மொக்கையான பாத்ரூம் ஜோக் சொன்ன அபிஷேக்...கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: பலபேர் பார்த்துக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோவில் இப்படியா பேசுவார்கள் என்று அபிஷேகை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video
ஜாலியாக பேசுகிறோம் என்பதற்காக என்ன வேணாலும் பேசலாமா என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கமெண்டுகளால் அர்ச்சனை செய்து வருகிறார்கள்.
பிரியங்காவை எப்போதுமே வம்பு இழுத்துக் கொண்டிருக்கும் அபிஷேக் இந்த முறை பேசி இருப்பது தான் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

அதிகமான பெண் போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் பல சுவாரஸ்யங்களும், மொக்கையான நிகழ்ச்சிகளும், நடைபெற்று கொண்டிருந்தாலும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் அறிமுகம் ஆகி இருக்கின்றனர். அதில் அதிகமான பெண் போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் ஒரு ஆண் போட்டியாளர் சக போட்டியாளரை பார்த்துப் பேசியது தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

என்டர்டைன்மென்ட் இருக்கு
பிரியங்காவை அனைவருக்குமே தெரியும், இவர் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக பல நிகழ்ச்சிகளில் தன்னுடைய படபடப்பான பேச்சாளும், காமெடியாலும் தன்னுடைய ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தொகுப்பாளர்கள் என்று சொன்னதும் நினைவுக்கு வரும் ஒரு சிலரில் வரும் ஒருவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் இந்த சீசனில் கலந்து கொள்வார் என்று ஆரம்பத்திலிருந்தே இவருடைய பெயர் அடிபட்டு வந்த நிலையில் இவர் முதலில் இதனை மறுத்திருந்தார். ஆதனால் முதல் நாள் இவர் அறிமுகமாகும் போது பல ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தான் இருந்தது. இருந்தாலும் நிகழ்ச்சியில் இவருடைய பங்களிப்பு என்டர்டைன்மென்ட் ஆக இருக்கிறது என்று கூறிவந்தனர்.

என்ன ஒரு சந்தேகம்
தன்னைப்பற்றி கலாய்த்தாலும் கண்டுகொள்ளாத இவருடைய கேரக்டரை ரசிகர்கள் பலருக்கும் பிடிக்கும். அடுத்தவர்களையும் இவர் விட்டு வைக்காமல் கலாய்த்து பாடாய் படுத்தி எடுத்துவிடுவார். அதுபோல நேற்றைய எபிசோடில் கூட அந்த மாதிரி தான் இவர் டிவி சீரியல்களில் வருவது போன்று இன்று நாம் அனைவரும் பேசுவோம் என்று சக போட்டியாளர்கள் இடம் கூறிக் கொண்டிருந்தார். அப்போது தானே ஆரம்பிப்பதாக தேங்காய் எண்ணெய் ஊற்றி ஆம்லெட் போடலாமா என்று சந்தேகம் கேட்டுக்கண்டிருந்தார். அதை அவருக்கே உரிய நக்கல் தனத்தோடு இவர் பேசிக்கொண்டிருந்ததை போட்டியாளர்களும் ரசிகர்களும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்
அப்போது இமான் அண்ணாச்சி இவரிடம் இவரைப்போலவே எக்ஸ்பிரஷன் காட்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி ஆம்லெட் போட வேண்டாம், விளக்கெண்ணெய் ஊற்றி ஆம்லெட் போடுமா என்று கூறி கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறார். இவரிடம் பேசிக்கொண்டே ஜாலியாக அர்ச்சனா ரூமுக்குள் செல்கிறேன் என்று பாத்ரூம் வாசலில் போய் விடுகிறார். அதை பார்த்த சக போட்டியாளர்கள் எங்கே போகிறீர்கள் என்று கலாய்த்து கொண்டிருக்கும்போது, அபிஷேக் நீங்க அங்க போய்....ஆம்லெட் போட்டாலும் சரி, ஆப்பாயில் போட்டாலும் சரி, தண்ணி ஊத்திட்டு வாங்க என்று கலாய்த்திருக்கிறார். இந்த எபிசோடு தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் முகச்சுளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications