கோபிக்கு ராதிகா வீட்டில் கிடைக்கும் அவமானங்கள்.. ராதிகாவின் புது கண்டிஷன்.. வேதனை தொடங்கிருச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இதுவரைக்கும் ஆட்டம் போட்டு வந்த கோபிக்கு ராதிகா வீட்டில் அவமானங்கள் நடக்க துவங்கியிருக்கிறது.
பாக்கியா கோபியின் மீது இருக்கும் பாசத்தையும், வெறுப்பையும் ஒரு சேர கண்களில் காட்டி பார்ப்பவர்களுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தும் விதத்தில் செய்து இருக்கிறார்.

ஜெனி செய்த சேட்டை
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பமாகும் போது, ஜெனி அனைவருக்கும் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருப்பதால் அனைவரும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு சாப்பாடு நல்லா இருக்கு, ஆனால் நீ தான் சமைத்தாயா என்று சந்தேகமாய் இருக்கு என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே நேற்றைய எபிசோடில் ஹோட்டலில் இருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்து ஜெனி பாத்திரங்களில் எடுத்து வைத்து, அதை சமைத்ததாக சொன்னதை எழில் மற்றும் பாக்யா இருவருமே பார்த்து விட்டதால் பாக்யா ஜெனியின் நடவடிக்கையை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்.

கண்டுகொள்ளாத ராதிகா
அதே நேரத்தில் ராதிகாவின் வீட்டில் கோபி குளித்துவிட்டு டவல் கேட்டு ராதிகாவுக்கு குரல் கொடுத்து கொண்டிருக்கிறார். ஆனால் கோபியின் சத்தத்தை ராதிகாவும், அவருடைய அம்மா, அண்ணன் யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர் .அதனால் தனக்குத்தானே காட்டு கத்து கத்துகிறேன் யாராவது கண்டு கொள்கிறார்களா? என்று டவலை அவரே தேடிக் கொண்டிருக்கிறார். டவல் காணாததால் தன்னுடைய வேஷ்டியால் தலையை துவட்டிக் கொள்கிறார். கீழே வருகிறார் அங்கே அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் போது யாருமே கோபியை கண்டு கொள்ளவில்லை .ஒரு மாப்பிள்ளை மரியாதையே நமக்கு இல்லை என்று கோபி மனதிற்குள்ளே புலம்பியவாறு வருகிறார்.

துவங்கியது அவமானங்கள்
கீழே வந்த கோபி, ஒரு காபி கேட்கிறார். அதற்கு அவருடைய மாமியார் டீ போட்டு கொடுக்கிறார் .அதை டேஸ்ட் செய்த பிறகு வாயில் வைக்க முடியாத அளவிற்கு இருக்கிறது .அப்போது கோபி வீட்டில் அதிகாரத்தோடு நடந்து கொண்டதையும் இங்கு நடப்பதையும் ஒப்பிட்டு பார்த்து மனதிற்குள்ளேயே புலம்புகிறார். அதற்குப் பிறகு ராதிகா மேலே ரூமிற்கு வருகிறார். அப்போ அவரிடம் கோபி பேச முயற்சி செய்கிறார் .அப்போது ராதிகா என்னை உங்க வீட்டில் எவ்ளோ அசிங்கப்படுத்தினாங்க? நான் என்ன தப்பு பண்ணுனேன். நானா உங்களை உங்க பொண்டாட்டி கிட்ட இருந்து பிரிச்சி கூட்டிட்டு வந்தேன். நீங்க தானே உங்க குடும்பம் பிடிக்கலைன்னு பிரிஞ்சு வந்திங்க. சட்டப்படியும் நியாயப்படியும் நான் எந்த தப்பும் பண்ணல. ஆனா எல்லோரும் என்னை தான அசிங்கப்படுத்துறாங்க ?இனி அவங்க முன்னாடி நல்லபடியா வாழ்ந்து காட்டணும். எனக்காக அதை மட்டும் பண்ணுங்க என்று கூறுகிறார்.

பாக்யா கண்டுபிடித்த உண்மை
கோபி ராதிகாவின் புது கண்டிஷனை நினைத்து செய்வதறியாது நின்று கொண்டிருக்கிறார் .அப்போது அதே நேரத்தில் அடுத்த பக்கம் இனியா ஸ்கூலுக்கு கிளம்பி போகிறார். பிறகு ஜெனி பாக்யாவிடம் கொடைக்கானலில் நீங்க ஆங்கிலை பார்த்ததும் உங்களுக்கு ஒரு மாதிரி இல்லையா? என கேட்க கேட்கிறார். அதற்கு பாக்யா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, பழகிடுச்சு போல என கூறுகிறார். பிறகு பாக்யா சமையல் செய்வதற்காக அங்கே இருக்கும் பாக்ஸ்களை திறந்து பார்க்கிறார் .அப்போது உள்ளே இருந்த ஹோட்டல் கவர்களை பார்த்து என்ன இது என்று கேட்கிறார் ?இதை எதிர்பார்க்காத ஜெனி அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் முடிவடைந்து இருக்கிறது.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications