அப்பாவின் அன்பு ஒரு காவியம் என்பதை காட்டிய குழந்தை.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: ஆனந்தமாக இருக்க அறிவு தேவை இல்லை அன்பு போதும் என்று தற்போது நீயா நானா நிகழ்ச்சியும் ஒரு குழந்தை நிரூபித்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வு தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
கணவனை மனைவி ஏளனப்படுத்தி சிரித்தாலும் அவருடைய குழந்தை தனது அப்பாவின் தியாகத்தை புரிந்து கொண்டது தான் தற்போது பலரையும் வியக்க வைத்துள்ளது.

சிந்திக்க வைக்கும் நிகழ்ச்சி
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில நிகழ்ச்சிகள் திடீரென்று ரசிகர்களை யோசிக்கவும், சிந்திக்கவும் வைத்து விடும். அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியாக நீயா நானா நிகழ்ச்சியும் பல நேரங்களில் நிரூபித்து வருகிறது. ஏற்கனவே ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் வீட்டுக்கு வேலைக்கு அமர்த்திய பணிப்பெண்கள் மற்றும் வேலைக்கு அமர்த்திய குடும்பப் பெண்கள் இருவர்களுக்கும் உள்ள உரையாடல்கள் சமூக வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்படுத்தி சமுதாயத்தில் இன்னும் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும், பாகுபாடுகளையும் தோலுரித்து காட்டியிருந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு பாசமான நிகழ்வும் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது.

உணர்ச்சிகரமான நிகழ்வு
ஒரு சில இடங்களில் இப்படித்தான் நடக்கிறது என்பதை சமூக வலைத்தளத்தின் மூலமாக தான் தெரிந்து கொள்ள முடிகிறது. நீயா நானா நிகழ்ச்சியில் அதிகமாக சம்பளம் வாங்கும் மனைவிகள் மற்றும் குறைவாக சம்பளம் வாங்கும் கணவர்களுக்கு இடையே நடக்கும் விவாதங்கள் தான் நடந்து வருகிறது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் உணர்ச்சிகரமான ஒரு செயல் நடைபெற்று அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. என்னதான் படித்து பெரிய நிலையில் இருந்தாலும் தனது கணவரை இளக்காரமாக பார்க்கும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை தற்போது காட்டியுள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மட்டம் தட்டும் மனைவி
அரசு துறைகளில் பெண்களுக்கு அதிகமான இட ஒதுக்கீடு கொடுப்பதால் ஆண்களின் கனவு வாழ்க்கை பறிபோகிறது என்று தற்போது சமூக வலைத்தளத்தில் ஆண்கள் போர் கொடியை தூக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஆண்களுக்கு மேலும் ஒரு வலு சேர்க்கும் மாதிரி தற்போதைய நீயா நானா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் ஒரு மனைவி படித்து வேலையில் இருப்பவராக இருக்கிறார். அவருடைய கணவர் படிக்காதவராக இருக்கிறார். இந்த நிலையில் பல பேர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருக்கு படிக்க தெரியாது, குழந்தையின் பிராக்ரஸ் கார்டில் கையெழுத்து போடுவதற்கு ஒரு மணி நேரமாக பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று கணவரை மட்டம் தட்டிக் கொண்டிருக்கிறார்.

சூப்பர் அப்பா
நடுநிலையாக தீர்ப்பு சொல்லும் கோபிநாத் இந்த நிகழ்வுக்கு என்ன சொல்ல போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அந்த கணவரிடம் நீங்கள் எதற்காக அவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிங்க என்று கேட்டிருக்கிறார். அப்போது அந்த கணவர் நான் வாங்காத மார்க்கை என்னுடைய மகள் வாங்கி இருக்கிறார். அவர் ஆசைப்பட்டதை நான் படிக்க வைக்க வேண்டும் என்று உருக்கமாக பேசியிருக்கிறார். இந்த நிலையில் நிகழ்ச்சியில் கடைசியில் கொடுக்கும் பரிசினை அந்த ஆணிற்கு கோபி நாத் கொடுக்கிறார். அதை அவருடைய குழந்தையின் கையில் கொடுத்து இருக்கிறார். அப்போது கோபிநாத் சூப்பர் அப்பாவுக்கு நீ பரிசு கொடு என்று பரிசை கொடுக்க வைத்திருக்கிறார் .

குழந்தையின் அறிவான பேச்சு
மகளின் கையால் பரிசை வாங்கிய மகிழ்ச்சியில் அந்த தந்தை தனது மகளின் கன்னத்தில் முத்தங்களை பொழிந்து இருக்கிறார். இதை பார்க்கும் போதே பலருடைய கண்களிலும் கண்ணீர் எட்டிப் பார்க்கத் தொடங்கி விட்டதாம். அது மட்டுமல்லாமல் அதற்கு அடுத்து உன்னுடைய தந்தை தோற்றுப் போய்விட்டார்கள் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டு இருக்காங்க, உங்க அப்பா ஒரு பெரிய வெற்றியாளர் என்று கோபிநாத் சொன்னதும், அந்தப் போட்டியாளரின் மகள் அவர் நிஜமாகவே தோக்கல என்று கண்ணீரோடு கூறியிருக்கிறார். அப்போது கோபிநாத் அந்த குழந்தையை கட்டி அணைத்து, ஏன்? அப்பா தோற்கல.!!? என்று கேட்டிருக்கிறார். அவரு எனக்காக தான் எல்லாமே கஷ்டப்படுகிறார். என்று மழலை மொழியில் குழந்தை சொல்லும் போது அரங்கத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் அந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கும் கண்ணீர் வருகிறதாம்.
-
சிறகடிக்க ஆசை: போலி சாமியார் பற்றி உண்மையை நிரூபித்த முத்து! விஜயாக்கு தெரிய வந்த இன்னொரு உண்மை! செம சம்பவம் -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications