பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் இனி நடக்கபோவதே வேற.. பாண்டியன் கனவு ஸ்வாகா! அடுத்த வில்லி இவரா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத மாதிரி இனி கதை பயணிக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி
இந்த சீரியலில் நடிக்கும் எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்த சீரியல் தொடங்கப்படும் போது முதலில் கமிட் ஆனது ராஜியாக நடிக்கும் ஷாலினி தான். இவரை ஏற்கனவே கதாநாயகி நிகழ்ச்சியில் பார்த்திருப்போம். அந்த நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெற்றதும் அவருக்கு விஜய் டிவியில் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லி இருந்தனர்.

ராஜி, கதிர் ஜோடி
அதேபோல பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முக்கிய கேரக்டரில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முதல் பாகத்தில் கதிர் முல்லைக்கு எப்படி ரசிகர்கள் இருந்தார்களோ அதே போல இரண்டாவது பாகத்தில் ராஜி கதிருக்கும் ரசிகர்கள் உருவாகிய தொடங்கிவிட்டனர். இது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
இப்போது இந்த சீரியலில் ராஜியை எப்படியாவது ஐபிஎஸ் அதிகாரியாக ஆக்க வேண்டும் என்று கதிர் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார். ஆனால் இப்போ கதை பயணிக்கும் விதமே வேற மாதிரி இருக்கிறது. ஐபிஎஸ் கோச்சிங்காக சென்னைக்கு போன இடத்தில் கதிரும் ராஜியும் ஒரே ரொமான்ஸ் மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள்.

குமார் உடைத்த ரகசியம்
இதை வைத்துதான் இப்போது இந்த சீரியலில் குமாராக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஒரு பேட்டியில் சில விஷயங்களை உடைத்திருக்கிறார். அதாவது இனி ராஜி ஐபிஎஸ் அதிகாரி எல்லாம் ஆகப்போறது இல்லை.. இனி அவள் கர்ப்பமாக இருப்பது போல தான் காட்சி வரப் போகிறது, அதை மீறியும் அவள் ஐபிஎஸ் அதிகாரி ஆகணும்னு நினைச்சா நானும் எங்க அப்பாவும் அதை தடுத்து நிறுத்திடுவோம் என்று சொல்லி இருக்கிறார்.
விஜய் டிவி சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீனுக்கு கிடைத்த பெரிய விருது! இது ரெக்கார்டு.. குவியும் வாழ்த்து
ஏற்கனவே ராஜி குடும்பத்தினர் பாண்டியனை அசிங்கப்படுத்தி இருந்தனர். அப்போது ராஜியின் கனவுகளுக்கு தான் துணை நிற்பதாக பாண்டியனும் சொல்லி இருந்தார். ராஜி இப்போது ஐபிஎஸ் ஆவதற்காக சென்னைக்கு போவதற்கு பாண்டியனும் சம்மதம் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் இப்போது மொத்த குடும்பத்தின் கனவுகளும் உடைய போகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையில் மாற்றம்
ஆனால் சரவணன் குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் இருக்கும்போது இப்போது கதிருக்கு முதலில் குழந்தை பிறப்பதும் சீரியலை இன்னொரு இடத்தில் கொண்டு போக வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க சரவணனுக்கும் மயிலுக்கும் இப்போது டைவர்ஸ்காக பிரச்சனை போய்க்கொண்டிருக்கும் நிலைமையில் சரவணனின் முன்னாள் காதலியை களம் இறங்கி இருக்கிறார்கள். இதனால் மயில் உடைய வாழ்க்கை இனி என்ன ஆகும் என்பது பலருடைய கேள்வி.
பாண்டியன் ஸ்டோர்ஸ்: கதிர் வாழ்க்கையில் மீண்டும் வந்த முன்னாள் காதலி! மீனாக்கு வந்த போன்.. பாவம் கோமதி
மயில் என்ன தான் பொய் சொன்னாலும் அவள் தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்வதற்காக தானே சொன்னாள் என்று பலர் அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். இப்படி இருக்கும்போது சரவணனுக்கு இன்னொரு ஜோடி வருவதால் சீக்கிரத்தில் சரவணனுக்கு அஞ்சலிக்கும் கல்யாணத்தை பண்ணி வைத்து அவர்தான் இனி இந்த குடும்பத்தில் வில்லியாக வரப்பகிறாரா? என்ற கேள்விகளும் வருகிறது. எது எப்படியோ இனி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications