கையில் ‘விஜய்’ டாட்டூ போட்ட இளைஞருக்கு மறக்க முடியாத சம்பவம்! இப்படியும் நடக்குமா? நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை: காதல், கல்யாணம் என்றாலே நம்ம ஊரில் முதலில் கேட்கப்படும் விஷயங்கள் ஜாதகம் சரியா, சம்பளம் எவ்வளவு, குடும்பம் எப்படி என்பதுதான். ஆனால் இப்போது அந்த எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரே ஒரு விஷயத்தை வைத்து வாழ்க்கை செட் ஆன ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது. அந்த விஷயம் வேறொன்றுமில்லை, நடிகர் விஜய் மீது இருக்கும் ரசிகத்தனம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் தற்போது விஜய் ரசிகர்களிடையே வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு பெண், தன்னுடைய காதல் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி தொடங்கியது என்பதை சுவாரஸ்யமாக பகிர்ந்தார். அவருடைய அண்ணனும், தற்போது கணவராக இருக்கும் அந்த நபரும் முன்பு ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். அதனால் அண்ணனை பார்க்கும் பெயரில், அந்த நபர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார்.
இந்த நிலையில் அந்த பெண் தீவிரமான நடிகர் விஜய் ரசிகை. வீட்டில் யார் வந்தாலும், எங்கு போனாலும் தன்னை விஜய் ரசிகை என்று பெருமையாக சொல்லிக் கொண்டே இருப்பாராம். இதனால் வீட்டில் இருப்பவர்கள், "இப்படி எல்லாரிடமும் விஜய் ரசிகைன்னு சொல்லிக்கிட்டே இருந்தா உன்னை யாரு கல்யாணம் பண்ணுவாங்க?" என்று கிண்டலடிப்பார்களாம்.
கையில் இருந்த அந்த ஒரு டாட்டூ
ஒரு நாள் வழக்கம்போல் அண்ணனை பார்க்க வந்த அந்த நபரின் கையில் 'தளபதி விஜய்' என்று பச்சை குத்தி இருந்ததாம். அதை பார்த்த அந்த பெண்ணுக்கு ஒரே ஆச்சரியம். எந்த தயக்கமும் இல்லாமல், "நீங்க என்ன கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?" என்று கேட்டுவிட்டாராம்.
இந்த கேள்வியை எதிர்பாராத அந்த நபர், என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், நண்பனை கூட சந்திக்காமல் உடனே அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டாராம்.
பயமும் குழப்பமும்
அவர் போனதும் அந்த பெண்ணுக்கு மனதில் குழப்பம். "நாம ஏதோ தப்பா கேட்டுட்டோமோ, இவர் எதுவும் சொல்லாம போயிட்டாரே" என்று வருத்தமாக இருந்திருக்கிறார்.
அதோடு, "இதைக் கண்டு அண்ணன் தெரிந்துகிட்டா இன்னைக்கே அடி விழும்" என்ற பயத்தில், இரண்டு நாட்கள் அந்த நபரின் கண்ணில் படாமல் தவிர்த்திருக்கிறார்.
மீண்டும் சந்திப்பு
பின்னர் ஒருநாள் தவிர்க்க முடியாத சந்திப்பு நடந்திருக்கிறது. அப்போது அந்த நபரே, "அன்னைக்கு என்ன கேட்டீங்க?" என்று கேட்டாராம்.
அதற்கு அந்த பெண், "நீங்க கல்யாணம் பண்ணிக்கிறீங்களான்னு தான் கேட்டேன்" என்று சொல்லியிருக்கிறார்.
"எதற்காக அப்படி கேட்டீங்க?" என்று அவர் கேட்டபோது, "நீங்களும் விஜய் ரசிகர், நானும் விஜய் ரசிகை. அதனால தான் கேட்டேன்" என்று சொன்னதும், "அப்படின்னா கண்டிப்பா நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று அவர் சொல்லியிருக்கிறார்.

விஜய் ரசிகத்தனம் சேர்ந்த குடும்பங்கள்
அதன்பிறகு இரு குடும்பங்களிடமும் பேசப்பட்டு, எந்த பெரிய பிரச்சனையும் இல்லாமல் அவர்களுடைய திருமணம் நல்லபடியாக நடந்துள்ளது. இந்த கதையை அந்த பெண் சொல்லி முடித்ததும், நிகழ்ச்சியை பார்த்த பலரும் ஆச்சரியத்துடன் ரசித்துள்ளனர்.
சோஷியல் மீடியாவில் கலகலப்பு
இந்த சம்பவம் வெளியானதும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் குவிந்துள்ளன. "கல்யாணத்துக்கு ஜாதகம் பார்க்கும் காலம் போச்சு, இனிமே விஜய் ரசிகனா தான் பார்க்கணும்" "நாங்களும் விஜய் ரசிகையே, எங்களுக்கும் இப்படியே நடக்குமா?" என்று பலர் கலாய்த்து வருகின்றனர்.
சிலர் இதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டாலும், சிலர் ஒரே ரசனை இருந்தால் வாழ்க்கை நல்லபடியாக அமையும் என்பதற்கான உதாரணமாகவும் இந்த சம்பவத்தை பார்க்கிறார்கள்.
Rajakumaran : “விஜய் அழுதாலே என்னால பார்க்க முடியாது” இது சகிக்கல! இயக்குநர் ராஜகுமாரன் ஆதங்கம்
காதல் எங்கிருந்து எப்படி வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. சிலருக்கு ஒரே வேலை இடம், சிலருக்கு ஒரே ஊர். இங்கே ஒரே நடிகர் மீது இருக்கும் ரசிகத்தனம் தான் காதலுக்கும் கல்யாணத்துக்கும் பாலமாக அமைந்துள்ளது.
இதையெல்லாம் பார்த்தால், விஜய் ரசிகத்தனம் என்பது ஒரு ரசிகர் அடையாளம் மட்டுமல்ல, சிலருக்கு வாழ்க்கையை மாற்றும் காரணமாகவும் மாறுகிறது என்பதே உண்மை.
-
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு












Click it and Unblock the Notifications