபப்பட வைப்பார். அந்த அளவுக்கு நெகட்டிவ் ரீச் சம்பாதிச்ச நடிகைதான் அருணா தேவி.
'மெட்டி ஒலி' மட்டும் இல்லாமல், 'மனைவி', 'ஆசை', 'சிதம்பர ரகசியம்', 'குலதெய்வம்', 'கல்யாண வீடு'ன்னு தொடர்ச்சியா பல சீரியல்களில் வில்லி வேடங்களில் கலக்கியவர். சீரியல்களோட சேர்த்து 'மஸ்தானா மஸ்தானா', 'ஜோடி நம்பர் 1' மாதிரி ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு, டான்ஸ், நடிப்பு இரண்டிலும் தன்னுடைய வேறொரு முகத்தையும் காட்டினார். கிளாசிக்கல் டான்ஸில் பயிற்சி பெற்றவர் என்பதால், மேடையில ஆடும் போது வில்லி நிர்மலாவை மறந்து, ரசிகர்கள் அசந்து போவாங்க.

நடிகை அருணா தேவி பேட்டி
இப்படி டிவி சீரியல்களில் பிஸியாக இருந்தவர், ஒருகட்டத்தில் திடீர்னு காணாமல் போயிட்டார். "அருணா தேவி இப்போ எங்கே?"ன்னு ரசிகர்கள் பல வருஷமா கேட்டு வந்த கேள்விக்கான பதில், அவர் சொன்ன பேட்டிகள் வைரல் ஆகி வருகிறது. அதில் கொரோனா காலகட்டத்தில் காரைக்குடியில் ஷூட்டிங்கில் இருந்த போது, மூத்த மகள் ஏஜ் அட்டென்ட் பண்ணி இருக்காங்க. அதைக் கேள்விப்பட்டதும் அருணா வீட்டிற்கு போக முயற்சி செய்திருக்கிறார்.
ஆனால் ஷூட்டிங், லாக்டௌன் கட்டுப்பாடுகள், பயணம் எல்லாம் காரணமாக உடனே வீடு திரும்ப முடியாமல், பல நாள்கள் போராடி தான் குடும்பத்தை சேர்ந்தாராம். அந்த அனுபவம் தான் அவருக்குள் பெரிய மாற்றத்தை கொண்டு வந்ததாம்.

சினிமாவை விட்டு விலக காரணம்
"ஒரு அம்மாவா, என் குழந்தைகள் வாழ்க்கையில முக்கியமான நேரத்துல கூட இருக்க முடியாம போயிடுச்சே"ன்னு அவருக்குள்ள பெரிய குற்ற உணர்ச்சி வந்ததாப். அதுக்குப் பிறகு, இனிமே சீரியல்களுக்காக ஓடிக்கிட்டிருக்க வேண்டாம், குடும்பத்துக்கே முழு நேரம் கொடுக்கணும்னு முடிவு எடுத்தாராம். குழந்தைகளின் படிப்பு, வளர்ப்பு, வீட்டுப் பொறுப்புகள் எல்லாமே முக்கியம்னு நினைச்சு, சினிமா - டிவி உலகத்திலிருந்து மெதுவா விலகினார்.
இப்போ ஸ்கூல் டீச்சர்
அதோடு மட்டும் இல்லாமல், அருணா தேவி இன்னொரு முக்கியமான முடிவும் எடுத்தார். குழந்தைகள் படிக்கும் சூழலை நேரடியாக உருவாக்கணும்னு நினைச்சு, சென்னையில் பிளே ஸ்கூல் தொடங்கினார். அதுக்காக தனியா படிச்சு, டிப்ளோமா கோர்ஸ் முடிச்சு, ஸ்கூல் நிர்வாகத்தையும் கையில் எடுத்தாராம். இன்று அந்த ஸ்கூல் நல்லா போயிட்டு இருக்குது. நடிப்பு இருந்தாலும், இப்போ அவருக்கு முதல் முன்னுரிமை குழந்தைகளும், கல்வி சார்ந்த வேலைகளும்தான்.

ஒரு பக்கம் திரையில வில்லி வேடங்களில் எல்லோரையும் பயமுறுத்தியவர், நிஜ வாழ்க்கையில் ரொம்பவே அமைதியானவர். சீரியலில் திட்டி, சத்தம் போட்டு பேசினாலும், உண்மையில குழந்தைகளோட சிரிச்சு பேசும் டீச்சராக மாறிட்டார். "வில்லி நிர்மலா இப்போ ஸ்கூல் மேடம் ஆகிட்டாங்க"ன்னு சொல்லலாம் அந்த அளவுக்கு வாழ்க்கை மாறியிருக்கு.
ஒரு காலத்தில் அருணா தேவி வந்தாலே டிவியை ஆஃப் பண்ணும் ரசிகர்கள் கூட, இப்போ அவரைப் பற்றி கேள்விப்பட்டா "அவங்க இப்படி நல்ல வேலையில செட்டிலானதுக்கு சந்தோஷம்தான்"ன்னு சொல்றாங்க. வில்லி கேரக்டரால கிடைத்த புகழை தாண்டி, குடும்பத்துக்காக எடுத்த முடிவு தான் அவரை பற்றி இப்போது பேச வைத்திருக்கிறது..
சீரியல்கள்ல நெகட்டிவ் கேரக்டர் பண்ணினாலும், நிஜ வாழ்க்கையில பாசமான அம்மாவா, சமூகத்துக்கு ஒரு நல்ல விஷயம் செய்யும் பெண்ணா மாறியிருக்கும் அருணா தேவி, இன்று ரசிகர்களுக்கே ஒரு நல்ல எடுத்துக்காட்டாக மாறியிருக்கிறார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications