என் மகனே என்னை வெறுக்கிறான்...டீம் மேட்ஸ்களை கண்கலங்க வைத்த தாமரை
சென்னை: கலகலப்பாக சிரித்துக்கொண்டிருக்கும் தாமரைக்குள் இவ்வளவு வேதனையா என ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர்.
Recommended Video
நான் இங்கு வந்ததற்கு காரணமே இதுதான் என்று தாமரை பேசியதும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருந்திருக்கிறது.
இங்கே தான் நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று இவர் இவ்வளவு நாளாக சொல்லும்போது தெரியவில்லை.ஆனால், இப்போது தான் தெரிகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வெகுளித்தனமான குணம்
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் பல புதுமுகங்கள் அறிமுகமாகி இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் தற்போது பலரும் ரசிகர்களுக்கு பரிச்சயமான நபர்களாக மாற தொடங்கி விட்டார்கள். அதில் ஒருவராக தாமரைச்செல்வி இருந்து வருகிறார். தன்னுடைய வெகுளித்தனமான பேச்சாலும், கலகலப்பான குணத்தாலும் அனைவரையும் கவர்ந்து இழுத்தவர். ஒரு வாரத்திற்குள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டார். இவருடைய குழந்தை தனத்தை பார்த்து பலர் இவருக்கு ரசிகர்களாக மாரி இவருடைய பெயரில் ஃபேன்ஸ் பேஜ்களையும் தொடங்கிவிட்டனர்.

கண்ணீரோடு, உருகும் கதை
ரசிகர்களின் மத்தியில் அதிகமான நன்மதிப்பை பெற்று வரும் ஒருவராக இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த வார இந்த வீட்டின் தலைவராகவும் இவர் பொறுப்பேற்று இருக்கிறார். முதல் டாஸ்க்கில் இவர் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவருக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. பதவி கிடைத்த பிறகும் தன்னுடைய அதே குணத்தாலும் அனைவரையும் கவர்ந்து இழுத்து வரும் இவர், இன்றைய கதை சொல்லும் பகுதியில் அனைவரையும் கலங்க வைத்துவிட்டார். தன்னுடைய கதையை கேட்டால் எல்லோரும் அசந்து போய் விடுவீர்கள் என்று இதுவரைக்கும் கூறிக் கொண்டிருந்தவர்கள் இப்போது அழ வைத்துவிட்டார்.

முதல் ப்ரோமோ
போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய கடந்து வந்த கடினமான கதைகளை கூறிக்கொண்டிருக்கும் டாஸ்க்கில் இதுவரைக்கும் பலர் தங்களுடைய கதைகளை கூறிக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு சிலருடைய கதைகள் போட்டியாளர்களையும், ரசிகர்களின் மனதையும் கவர்ந்து விட்டது. அதற்கு தொடர்ந்து போட்டியாளர்களும் ரசிகர்களும் லைக்களையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டின் முதல் ப்ரோமோவாக தாமரைச்செல்வி கூறிய கதை தான் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒரு பாதியை கேட்டதுமே ரசிகர்கள் பீல் பண்ண தொடங்கிவிட்டனர்.

பார்ப்போரை அழவைத்து விட்டார்
என்ன நடந்தாலும் ஜாலியாக சிரித்து கொண்டிருக்கும் பிரியங்கா இவருடைய கதையை கேட்டு கண்ணீர் வடித்தது இவருடைய கதைக்கு கிடைத்த அங்கீகாரமாக தான் இருந்து வருகிறது. யாருடைய கதையாக இருந்தாலும் சரி அதில் அவர்களுடைய மனசை தேற்றி ஒரு ஜாலியான மூவ்மெண்ட் கொடுத்துவிடும் பிரியங்காவே இந்த கதைக்கு கண்ணீர் சிந்தி இருப்பது ரசிகர்களின் மத்தியில் சிறு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தன்னுடைய மகன் மீது இவர் வைத்திருக்கும் பாசத்தையும் அவருக்காகத்தான், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் அவர் என்னுடன் வந்து விடவேண்டும் என்று இவர் கதறி அழுதது பார்ப்போரை கண் கலங்க வைத்திருக்கிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications