ரோஜா சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு..மகிழ்ச்சியில் ரசிகர்கள்..என்ன குழந்தை தெரியுமா??
சென்னை: ரோஜா சீரியலின் வில்லி ஷாம்லிக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
தன்னுடைய குழந்தையின் வருகையால் மகிழ்ச்சியில் ஷாமிலியின் குடும்பம் உள்ளது.
தனக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்த ஷாமிலிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த கேரக்டர்
சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி அதில் ஹீரோவாக நடிக்கும் நடிகர்களை ஹீரோவாக பார்க்கும் ரசிகர்களும், வில்லியாகவும், வில்லன்களாகவும் நடிக்கும் நடிகர்களை அதே கேரக்டரில் பார்க்கும் ரசிகர்கள் இப்ப வரைக்கும் இருந்து வருகின்றனர். ஆனால் என்னதான் சீரியலில் வில்லியாக நடித்து கொண்டிருந்தாலும் நிஜத்தில் குழந்தை மனம் மாறாத ஒரு சாதாரண பெண்ணாகத்தான் இருந்து வருகிறார் என்று ஷாமிலி நிரூபித்து வருகிறார்.

ரோஜா சீரியலின் அனு
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் மூலமாக அனுப்பி அதில் வில்லத்தனத்தில் அனைத்து பெண் ரசிகர்களின் திட்டுக்களையும் வாங்கிக்கொண்டிருந்த ஷாம்லி இந்த சீரியலின் மூலமாக அனுவாகவே ரசிகர்களின் மத்தியில் வாழ்ந்து வந்தார். இந்த சீரியலின் ஆரம்பத்திலிருந்து இந்த கேரக்டரில் இவரை பார்த்த ரசிகர்கள் அனுவாகவே இவரை ஏற்றுக்கொண்டனர். அதிகமாக இவரை திட்டி தீர்க்கும் ரசிகர்கள் தான் இருக்கின்றனர். ரோஜாவை இவர் பழிவாங்க நினைப்பதால் இவரை பிடிக்காமல் கண்டமேனிக்கு பலர் திட்டி வந்தனர்.

திடீர் விலகல்
இவருக்கு திருமணம் முடிந்து பல வருடங்களுக்கு பிறகு இவர் கர்ப்பமாக இருந்த காரணத்தால் இந்த சீரியலில் இவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. தனக்கு கிடைத்த வாய்ப்பை இவரால் விட்டுவிட முடியாமல் இவரும் ஒரு சில மாதங்கள் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் ரசிகர்கள் அதிகமாக திட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிகமாக சோர்வு ஏற்படவே இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். ஆனால் இவர் நடித்த கதாபாத்திரத்தில் இவர் இல்லை என்பதை ரசிகர்களால் இப்ப வரைக்கும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் இருந்து வருகிறது. இவர்தான் அனு கேரக்டரில் கச்சிதமாக பொருந்தி உள்ளார் என்று பலர் கூறி வருகின்றனர்.

மகிழ்ச்சியான செய்திதான்
ரோஜா சீரியலில் இருந்து இவர் விலகிய பிறகும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக தான் இருந்துவருகிறார். தன்னுடைய ரீல்ஸ் வீடியோக்களின் மூலமாக இவரை தேடிக் கொண்டிருக்கும் ரசிகர்களுடன் நெருக்கமாக தான் இருந்து வருகிறார். இவருக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்று ரசிகர்கள் பலர் ஆர்வமாக இவரிடம் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தனக்கு பெண் குழந்தை பிறந்த செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications