ராஜமாதாவுக்கு சின்னத்திரையின் சித்தி சொன்ன சூப்பர் வாழ்த்து... இதை எதிர்பார்க்கலையாம் ரசிகர்கள்
சென்னை:சக நடிகையும் தோழியுமான ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி ராதிகா சரத்குமார் ட்டுவிட் செய்துள்ளார்.
அதை தொடர்ந்து பல சினிமா பிரபலங்களும், டிவி சேனல்களும் ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
நீலாம்பரியாக தமிழ் ரசிகர்களிடமும், ராஜமாதாவாக இந்திய ரசிகர்கள் மனதில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் மேலும் பல உயரங்களை காண ராதிகாவுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

எவர்கிரீன் நடிகை
80ஸ் கிட்ஸ் 90ஸ் கிட்ஸ் மற்றும் 2k கிட்ஸ் வரை தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் பலதரப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் மறைந்த பிரபல காமெடி நடிகரும் அரசியல் விமர்சிகரமான சோவின் மருமகளாவார்.பரதநாட்டியம், குச்சிப்புடி, வெஸ்டர்ன், போன்ற நடனங்களை முறைப்படி கற்று கைதேர்ந்தவர் ரம்யா கிருஷ்ணன். பல மேடைகளில் பர்பாமன்ஸும் செய்திருக்கிறார். தன்னை வைத்து படம் இயக்கிய இயக்குனர் கிருஷ்ணா வம்சியையே திருமணம் செய்து கொண்டார்.தனது திரை பயணத்தை மலையாளத் திரை உலகில் தான் துவங்கினார். ஆனால் அதற்கு முன்பே தமிழில் ஒய்.ஜி. மகேந்திரன் உடன் இணைந்து நடித்த வெள்ள மனசு திரைப்படம் ரிலீஸ் ஆகிவிட்டதால் அதுவே ரம்யா கிருஷ்ணன் அறிமுக படமாக இருந்து வருகிறது. தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி திரைப்படங்களிலும் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

தெலுங்கு ரசிகர்களின் ஆதரவு
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பெரிதளவிற்கு தன் திறமையை காட்டுவதற்கு வாய்ப்பில்லாமல், ரஜினிகாந்தின் படிக்காதவன், கமலஹாசனின் பேர் சொல்லும் பிள்ளை போன்று ஒரு சில படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்தார். நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மற்றும் புதுமுக நடிகர்களுடன் கதாநாயகியாகவும் நடித்து வந்தார். இப்படங்கள் தமிழ் திரையுலகில் ரம்யா கிருஷ்ணன் சோபிப்பதற்கு உதவவில்லை. தெலுங்கு மற்றும் கன்னட திரை உலகில் ஓரளவு வாய்ப்புகளை பெற்று அதை நன்கு பயன்படுத்திக் கொண்டு அங்கு முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார். தமிழ் சினிமா பக்கம் நான்கு வருடங்களுக்கு தலை காட்ட முடியாதபடி தெலுங்கில் பிஸியாக நடித்து வந்தார்.

வயசு ஏற ஏற ஏறிய மவுசு
பொதுவாக சினிமா துறையில் கதாநாயகிகளுக்கு வயது ஏற ஏறத்தான் மவுசு குறையும். ஆனால் ரம்யா கிருஷ்ணன் விஷயத்தில் அது தலைகீழாக நடந்தது. ரம்யா கிருஷ்ணனின் வயது கூட கூடத்தான் அவருக்கான கிரேஸ் கூடியது. அதை பயன்படுத்திக் கொண்ட ரம்யா கிருஷ்ணன் சின்னத்திரை வெள்ளித்திரை என்று தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.தங்க வேட்டை நிகழ்ச்சி மூலம் நிகழ்ச்சி தொகுப்பில் பூகுந்த ரம்யா கிருஷ்ணன் இன்று வரை விஜய் டிவியின் டான்ஸ் நிகழ்ச்சி நடுவராக இருக்கும் அளவிற்கு தன்னுடைய லெவலை குறையாமல் பார்த்துக் கொண்டார்.

தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து
சில வருடங்களுக்கு முன்பு ரம்யா கிருஷ்ணன் என்ற பெயரையே தமிழ் சினிமா மறக்கும் லெவலுக்கு வந்த நிலையில், திடீரென பஞ்சதந்திரம் படத்தில் மேகி கேரக்டரில் புகுந்து விளையாடி என்றும் மாறாத இளமையால் தன் பெயரை அன்றைய இளைஞர்கள் மனதில் ஆழப் பதித்து விட்டார். படையப்பா படத்தில் வில்லி கேரக்டரில் நடித்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு சமமாக அவரது கேரக்டர் பேசப்பட்டது. தற்போது உலகமெங்கும் ரிலீஸ் ஆன பாகுபலி படங்கள் மூலம் என்றும் நிற்கும் ராஜமாதாவாக சினிமா ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறார். நடிகை ராதிகா சரத்குமாரும் ரம்யா கிருஷ்ணன் சமகால நடிகைகள் மட்டும் இன்றி நெருங்கிய தோழிகளும் கூட, அவர்கள் காலத்து நடிகைகளில் இன்றும் புகழோடு நடித்துக் கொண்டிருக்கிற நடிகைகள் பெரும்பாலும் இவர்கள் இருவராகத்தான் இருக்க முடியும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications