வெளிவந்த ராதிகாவின் உண்மையான முகம்.. கோபி இனி எடுக்கப் போகும் புது முடிவு- பாக்கியலட்சுமி எபிசோட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவின் நடவடிக்கைகளை பற்றி புரிந்து கொள்ள தொடங்கியிருக்கிறார்.
பாக்கியலட்சுமி வீட்டில் இதுவரைக்கும் கோபி அதிகாரமாக நடந்து கொண்டிருந்தவருக்கு தற்போது ராதிகாவின் வீட்டில் தனக்கு நடக்கும் அவமானங்களை பலமுறை எண்ணிப் பார்த்து வருகிறார்.

சாப்பாட்டில் கிடைத்த ஏமாற்றம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில், பசியோடு இருக்கும் கோபிகக்கு பிரியாணி வாசம் வரவே, ராதிகா பிரியாணி தான் சமைக்கிறார் என்று ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். கோபியின் ஆர்வத்தை பார்த்து மயூ அருகில் இருந்து சிரித்தபடியே இருக்கிறார். ஆனால் சிறிது நேரத்தில் ராதிகா ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் கஞ்சி வைத்துக் கொடுக்கிறார் .இதை பார்த்து அதிகமாக அதிர்ச்சி அடைகிறார் கோபி. பிரியாணி வாசம் வந்ததே என்று கேட்டதற்கு பக்கத்து வீட்டில் யாராவது செய்திருப்பார்களாக இருக்கும் என்று அசால்டாக கூறுகிறார். ராதிகா, நான் கூட நீ எங்களுக்காக பிரியாணி தான் செய்கிறாயோ என்று நினைத்து விட்டேன் என்று கோபி சொன்னதும் இரவு நேரத்தில் யாரும் பிரியாணி சாப்பிட மாட்டார்கள் கோபி. அது ஹெவி புட் என்று கூறிவிடுகிறார். கோபியால் அந்த ஓட்ஸ் கஞ்சியை குடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

கட்டிலில் இடமில்லை
அதே நேரத்தில் பாக்யா வீட்டில் பாக்யாவின் முதல் ஆர்டர் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டதால் அவருக்கு அதிகமாக லாபம் கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில் தொடர்ந்து அந்த திருமண மண்டபத்தில் இனி பாக்கியாவின் கேட்டரிங் தான் அங்கே சமையல் செய்யப் போகிறது என்று குடும்பத்திடம் பாக்கியா கூறிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் கோபி ராதிகாவிடம் இரவு வேலை எல்லாம் முடிந்து விட்டது. ஒரு மெயில் மட்டும் அனுப்பி முடித்து விட்டு வருகிறேன், தூங்கி விடாதே என்று கூறுகிறார். ரொமான்ஸ் ஆக கோபி பேசுவதை கண்டுகொள்ளாமல் ராதிகா சென்று விடுகிறார். காதலித்து 25 வருடங்கள் கழித்து திருமணம் முடிந்திருக்கிறது ஆனால் இந்த ராதிகா நம்மை கண்டு கொள்ளவே மாட்டேங்கிறார் என்று கூறுகிறார். கோபி வேலையை முடித்துக் கொண்டு வரும்போது இங்கே ராதிகா தூங்கி விடுகிறார். கோபிக்கு பெட்டில் இடம் கிடைக்காமல் கீழே படுத்து தூங்குகிறார். அப்போது நான் அந்த வீட்டில் அவ்ளோ பெரிய ரூமில் கட்டிலில் படுத்து தூங்கினேன். ஆனால் என் நிலைமை இப்படி மாறிவிட்டது என்று புலம்பி கொண்டு தூங்குகிறார் .அடுத்ததாக அடுத்த நாள் காலையில் கோபி ஜாக்கிங் போகிறார். அங்கே எழிலும் ஓடிக் கொண்டிருக்கிறார் .எழிலை வீம்புக்கு சண்டை இழுத்த கோபி என்னை போல உன்னால் ஓட முடியுமா என்று பெட் கட்டுகிறார்.

கோபிக்கு கிடைத்த அவமானம்
கோபியோடு பேச பிடிக்காத எழில் விலகி செல்ல ஆனால் கோபி வலுக்கட்டாயமாக தன்னோடு ஓடி ஜெயிக்க முடியாது ,முடிந்தால் ஓடி பார் என்று கூறுகிறார். அதற்கு எழிலும் ஓகே என்று சொன்னதும் எழிலின் வேகத்துக்கு கோபியால் ஓட முடியாமல் சிறிது தூரத்தில் மூச்சு இழுத்துக் கொண்டு நின்று விடுகிறார். இவருடைய நடவடிக்கையை பார்த்து நத்தலாக சிரித்தபடி எழில் போய்விடுகிறார். அடுத்ததாக வீட்டிற்கு வந்த கோபி ராதிகாவிடம் ஒரு கப் காபி கிடைக்குமா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இனி கோபி எடுக்கப் போகும் முடிவு
இந்தப் பக்கம் ஓடி முடிந்து வீட்டிற்கு வந்த எழிலிடம் ஈஸ்வரி கோபியை எங்கேயாவது பார்த்தியா? என்று கேட்கிறார் .அதற்கு ராமமூர்த்தி எதற்கு அவனைப் பற்றி இங்கே பேசுற அவன் மேல உனக்கு இன்னும் பாசம் இருக்கா? என்று சத்தம் போடுகிறார். அதற்கு ஈஸ்வரி இல்லை தெருவில் போகும்போது பக்கத்து வீட்டுக்காரர்கள் இவர்கள் இருவரையும் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று தான் கேட்டேன் என்று கூறுகிறார். பக்கத்து வீட்டுக்காரங்கள் என்ன சொல்லுவாங்க என்று நினைப்பு அவனுக்கு இருந்திருந்தால் இங்கேயே வருவானா? அவன் எப்படியும் போகட்டும் என்று ராமமூர்த்தி கத்துகிறார். அதே நேரத்தில் காபி கேட்ட கோபியிடம் ராதிகா நான் நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறேன் கோபி உடனே எல்லாம் வர முடியாது என்று கூறுகிறார். அப்போது தான் இதுவரைக்கும் பாக்யாவிடம் எவ்வளவு பிரச்சனை பண்ணியிருக்கிறேன். டைமுக்கு காபி வரவில்லை என்றால் எவ்வளவு பிரச்சினை பண்ணி இருக்கிறேன் .நான் கேட்காமலே நமக்காக பார்த்து பார்த்து செஞ்ச பாக்கியா மற்றும் குடும்பத்தினரை நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார் .இதோடு இன்றைய எபிசோடு முடிந்து இருக்கிறது. இனி கோபி எடுக்கப் போகும் முடிவு என்ன என்பது பொறுத்திருந்து பார்த்தால் தெரியும்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications