Vijay: விஜய் கொண்டு போன கத்தரிக்கோலுக்கு பின்னாடி இப்படி ஒரு ஜாதகம்? பிரபலம் விளக்கம்
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் மீண்டும் டெல்லி செல்லும் போது நடந்த ஒரு சம்பவம் தற்போது பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி, பல மணி நேர விசாரணைக்கு உட்பட்டிருந்தார் விஜய். இதன் தொடர்ச்சியாக மார்ச் 15ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு சம்மன் வந்ததால், மார்ச் 14ஆம் தேதி அவர் டெல்லி செல்ல திட்டமிட்டார்.
சென்னையின் நீலாங்கரை இல்லத்திலிருந்து காரில் விமான நிலையம் சென்ற விஜய், தனி விமானத்தில் புறப்பட இருந்தார். ஆனால் அப்போது ஏற்பட்ட ஒரு எதிர்பாராத சிக்கல், இந்த பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

பேக்கில் கத்தரிக்கோல்
விமானத்தில் ஏறுவதற்கு முன் நடந்த பாதுகாப்பு சோதனையில், விஜய் வைத்திருந்த பேக்கில் கத்தரிக்கோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் பாதுகாப்பு விதிகளின் அடிப்படையில் விமானத்தை இயக்க முடியாது என பைலட் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜய் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டார்.
பின்னர் பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு தான் அந்த விமானம் டெல்லி புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தணன் விளக்கம்
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், வலைப்பேச்சு அந்தணன் இதற்கான ஒரு வித்தியாசமான காரணத்தை முன்வைத்துள்ளார்.
அவர் கூறுகையில், "சில ஜோதிடர்கள் கையில் ஒரு குறிப்பிட்ட பொருள் வைத்திருந்தால் காரியம் வெற்றி அடையும் என்று சொல்வார்கள். அதுபோல கத்தரிக்கோல் வைத்திருந்தால் சிபிஐ விசாரணையில் பிரச்சனை வராது என்று யாரோ ஒருவர் கூறியிருக்கலாம்" என்று தெரிவித்தார்.
மேலும், "அதற்காகவே விஜய் அதை எடுத்துச் சென்றிருக்கலாம் என்பது என் எண்ணம்" என்றும் அவர் கூறியுள்ளார்.
சரக்கு பாட்டிலும் சர்ச்சை
இந்த விவகாரத்தில் இன்னொரு விஷயமும் பேசப்பட்டது. விஜய் உடன் சென்ற ஆதவ் அர்ஜூனா பையில் சரக்கு பாட்டில் இருந்ததாகவும், அதையும் சமூக வலைதளங்களில் பெரிதாக்கி பேசப்பட்டதாகவும் அந்தணன் குறிப்பிட்டார்.
"விமான நிலையத்துக்குள் சென்ற பிறகு அங்கேயே வாங்கிக் கொள்ளலாம். அப்படியிருக்க, தனி விமானத்தில் செல்லும்போது ஒருவர் எடுத்துச் சென்றதை பெரிய விஷயமாக காட்டுவது சரியா?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு கத்தரிக்கோலுக்கு பின்னால் ஜோதிடம் என்ற புதிய கோணம்... விஜய் தொடர்பான இந்த சம்பவத்தை இணையத்தில் பெரிய விவாதமாக மாற்றியுள்ளது. இந்த தகவல்களில் எது உண்மை? எது ஊகம்? என்பது குறித்து ரசிகர்களும், அரசியல் வட்டாரங்களும் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர்.
-
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications