ஜாய் கிரிஸில்டா வக்கீலுடன் சீரியல் நடிகை செய்த சதி! நாஞ்சில் விஜயன் வெளியிட்ட ஆதாரம்.. வெளிவரும் ரகசியம்
சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகர் நாஞ்சில் விஜயன் மற்றும் திருநங்கை தொகுப்பாளரும் விஜய் டிவி சீரியல் நடிகையுமான வி ஜே வைஷு இடையிலான பிரச்சனை மீண்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சில மாதங்களுக்கு முன் கொடுத்த புகார்
சில மாதங்களுக்கு முன்பு வைஷு, நாஞ்சில் விஜயன் தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு விட்டதாகவும் கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் அப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால் பின்னர் அந்த புகாரை வைஷு திரும்பப் பெற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியானது. அதனால் இந்த விவகாரம் அப்போது அமைதியாகி விட்டது என்று பலர் நினைத்தனர்.
மீண்டும் வைஷு போட்ட பதிவு
இந்த நிலையில் நேற்று வைஷு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாஞ்சில் விஜயனை குறிவைத்து ஒரு பதிவை வெளியிட்டார். அந்த பதிவில் நாஞ்சில் விஜயனுடன் எடுத்திருந்த ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.
அந்த பதிவில், "நீங்கள் நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேசுகிறீர்கள். ஆனால் என்னுடைய மனநிலையை மட்டும் புரிந்து கொள்ளாமல் என்னை புறக்கணித்துவிட்டீர்கள்" என்ற வகையில் குறிப்பிட்டிருந்தார்.
அதோடு, நாஞ்சில் விஜயனும் வைஷுவும் சேர்ந்து நடித்த ஒரு ரீல்ஸ் வீடியோவையும் அவர் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் இருவரும் சேதுபதி படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு ரீல்ஸ் எடுத்திருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பேசப்பட்டது.
இதற்கு முன் நாஞ்சில் விஜயன் பேசிய வீடியோ
இதற்கு முன்பு நாஞ்சில் விஜயன் நடிகர் விஜய் குறித்து ஒரு வீடியோவில் பேசியிருந்தார். அதில் அவர், "விஜய்யும் திரிஷாவும் நல்ல நண்பர்களாக இருக்கலாம். அவர்கள் பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். அதனால் ஒரு நிகழ்ச்சிக்கு சேர்ந்து சென்றிருக்கலாம்.
அதை நாம் தேவையில்லாமல் பெரிதுபடுத்தி பேச வேண்டாம். ஒருவேளை அவர்கள் திருமணம் செய்துகொண்டாலும் கூட அவர்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். அதை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி பரவிய நிலையில், அதற்குப் பிறகே வைஷு அந்த பதிவை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
நாஞ்சில் விஜயன் வெளியிட்ட ஆதாரம்
இதற்கு பதிலாக நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார். "வைஷுவின் மாஸ்டர் பிளான்" என்ற தலைப்பில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் வைஷு பேசும் ஆடியோவும் இடம்பெற்றுள்ளது. அதில், "நான் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றபோது வழக்கறிஞர் பிரபு என்னிடம் சில விஷயங்கள் சொன்னார். நீயும் ஒரு நடிகை, அவரும் ஒரு நடிகர். 'காதலித்து ஏமாற்றிவிட்டார்' என்று சொன்னால் போலீசார் அந்த வழக்கை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் அவர் என்னை ஏமாற்றினார், எனக்கு பணம் தர வேண்டும் என்று சொல்லுங்கள் என்று கூறினார். அதனால் தான் நான் அப்படி பேட்டி கொடுத்தேன்" என்று வைஷு பேசுவதாக அந்த ஆடியோவில் கேட்கப்படுகிறது.
மேலும் வெளியான தகவல்கள்
அதே ஆடியோவில், "ஜாய் கிரிஸ்டில்லா என்பவரும் அந்த வழக்கறிஞரிடம் தான் தனது வழக்கை ஒப்படைத்தார். அவர்மூலமாகவே சில அரசியல் தலைவர்களை சந்தித்தார்கள்" போன்ற தகவல்களையும் வைஷு கூறுவதாக அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
நாஞ்சில் விஜயன் கடும் குற்றச்சாட்டு
இந்த வீடியோவை வெளியிட்ட நாஞ்சில் விஜயன், தனது பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார். "இப்போது புரிகிறதா இவருடைய உண்மையான முகம் என்னவென்று? புகழ் பெற வேண்டும் என்பதற்காக மற்றவர்களின் குடும்பத்தை கூட கவலைப்படாமல் இப்படி பிரச்சனையை உருவாக்குகிறார்கள்.
இவரைப் போன்றவர்களை திருநங்கை சமூகத்திலேயே உள்ளவர்கள் கண்டிக்க வேண்டும். அவர்களுடைய கைகளிலேயே இவரை ஒப்படைக்கிறேன். இதுபோன்றவர்களுக்கு மீண்டும் மீண்டும் மேடையை கொடுத்து பேட்டி எடுப்பதை ஊடகங்களும் தவிர்க்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மீண்டும் பரபரப்பு
இவ்வாறு நாஞ்சில் விஜயன் வெளியிட்ட ஆடியோ ஆதாரம் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. ஒருபுறம் சிலர் நாஞ்சில் விஜயனுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். மறுபுறம் வைஷுவை ஆதரிக்கும் சிலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதனால் சில மாதங்களுக்கு முன்பு அமைதியாகி விட்டதாக நினைக்கப்பட்ட நாஞ்சில் விஜயன் - வைஷு விவகாரம் தற்போது மீண்டும் புதிய சர்ச்சையாக மாறியுள்ளது.
-
திருத்தணி தவெக நிர்வாகியின் அலப்பறை.. தனித்து விடப்பட்டதற்கு காரணம் இதுதான்! புலம்பும் நிர்வாகிகள் -
பெரம்பூரில் மூடிக் கிடக்கும் விஜய் தேர்தல் அலுவலகம்.. இவ்வளவுதான் தவெக தேர்தல் ஏற்பாடு! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
Vijay Affidavit: குடும்பத்திற்கே கடன் கொடுத்த ஒருவரை பார்த்ததே இல்லை! விஜய் மீது முத்தரசன் தாக்கு! -
விஜயை எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது! சின்ன வயசுல இருந்தே எனக்கு தெரியும்.. ஒய் ஜி மகேந்திரன் ஓபன் -
ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு? -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சிறகடிக்க ஆசை: மீனாவை ஜெயிக்க சிந்தாமணி போட்ட பிளான்.. ஆப்பு வைக்கும் ஸ்ருதி! குடும்பமே மாறிட்டாங்க! சூப்பர் சீன் -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்? -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை!












Click it and Unblock the Notifications