சிறகடிக்க ஆசை அப்டேட்: விஜயாவை கலங்க வைத்த ரோகிணி.. மீனாவிடம் போட்ட சபதம்.. அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 20ஆம் தேதிக்கான எபிசோடில், மனோஜும் ரோகிணியும் கவுன்சிலிங் போகின்றனர். அப்போது எதிர்பாராத சம்பவம் நடைபெறுகிறது. அதனால் மனோஜ்க்கு புதிய பிரச்சனை வருகிறது. ஆனால் விஜயா ரோகிணிக்கு எதிராக அடுத்த ஆயுதத்தை எடுத்து இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில், கவுன்சிலிங் நடக்கும் ரூமுக்குள் மனோஜ், ரோகிணி இருவரும் செல்கிறார்கள். அப்போது அங்கு வந்த விஜயா, முத்து மற்றும் மீனாவை வெளியே போக சொல்லிவிட்டு, அவர்கள் இருவரிடம் மட்டும் பேசுகிறார். என்ன பிரச்சனை என கேட்கும் போது, ரோகிணி தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாகவும், கட்டாயம் தனக்கு டைவர்ஸ் வேண்டும் எனவும் மனோஜ் கூறுகிறார்.
ரோகிணியின் நாடகம்
அப்போது அருகில் இருந்த ரோகிணி அழத் தொடங்க, அதைப் பார்த்த மனோஜ், இதெல்லாம் நம்பாதீங்க, அவ்வளவும் நடிப்பு என சொல்லிக் கொண்டிருக்க, ரோகிணி திடீரென மனோஜ் காலில் விழுகிறார். பின்னர் கவுன்சிலிங் பேச வந்தவர்களிடம் ரோகிணி, நான் சாகுற வரைக்கும் மனோஜுடைய மனைவியாக தான் இருப்பேன், நான் அவர்கூட வாழ வேண்டும், எங்களுக்கு டைவர்ஸ் வேண்டாம் என விடாப்பிடியாக கூறுகிறார்.
மனோஜ் சொன்ன விஷயம்
அதற்கு மனோஜ், இவளால என்னோட நிம்மதியே போச்சு, என்னோட குடும்பத்திலும் நிறைய பிரச்சனை வந்திருச்சு, அதனால இவகூட என்னால வாழ முடியாது என சொல்கிறார். இருவரும் எதிர்மறையான முடிவில் இருப்பதால் கவுன்சிலிங் நடத்துபவர்கள் கன்பியூஸ் ஆகி, இதுக்குமேல எங்களால உங்களை பேசி சேர்த்துவைக்க முடியாது, இனிமேல் கோர்ட் என்ன முடிவு சொல்லுதோ அதை ஏத்துக் கோங்க என கூறிவிடுகின்றனர்.
கவுன்சிலிங்கில் நடந்த சம்பவம்
பின்னர் வெளியே வந்த மனோஜ், உள்ளே நடந்ததை விஜயாவிடம் சொல்கிறார். ரோகிணி அழுது சிம்பதி கிரியேட் பண்ணியதால் கோர்ட்டில் பார்த்துக்க சொல்லிட்டாங்க என கூறுகிறார். அப்போது அங்கு வந்த ரோகிணியிடம், மீனா பேசும் போது, நீ இப்படி அழுகாச்சியாக முகத்தை வச்சிருக்கும்போதே நினைச்சேன் ஏதாச்சும் டிராமா பண்ணுவேனு என சொல்ல, அதற்கு ரோகிணி, என்னை என்னுடைய புருஷன் கிட்ட இருந்து பிரிக்க நினைச்சா இப்படி தான் பண்ணுவேன் என்று திமிராக பேசுகிறார்.
ரோகிணி போட்ட சபதம்
பின்னர் விஜயா, ஏண்டி என் பையன் பின்னாடி வேதாளம் மாறி சுத்திகிட்டே இருக்க என கேட்க, ரோகிணி, நான் டைவர்ஸ் கொடுக்கவே மாட்டேன் என திமிராக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அடுத்ததாக வீட்டுக்கு வந்த விஜயா, கோர்ட்டில் நடந்ததை அண்ணாமலையிடம் சொல்லி புலம்புகிறார்.
சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
அதற்கு அவர், நீ முதலில் மனோஜுக்கு பெண் பார்ப்பதை நிறுத்து, அது தான் ரோகிணிக்கு கோபம், அதனாலதான் அவ இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கா என சொல்லுகிறார். ஆனால் விஜயா, அவளுக்கு பயந்து என்னால இருக்க முடியாது என கூறி, மனோஜிடம் புதுசா பார்த்த பெண்ணோடு நீ பேசி பழகு, அதைப் பார்த்து அந்த ரோகிணி வயிறு எரியட்டும் என சொல்லுகிறார். அதற்கு மனோஜும் ஒப்புக்கொள்கிறார். அந்த நேரத்தில் முத்து, மீனாவிடம் இருந்து சாப்பாடு வாங்கி வர, விஜயா தவிர மற்றவர்கள் எல்லோரும் சாப்பிட செல்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?













Click it and Unblock the Notifications