குழந்தைகளுக்காக சீரியல் நடிகை செய்த செயல்..இந்த மனது யாருக்கும் வராது..வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: கலர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே சீரியல் கதாநாயகி செய்த செயல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
என்னதான் பிஸியாக இருந்தாலும் குழந்தைகளுக்காக ஹேமா செய்த செயலுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் இதயத்தை திருடிய நாயகி
தற்போதைய சூழலில் வெள்ளித்திரை கதாநாயகர்களுக்கு இணையாக சின்னத்திரையிலும் கதாநாயகிகளுக்கு ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். தொடர்ந்து தினமும் சின்னத்திரை நடிகர்களை பார்த்து வருவதால் ரசிகர்களையும் அறியாமல் நடிகர்களின் மீது அவர்களுக்கு ஒரு மரியாதை ஏற்பட்டு வருகிறது. அதுவும் பாசிட்டிவ் கேரக்டரில் நடிக்கும் நடிகர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது ரசிகர்களின் மன நிலையாக இருந்து வருகிறது. அந்த வகையில் கலர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே சீரியல் கதாநாயகி ஹேமாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகத்தான் இருந்துவருகிறது.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
இளம் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹேமா பிந்து இதயத்தை திருடாதே சீரியலின் மூலமாக ரசிகர்களின் செல்லப் பெண்ணாக மாறி இருக்கிறார். இவர் நடித்து வரும் இதயத்தை திருடாதே சீரியல் தற்போது இரண்டாவது பாகம் தொடங்கியிருக்கின்றது. முதல் பாகத்தில் அறிமுகமாகும்போது வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக இவருடைய அழகு ரசிகர்களால் அதிகமாக பாராட்டப்பட்டது. அதனாலேயே இவருக்கு அதிகமான இளைஞர்கள் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் ஹேமா அடிக்கடி வீடியோக்கள் மூலமாக இளைஞர்களுக்கு எனர்ஜி கொடுத்து வருகிறார்.

குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி
குடும்ப பெண்களையும், இளைஞர்களையும் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் வசீகரிக்கும் முக அழகையும், குணத்தையும் பெற்றுள்ளார். இவர் நடிக்கும் இதயத்தை திருடாதே சீரியலில் தற்போது ஐஸ்வர்யா என்னும் குழந்தைக்கு இவர் அம்மாவாக நடித்து பல குழந்தைகளின் அம்மா பாசத்தையும் பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நிஜத்திலும் குழந்தைகளின் மீது பேரன்பு வைத்திருக்கும் இவர் தற்போது ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதோடு அந்த குழந்தைகளை இவர் மகிழ்வித்த தருணத்தை தனக்கு கிடைத்த பெரிய பொக்கிஷமாக நினைத்து அதற்கு நன்றி கூறி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார்.

அசத்தலான வார்த்தைகள்
ஹேமா வெளியிட்ட போஸ்ட் பார்த்ததும் ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். என்னதான் பணம் காசு இருந்தாலும் இந்த மாதிரி குணங்கள் ஒரு சிலருக்கு மட்டும்தான் ஏற்படும், அதனால் தொடர்ந்து இவர் இதுபோல முயற்சி எடுத்து குழந்தைகளை மகிழ்விக்க வேண்டும் என்பது பலருடைய ஆசையாக இருந்து வருகிறது. ஆனால் ஹேமா தன்னுடைய இன்ஸ்டாகிராம் போஸ்ட்க்கு அழகான வசனங்களால் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதில் அழகான ஆசையை உருவாக்குங்கள். நாம் அனைவருக்கும் உதவ முடியாது, ஆனால் எல்லோரும் ஒருவருக்கு உதவ முடியும்... இரக்கத்தால் மட்டுமே குணமடைய கூடிய காயத்தை ஒரு அன்பான சைகை அடையும் என்று கூறியிருக்கிறார். இதை ஹேமாவின் ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications