ட்ரெய்னிங் சென்ற சந்தியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த சிவகாமி..மீண்டும் முதலில் இருந்தா? ராஜா ராணி 2

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சிவகாமி மீண்டும் சந்தியாவிடம் சத்தியம் வாங்கி இருக்கிறார்.

சந்தியாவின் ஐபிஎஸ் கனவு நிறைவேற வேண்டும் என்றால் சிவகாமி சொல்வதை செய்தால் தான் முடியும் என்று கராறாக பேசியிருக்கிறார்.

சிவகாமியின் சத்தியத்தை நினைத்து சந்தியா அதிர்ச்சி அடைந்தாலும் இனி எடுக்கப் போகும் முடிவிற்காகத்தான் ரசிகர்கள் வெயிட்டிங்.

சரவணன் கொடுத்த ஆறுதல்

சரவணன் கொடுத்த ஆறுதல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் இன்றைய எபிசோட்டில், சத்தியா தன்னுடைய மேலதிகாரியிடம் நேற்றைய எபிசோட்டில் சிவகாமி பேசியதை நினைத்து வருத்தமாக இருக்கிறார். சந்தியாவை சரவணன் சமாதனம் செய்கிறார். ஆனாலும் நான் இனி உங்களை விட்டுட்டு எப்படி இருக்க போறேன்னு தெரியலையே என்று சந்தியா சரவணனிடம் வருத்தப்பட்டு புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது சரவணன் சந்தியாவும் சரவணனும் சேர்ந்து இருக்கும் போட்டோ ஒன்றை கண்ணாடியில் வைத்து விட்டு நான் எப்போதும் போட்டோவாக உங்களுடன் தான் இருப்பேன் என்று சொல்கிறார்.

சிவகாமியின் கவலை

சிவகாமியின் கவலை

அதே நேரத்தில் சிவகாமி தன்னுடைய கணவருடன் கோவிலுக்கு சென்று இருக்கிறார். அப்போது சிவகாமி வருத்தமாக இருக்கிறார். அதற்கு சிவகாமியின் கணவரான ரவி ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு சிவகாமி சந்தியா வேற ஊரில் போஸ்டிங் போட்டால் என்ன செய்வது என வருத்தமாக இருக்கிறது என கூறியிருக்கிறார். அதற்கு ரவி சந்தியா நினைச்ச மாதிரி அவ ஐபிஎஸ் பயிற்சிக்கு வந்திருக்கா, அதே போல அர்ச்சனாவுக்கு அவ ஆசைப்பட்ட மாதிரி ஆண் குழந்தை பிறந்து இருக்கு இப்படி எல்லாமே நல்ல விஷயமாக நடக்கும் போது நீ ஏன் இப்படி புலம்பிக்கிட்டு இருக்கா என கூறுகிறார்.

அப்துல் கூறிய விளக்கம்

அப்துல் கூறிய விளக்கம்

கணவரின் சமாதானத்தால் ஓரளவு மனதிருப்தி அடைந்த சிவகாமி கோயிலில் இருந்து கிளம்பி பயிற்சி மையத்திற்கு வருகிறார். அங்கே அப்துல் தன்னுடைய அம்மாவிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். அருகில் ஒரு கோப்பை இருக்கிறது ..அதை குறித்து அப்துல் தன்னுடைய அம்மாவிடம் இந்த கோப்பை யார் இந்த பயிற்சியில் சிறந்து விளங்குகிறாரோ அவர்களுக்கு வழங்கப்படும். அதோடு அவர்களின் சொந்த ஊரிலேயே அவங்களுக்கு போஸ்டிங் கொடுப்பாங்க என சொல்லிக்கொண்டு இருக்கிறார். உடனே அப்துல் அம்மா நீ இந்த கோப்பையை கண்டிப்பாக ஜெயிக்கணும். அப்போதான் நீ எப்பவும் என் கூடவே இருக்க முடியும் என்று கூறுகிறார். இவர்கள் பேசுவதை சிவகாமி கேட்டு விடுகிறார்.

மீண்டும் சத்தியம்

மீண்டும் சத்தியம்

உடனே சிவகாமி நம்ம சந்தியா கூடவே இருக்க ஒரு வழி இருக்கு. அதுக்கு அவ கோப்பையை ஜெயிக்கணும் என சொல்லுகிறார். அதற்கு ரவி அதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை என்று சொல்லி முடிப்பதற்குள் இல்லை இதைப் பற்றி நான் சந்தியா கிட்ட பேச போறேன் என்று வேகமாக ரூமுக்கு ஓடி சென்று சந்தியாவை கூட்டிக்கொண்டு வருகிறார். இந்த கோப்பை எதுக்குன்னு உனக்கு தெரியுமா ?என சந்தியாவிடம் கேட்க, அவரும் அதற்கு தெரியும், இந்த பயிற்சியில் சிறந்து விளங்குபவர்களுக்கு கொடுக்கப்படும் பரிசு என்று கூறுகிறார். இந்த கோப்பையை நீ கண்டிப்பாக ஜெயிக்கணும் என சிவகாமி சந்தியாவிடம் கேட்கிறார். அது மட்டுமில்லாமல் இந்த கோப்பையை ஜெயிக்கிறவங்களுக்கு சொந்த ஊரில் போஸ்டிங் கொடுப்பாங்கன்னு எனக்கு தெரியும். உன்னை வேறு எங்கேயும் அனுப்ப மாட்டேன். நீ சொந்த ஊரில் போஸ்டிங் வாங்கியே ஆக வேண்டும். உன்னோட ஐபிஎஸ் கனவு முழுமையாக நிறைவேற வேண்டுமானால் இந்த கோப்பையை ஜெயித்து தான் ஆக வேண்டும் என்று கூறுகிறார். நீ இந்த கோப்பையை ஜெயிப்பேன் என்று எனக்கு சத்தியம் பண்ணி கொடு என்று சிவகாமி சந்தியாவிடம் கேட்கிறார். இதனால் சந்தியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோடு முடிந்திருக்கின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+