பிரபல சீரியலில் ஜோடியாக நடிக்கும் சினேகன்- கன்னிகா... ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.. கதையே மாறிப்போச்சு
பாரதி கண்ணம்மா சீரியலின் இறுதி எபிசோட்டில் சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கின்றனர்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் முதல் பாகம் அடுத்த வாரத்தோடு முடிவடைய இருக்கிறது.
இந்த சீரியலில் கடைசி எபிசொட்டில் சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் நடிக்க இருக்கிறார்கள். இந்த வீடியோவை கன்னிகா தற்போது பகிர்ந்து இருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண வீடு சீரியலில் கன்னிகா ஏற்கனவே கதாநாயகியாக நடித்திருந்தார்.

திரைத்துறை தம்பதிகள்
திரைத்துறை தம்பதிகளாக இருந்து வரும் கன்னிகா மற்றும் சினேகன் தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான். இவர்களில் கன்னிகா ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சினேகன் பாடல் ஆசிரியராக இருந்து வருகிறார் அது மட்டுமல்லாமல் நடிகராகவும் பிக் பாஸ் போட்டியளராகவும் இருக்கிறார். இந்த நிலையில் கன்னிகா சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண வீடு என்ற சீரியலில் சூர்யா கேரக்டரில் இவர் நடித்திருந்தார். ஏற்கனவே அந்த கேரக்டரில் இன்னொரு நடிகை நடித்திருந்த நிலையில் அவர் திடீரென விலகிய பிறகு அவருக்கு பதிலாக கன்னிகா சீரியலின் கதாநாயகியாக மாறி இருந்தார். இந்த சீரியலில் இவருடைய நடிப்பை பிடித்து போன ரசிகர்கள் பலர் இவர் அடுத்த சீரியல் எப்போது வருவார் என்று எதிர்பார்த்தனர்.

பாரதி கண்ணம்மாவில் அறிமுகம்
ஆனால் இனி தொடர்ந்து சீரியலில் நடிக்கப் போவதில்லை என்று முடிவோடு இருந்த கன்னிகா திருமணத்திற்கு பிறகு ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். திரைப்படத்தைப் பற்றி தகவல்கள் எதுவும் தெரிவிக்காவிட்டாலும், திரைப்படத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் கன்னிகா மற்றும் சினேகன் இருவரும் ஜோடியாக நடிக்க இருக்கின்றனர். பாரதி கண்ணம்மா சீரியல் 4 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் அடுத்த வாரத்தோடு முடிவடைய இருக்கிறது.

மீண்டும் கண்ணம்மாவுக்கு திருமணம்
பல வருடங்களாகவே ரசிகர்கள் இந்த சீரியல் எப்போது முடிவடையும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர். இப்போது ரசிகர்கள் எதிர்பார்ப்பு படி சீரியல் கடைசி கட்டத்தில் நெருங்கிவிட்டது. இந்த நிலையில் பாரதி மற்றும் கண்ணம்மாவிற்கு மீண்டும் திருமணம் நடத்த இருக்கின்றனர். அதில் கண்ணம்மா தான் ஆசைப்பட்ட மாதிரி தனக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்று கூறியிருந்தார். தனக்கு பசுமையான இடத்தில், மனதிற்கு இதமான சுற்றுச்சூழலோடு திருமணம் நடக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதுபடி தற்போது கிராமத்தில் வயல்வெளியில் நடுவில் திருமணம் நடக்க இருக்கிறது.

சிறப்பு விருந்தினர்கள்
இந்த நிலையில் பாரதி மற்றும் கண்ணம்மா வின் திருமணத்திற்கு சிறப்பு விருந்தினராக ஏற்கனவே பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டியாளராக இருந்த ஷிவின் கலந்து கொள்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருந்தது. அதை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி கலந்து கொள்ள இருக்கிறார். அவரை தொடர்ந்து தற்போது கன்னிகா மற்றும் சினேகன் இருவரும் கலந்து கொண்டு பாரதிக்கு தாலி எடுத்துக் கொடுக்க இருக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது கன்னிகா மற்றும் சினேகன் ஏற்கனவே நிஜ வாழ்க்கையிலும் பலருடைய திருமணங்களில் கலந்து கொண்டு தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை ஆசீர்வாதம் செய்து வருகின்றனர். அதையே அப்படியே சீரியலிலும் வைத்து விட்டார்கள் போல என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications