பார்க்கும்போதே பத்திக்க போகுது...லாஸ்லியாவின் ஸ்லீவ்லெஸ் புடவையில் லாஸான ரசிகர்கள்
சென்னை : மாடர்ன் உடையில் தான் கவர்ச்சி காட்ட முடியும் என்று இல்லை புடவையில் வந்தாலும் லாஸ்லியாவை போல வந்தாலே போதும் என ரசிகர்கள் குதூகலிக்கின்றனர்.
லாவண்டர் புடவையில் பூத்துக்குலுங்கும் லாஸ்லியாவின் அழகை பார்த்து பல பேர் தூக்கத்தை தொலைத்து விட்டார்களாம்.
அடக்கமாக இவர் காட்டும் அழகை பார்த்து அசந்து போன ரசிகர்கள் கமெண்ட்களில் ஹார்ட்டின்களை பறக்க விடுகிறார்கள்.

கலரு சும்மா தூக்குது
பார்த்து பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்காக புடவையில் தாராள மனதை காட்டியிருக்கும் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள்தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் வருகிறது. இவருடைய இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் பலர் விதவிதமாக வர்ணித்து வருகிறார்கள். இப்படியே போய்க் கொண்டிருந்தால் வெள்ளித்திரையிலும் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்பதை இவருடைய ரசிகர்கள் இப்போது நிரூபித்து வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் எப்போது வெள்ளித்திரையில் வருவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு தொடர்ந்து இவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களைப் பார்க்கும்போது ஆறுதலாக இருந்தாலும், இவர் நடித்து இன்னும் திரைப்படங்கள் வெளியாகவில்லை என்று கொஞ்சம் வருத்தத்தில் தான் இருக்கின்றனர்.

பிக்பாஸில் கலக்கல்
விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் புதுசு புதுசாக களமிறங்கி கொண்டிருக்கின்றது அதில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது. ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்கு முன்பு வரைக்கும் அதிகமாக கலாய்த்து வருவார்கள். ஆனால் நிகழ்ச்சி தொடங்கியதும் அந்த நிகழ்ச்சியை பற்றியே பேச தொடங்கி விடுவார்கள். இது கடந்த நான்கு சீசன்களிலும் அனைவரும் பார்த்துக் கொண்டு வருவதுதான். இதுவரைக்கும் நான்கு சீசன்கள் முடிவடைந்து இருந்தாலும் அதில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு சிலர்தான் ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்து விடுகிறார்கள். அந்த மாதிரி தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருப்பதில் லாஸ்ஸியாவும் ஒருவர்.

சிலிர்ப்பூட்டும் குறும்புகள்
பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியாவுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்தது போலவே இரண்டாவது சீசனில் அனைவருமே லாஸ்லியாவின் பெயரைத்தான் உச்சரித்துக் கொண்டிருந்தனர். இவர் செய்யும் சின்ன சின்ன குறும்புகள் பலருடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் களாக மாறிவிட்டது. அதுமட்டுமில்லாமல் மீம்ஸ் கிரியேட்டர்களின் பேராதரவோடு இவர் தினமும் சமூக வலைதளத்தை கலக்கிக் கொண்டிருந்தார். அவருடைய புகைப்படத்திற்கு லைக்களும், கமெண்ட்களும் குவித்து கொண்டிருந்தது. இவர் எந்த சீனில் வந்தாலும் அதற்கு ரசிகர்கள் இடத்தில் கைதட்டல்களும் ஆரவாரமும் இருந்து கொண்டிருந்தது. அந்த அளவிற்கு தன்னுடைய க்யூட்டான அழகினால் இவர் அனைவரையும வசியப்படுத்தி விட்டார். அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் இவர் இருக்கும் போது இவருக்கும் கவினுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் கிளம்பியது. இதனால் கவினின் ரசிகர்களும் இவருக்கு பெரும் ஆதரவு கொடுத்து வந்தனர்.

நடிப்பு முக்கியம் பிகிலு
ரசிகர்களின் அரவணைப்போடு இவருடைய புகழ் நாளுக்கு நாள் வளர்த்துவிட்டது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் சீக்கிரத்தில் வெள்ளித்திரையில் கலக்கி விடுவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கவினும் இவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இருவருமே பிரிந்துவிட்டனர். இவர் தற்போது ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள பிரண்ட்ஷிப் என்கிற படத்திலும் தர்ஷன் உடன் கூகுள் குட்டப்பன் படத்திலும் நடித்து வருகிறார்.

புடவையில் புது தரிசனம்
அதுமட்டுமல்லாமல் இன்னமும் அதிகமான திரைப்படங்களில் வாய்ப்பு வருவதற்காக ஒரு சில நேரங்களில் இவர் கவர்ச்சி களையும் அள்ளித் தெளிக்க துவங்கிவிட்டார். இவர் சினிமாக்களில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் பிசியாக இருக்கிறார். அதுவும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி போஸ்ட் போட்டு வருகிறார். மாடர்ன் உடைகளில் அடிக்கடி வந்து கொண்டிருந்த இவர் தற்போது, லாவண்டர் கலர் புடவையில அடக்க ஒடுக்கமாக கவர்ச்சியை அள்ளி காட்டி ஒரு சில போட்டோக்களை போஸ்ட் போட்டிருக்கிறார். இந்த போட்டோக்களை பார்த்ததும் சொக்கிப் போன ரசிகர்கள் ஹாட்டின்களை பறக்க விடுகிறார்கள். ரசிகர்களின் ஆதரவு இவருக்கு மீண்டும் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்து விட்டது. இனி இவரை கையில் பிடிக்க முடியாது போலயே!!...












Click it and Unblock the Notifications