நேரடியாக ஓடிடியில் வெளியாகும் வெற்றிமாறன் திரைப்படம்.. தீபாவளிக்கு டபுள் ட்ரீட் இருக்காமே.!!?
சென்னை: நடிகர் சூர்யாவை வைத்து ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வாடிவாசல் படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்ததாக அதே ஜல்லிக்கட்டை வைத்து 'பேட்டை காளி' என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளார்.
வெற்றிமாறன் தயாரிக்கும் இந்த படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாய் இருக்கும் இந்த படம் தீபாவளி அன்று ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிப்பு வந்துள்ளது.

இயக்குனராக வெற்றிமாறன்
பொல்லாதவன் படத்தில் இயக்குனராக அறிமுகமாகி ஆடுகளம்,வடசென்னை,அசுரன் போன்ற தேசிய விருது பெற்ற படங்களை இயக்கி தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் வெற்றிமாறன். நாவல்களையும், மனிதர்களின் வாழ்வியல்களையும் படமாக்குவதில் வெற்றிமாறன் தனித்திறமை படைத்தவர். தற்பொழுது காமெடி நடிகர் சூரியை கதையின் நாயகனாக வைத்து விடுதலை படத்தை முடித்துள்ள வெற்றிமாறன் அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவ்வப்போது தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தரமான படங்களையும் தயாரித்து வருகிறார்.

மீண்டும் அதே இயக்குனருக்கு வாய்ப்பு
விஜய் சேதுபதி மற்றும் சூரியை வைத்து இயக்கும் விடுதலை படத்தை தனது சொந்தத் தயாரிப்பில் தயாரித்து இயக்கி வரும் வெற்றிமாறன் உதயம் ,விசாரணை, காக்கா முட்டை போன்ற வேறு சில இயக்குனர்கள் இயக்கும் படங்களையும் தயாரித்திருக்கிறார். அண்ணனுக்கு ஜெய் திரைப்படத்தில் தாம் இயக்குனராக அறிமுகப்படுத்திய ல.ராஜ்குமாருக்கு பேட்டை காளி படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன்
இசை ஒளிப்பதிவு முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் சந்தோஷ் நாராயணன் இசை மேற்பார்வையில் உருவாக உள்ள இந்த படத்திற்கு பொல்லாதவன் துவங்கி அசுரன் வரை தான் இயக்கிய அத்தனை படங்களுக்கும், தயாரிக்கும் பெரும்பான்மை படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆர்.வேல்ராஜை ஒளிப்பதிவாளராக களம் இறக்குகிறார் வெற்றிமாறன்.

ஜாம்பவான்கள் கூட்டணி
வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்- முன்னணி இசையமைப்பாளர் ஆன சந்தோஷ் நாராயணன் இசை மேற்பார்வை- இயக்குவது மட்டுமின்றி தான் தயாரிக்கும் படங்களையும் தரமானதாக தயாரிக்கும் வெற்றிமாறன், இவர்கள் மூவர் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு துவங்கியுள்ளது.ஏற்கனவே சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்கி வரும் வாடிவாசல் திரைப்படமும் ஜல்லிக்கட்டு மையப்படுத்திய கதைதான், இப்பொழுது வெற்றிமாறன் தயாரிக்கும் பேட்டைக்காளி படமும் ஜல்லிக்கட்டு பற்றிய கதை என்பதால் ஜல்லிக்கட்டு ரசிகர்களுக்கு இது நிச்சயம் டபுள் ட்ரீட் ஆக இருக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications