திருமணமான ஒரு சில நாட்களில் ரித்திகா வெளியிட்ட பதிவு.. உருக்கமாக பிரார்த்திக்கும் ரசிகர்கள்!
சென்னை: விஜய் டிவியை சார்ந்த ரித்திகா சமீபத்தில் தான் திருமணம் முடிந்திருந்தார். இந்த நிலையில் அவருடைய பிறந்தநாளுக்கு அவர் செய்த உதவிக்காக ரசிகர்கள் அவருக்கு ஆக உருக்கமாக பிரார்த்திக்கிறார்கள்.
கணவரோடு ஹனிமூன் சென்று இருக்கும் ரித்திகா தன்னுடைய சார்பாக ஆதரவற்றோர் இல்லத்திற்கு தன்னுடைய பிறந்தநாளில் சாப்பாடு அனுப்பி வைத்திருக்கிறார். அதற்கு அவர்கள் நன்றி கூறிய வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

ஹனிமூன் கொண்டாட்டம்
விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வரும் ரித்திகா சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் திருமணத்தை முடித்து இருக்கிறார். தன்னுடைய காதல் கணவரான வினோத்துடன் இவர் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்று இருக்கிறார். இந்த நேரத்தில் இவருடைய பிறந்த நாள் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் ரித்திகாவிற்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அவர்கள் தற்போது ரித்திகா பிறந்த நாளில் செய்த உதவியை பகிர்ந்து வருகிறார்கள்.

ராஜா ராணி சீரியல் அறிமுகம்
ரித்திகாவின் சொந்த பெயர் தமிழ் செல்வி அதனால்தான் அவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் தமிழ் ரித்திகா என்று வைத்திருக்கிறார். முதல் முதலாக ரித்திகா ராஜா ராணி சீரியலில் அறிமுகமானார். இந்த சீரியலில் கதாநாயகன் சஞ்சீவ் தங்கை கேரக்டரில் நடித்திருப்பார். முதல் சீரியலில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்படாவிட்டாலும் இவருடைய நடிப்புக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது. அதை தொடர்ந்து இவருக்கு அதிகமாக சீரியல் வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த மாதிரி எதுவும் நடைபெறவில்லை. அதனால் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

வேறு எதுவும் இல்லை
அதுமட்டுமல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். எப்போதும் ஹோம்லியாக உடை அணியும் இவருக்கு இளைஞர்களின் ஆதரவு அமோகமாக இருந்து வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் பாலாவால் அதிகமாக கலாய்க்கப்பட்டு வருவார். இவர்கள் இருவரும் சகஜமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் பலரும் இவர்களுக்குள் காதல் இருக்கிறதா என்று செய்திகளை பரப்பி விட்டனர். ஆனால் அது குறித்து ரித்திகா விளக்கத்தையும் கொடுத்திருந்தார். நாங்கள் நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக தான் பேசி சிரிக்கிறோம். ஆனால் எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை என்று கூறியிருந்தார்.

பிறந்த நாளில் செய்த உதவி
இந்த நிலையில் ஒரு சில மாதங்களுக்கு முன்பே ரித்திகா திருமணம் செய்ய இருப்பது சமூக வலைதளத்தில் பரவி வந்தது. அப்போதும் ரசிகர்கள் பலரும் அப்போ பாலாவின் நிலைமை என்ன என்றும் பாலாவை ரித்திகா ஏமாற்றிவிட்டாரா? என்று கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் ரித்திகாவின் திருமணம் கேரளாவில் நடைபெற்றது. ஆனால் ரிசப்ஷன் சென்னையில் நடைபெற்றது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக பாலாவும் கலந்து கொண்டிருந்தார். ஆனால் அந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் காதல் ஃபெயிலியர் சாங் போட்டு வைரலாகி வருகின்றனர். இவர்கள் எங்களுக்குள் எதுவும் இல்லை என்று சொன்ன பிறகும் நெட்டிசன்கள் விட்ட பாடு இல்லை. இந்த நிலையில் இன்று ரித்திகாவின் பிறந்தநாள் அதற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். அந்த வகையில் ரித்திகாவின் ரசிகர்கள் ஆதரவற்றோர் இல்லங்களில் சாப்பாடு கொடுத்து இருக்கின்றனர். அவர்கள் ரித்திகாவிற்கு வாழ்த்துக்களை கூறி இருக்கின்றனர். இந்த வீடியோக்களை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து ரித்திகாவை பாராட்டி வருகிறார்கள்.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications