பாரதி கண்ணம்மா சீரியலில் அறிமுகமாகும் புது நடிகை.. மாறப்போகும் கதை..திரைப்படங்களை மிஞ்சிடுவாங்க போல

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் புது கேரக்டராக விஜே லயா அறிமுகமாகி இருக்கிறார் என்று அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

விஜே மற்றும் டிக் டாக் பிரபலமான லயா தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்னும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

வி ஜே லயா பாரதி கண்ணம்மா சீரியலில் என்ன கேரக்டரில் நடிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில் தற்போது அவருடைய கேரக்டர் தான் இந்த சீரியலுக்கே கதைக்கே மாற்றத்தை கொடுக்கப் போகிறது என்ற உண்மையை உடைத்திருக்கிறார்.

மீம்ஸ்களால் பிரபலம்

மீம்ஸ்களால் பிரபலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பையும், நெகட்டிவ் கருத்துக்களையும் பலமுறை பெற்று வருகிறது. ஆரம்பம் முதலே இந்த சீரியல் அமைதியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று நெட்டிசன்களால் வைரலாக்கப்பட்டது. கதையின்படி பாரதியின் மனைவியான கண்ணம்மா பாரதியோடு கோபித்துக் கொண்டு கையில் பேக்கை தூக்கிக் கொண்டு நடந்ததை வைத்து சமூக வலைத்தளத்தை எந்த பக்கம் திரும்பினாலும் இந்த சீரியலின் மீம்ஸ் தான் என்று சொல்லும் அளவிற்கு அதிகமாக பிரபலம் ஆகி விட்டனர்.

ரசிகர்களின் கருத்து

ரசிகர்களின் கருத்து

பொதுவாகவே சீரியல் என்றாலும் ரசிகர்கள் சலிப்பு தட்டாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா கதைகளையும் டுவிஸ்ட்களையும் கொடுத்து எபிசோடுகளை நகர்த்திக் கொண்டிருப்பது வழக்கமாக ஒன்றாக இருப்பது போலத்தான் தற்போது இந்த சீரியலிலும் இருந்து வருகிறது என்று ரசிகர்கள் கூறுகின்றார்கள். பாரதி கண்ணம்மா சீரியல், டி என் ஏ டெஸ்ட் எடுத்தால் ஒரே நாளில் முடிந்து விடும் ஆனால் அதை வருட கணக்கில் எடுக்காமல் தற்போது இரண்டாவது சீசனிலும் இந்த சீரியல் அடி எடுத்து வைத்திருக்கிறது.

மிரட்டும் தீவிரவாதிகள் சீன்

மிரட்டும் தீவிரவாதிகள் சீன்

ஏற்கனவே பாரதி கண்ணம்மா சீரியல் திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு தீவிரவாதிகளின் சீனால் வேற லெவலில் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் காவல்துறை அதிகாரியாக வீஜே லயா களம் இறங்குவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. தீவிரவாதிகளால் பாரதியின் மருத்துவமனை கைப்பற்றப்பட்டு அங்கே உள்ளவர்கள் அனைவரையும் சிறைபிடித்து வைத்துள்ளனர். டாக்டர் பாரதி உள்ளே இருக்கும் அமைச்சரை உயிரை காப்பாற்ற வேண்டும் என்று தீவிரவாதிகள் பாரதிக்கு டார்கெட் கொடுத்து இருக்கின்றனர். அப்படி பாரதி அமைச்சர் உயிரை காப்பாற்றிக் கொள்ளவில்லை என்றால் உள்ளே இருக்கும் ஒவ்வொருவரையும் சுட்டுக் கொன்று விடுவதாகவும் கூறி இருக்கின்றனர்.

போலீசாக லயா

போலீசாக லயா

தீவிரவாதிகளை எப்படி பாரதி அளிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அந்த சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லயா வெளியிட்ட வீடியோ தற்போது பலருடைய கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. அதில் லயா ஒரு காவல்துறை அதிகாரியாகவும் வருகிறார் என்று தெரிகிறது. அது மட்டுமல்லாமல் பல பிரபலங்கள் காவல்துறை உடையுடன் இருக்கின்றனர். அப்படி என்றால் தீவிரவாதிகளை பிடிப்பதற்காக கண்ணம்மா அல்லது பாரதியுடன் இவர்கள் ரகசியமாக பேசி தீவிரவாதியை பிடிப்பதற்காக தான் இந்த ஏற்பாடு என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+