ஒரு பக்கமாக காற்று வாங்க...தலையை சாய்த்து ரசிக்கும் கேப்ரில்லா
சென்னை: அடிக்கிற வெயிலுக்கு இதமாக மாடர்ன் உடையில் காற்று வாங்கும் கேப்ரில்லாவின் போட்டோவை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.
கலக்கலாக சிந்தும் அந்த புன்சிரிப்பில் இருக்கும் அர்த்தங்களை புரிந்துகொள்ள முடியாமல் ரசிகர்கள் தவிக்கிறார்கள்.
பொன் நகைகளே வேண்டாம் இந்த புன்னகையே போதுமே என்று கேப்ரில்லாவை பார்த்து ரசிகர்கள் இன்ஸ்டாகிராமை சுற்றி சுற்றி வருகின்றனர்.

அங்கே காற்று வாங்குது
எத்தனை நாளைக்கு தான் போட்டோ சூட் என்றால் மேக்கப்போடு வலம் வருவது என்று முடிவெடுத்து விட்டார் போல, மேக்கப் எதுவும் இல்லாமலே இவரை சிம்பிளாக ரசிகர்கள் பார்த்ததும் சிலிர்த்து விடும் வகையில் ஒரு சில போட்டோக்களை எடுத்திருக்கிறார். இவருடைய போட்டோவை பார்த்த ரசிகர்கள் அசந்து போய் விட்டார்கள். அடடா என்ன அழகு என்று ஆர்ப்பரிக்க தொடங்கிவிட்டார்கள். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது கொஞ்சம் புசுபுசுவென மாறிவிட்டார். ஆனால் தற்போது சிக்கென்று இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த எக்ஸ்ட்ரா அழகு எங்கே போகிறது என்று வம்பு இழுத்து வருகின்றனர். ரசிகர்களின் கேள்வியை பார்க்கும்போது இது கேப்ரில்லா செல்லும் இடத்தை தெரிந்து கொள்வதற்காகவா அல்லது தானும் துணைக்கு போகவா என்று தெரியவில்லை, ஆனாலும் கேள்விகள் மட்டும் விதவிதமாக கேட்டு வருகிறார்கள்.

அடடா என்ன அழகு
விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கும் கேப்ரில்லா குழந்தை நட்சத்திரமாக விஜய் டிவியில் அறிமுகமானார். அதுவும் தன்னுடைய ஒன்பதாவது வயதில் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அப்போதே தன்னுடைய திறமையை காட்டிவிட்டார். நடிப்பில் மட்டுமல்ல தான் டான்ஸிலும் கெட்டிக்காரி என்பதை ரசிகர்களுக்கு புரிய வைத்து இருக்கிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c' பிரிவு என்னும் சீரியலில் நடித்திருந்தாலும், அதற்குப் பிறகு வெள்ளித்திரையிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். இப்போது குமரியாக மாறி விட்டாலும் மீண்டும் டான்ஸ் நிகழ்ச்சிக்கு நானும் வருகிறேன் என்று வந்து இறங்கியிருக்கிறார்.

கன்னக்குழியில் ஆயிரம் கவிதைகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் டான்ஸ் ஜோடிகள் நிகழ்ச்சிகள் கேப்ரில்லாவும், ஆஜித்தும் ஜோடியாக பட்டையை கிளப்பி வருகிறார்கள். இவர்களுடைய டான்ஸை பார்த்து ரசிகர்கள் பலர் மெய்மறந்து தங்களை அறியாமலேயே கைகளைத்தட்டி இருக்கிறார்கள். ரசிகர்கள் மட்டுமல்லாமல் நடுவர்களையும் இவர்கள் அசத்தி விட்டார்கள். ஒவ்வொரு வாரமும் இவர்களுடைய பெர்பாமன்ஸ் வேற லெவலில் இருந்து வருகிறது. எப்படி இவருக்கு சின்னத்திரையில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது அதை விடவும் சமூக வலைத்தளத்திலும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவருக்கு நடனம், நடிப்பு என்று பல முகம் இருந்தாலும் மாடலிலும் கலக்கி வருகிறார். மாடலிங் போட்டோ ஷூட்டில் அடிக்கடி வித்தியாசங்களை செய்து வருவது இவருடைய பழக்கம்தான். அந்த மாதிரி தான் எடுக்கும் போட்டோசூட் போட்டோக்களை கூட தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்டு வருகிறார்.

திறமையை மட்டும் பாருங்க
பாவாடை தாவணி முதல் மாடர்ன் உடை வரை பல உடைகளில் இவர் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டிருந்தார். இவர் வெளியிடும் போட்டோக்களுக்கும் சலிக்காமல் இவருடைய ரசிகர்கள் ஒவ்வொரு போட்டோவுக்கும் லைக்களும் அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இவர் எந்த ஒரு மேக்கப் போடாமல் மாடர்ன் உடையில் சும்மா கேஷுவலாக ஒரு சில போட்டோக்களை எடுத்திருக்கிறார். இந்த போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட அசந்து போன ரசிகர்கள் லைக் பட்டனை தெறிக்க விட்டு வருகிறார்கள். ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவருடைய நண்பர்களும் கமெண்ட்களில் கலாய்த்து வருகின்றனர். அதில் ஆஜித் ஒரு கமெண்ட் போட்டிருக்கிறார். அதற்கு தொடர்ந்து ரசிகர்கள் பலர் கமெண்டுகளை போட்டு வருகின்றனர். அதில் ஒருசில நெட்டிசன்கள் டபுள் மீனிங்க்கில் கமெண்டுகளை போட்டு இருக்கின்றனர். இதற்கு கேப்ரில்லா பதில் அளிக்கவில்லை என்றாலும் கேப்ரில்லாவின் ரசிகர்கள் அங்கே ஒரு போரை நடத்தி வருகிறார்கள். எப்படியோ இந்த மாதிரி போஸ் கொடுத்து போட்டோ வெளியீட்டு சமூக வலைதளத்தை பரபரக்க வைத்துவிட்டார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications