விஜய் டிவியின் பிரபல சீரியலில் அறிமுகமாகும் பிக்பாஸ் ஷிவின்... கடைசி நேரத்தில் அதிரடி மாற்றங்கள்
பாரதிகண்ணம்மா சீரியலில் சிறப்பு விருந்தினராக ஷிவின் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல்கள் பரவி வருகிறது.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக ஷிவினுக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் ஷிவின் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இன்னும் சில நாட்களில் பாரதிகண்ணம்மா சீரியலின் முதல் பாகம் முடிவடைய இருக்கும் நேரத்தில் ஷிவினுடைய அறிமுகத்தால் பல்வேறு ட்விஸ்ட் ஏற்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஷிவினுக்கு கிடைத்த முதல் வாய்ப்பு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் முதல் பகுதி முடிவடைய இறுதி அத்தியாயத்தை எட்டி இருக்கும் நிலையில், இந்த சீரியலில் முதல் முறையாக ஷிவின் கணேசன் கலந்து கொள்ளப் போகிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளராக இருந்த தாமரை செல்வி இந்த சீரியலில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இனி ஷிவினுடைய கேரக்டர் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் அதிகமாக கேள்வி எழுப்பி ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

இயக்குனர் கூறிய தகவல்
பாரதிகண்ணம்மா சீரியல் 4 வருடமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியல் கடைசி அத்தியாயத்தில் ஒளிபரப்பாகி வருகிறது என்ற தகவல்கள் முதல் முறையாக சேனலில் இருந்து அபிசியல் ஆக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியல் முதல் பாகம் முடிவடையாக இருக்கிறது என்ற தகவல்கள் பரவி வந்த நிலையில் சீரியலின் இயக்குனர் அதற்கு வாய்ப்பே இல்லை. ரசிகர்கள் எதிர்பார்த்த படித்தான் இந்த சீரியலை நாங்கள் முடிவடைய செய்ய போகிறோம். காரணம் பாரதியால் கண்ணம்மா அதிகமான கஷ்டங்களை பட்டிருப்பதால் அதற்கு பாரதி சரியான தண்டனை அனுபவித்து பிறகு தான் முடிவு வரும் என்று கூறியிருந்தார்.

ரசிகர்கள் நினைத்தது நடக்கவில்லை
பாரதிகண்ணம்மா சீரியலில் dna டெஸ்ட் ரிசல்ட் வெளியானதும் சீரியல் முடிந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனார். ஆனால் அதற்கு பிறகு கண்ணம்மா பாரதியை வேண்டாம் என்று கூறிவிட்டு கிராமத்திற்கு சென்று விட்டார். அங்கே பாரதியும் கண்ணம்மாவை தேடி சென்று பின்பு கிராமத்தில் மருத்துவமனையை கொண்டு வந்து ஆரம்பத்தில் எதிர்த்த ஊர் மக்களுக்கு நல்லது செய்து பின்பு அவர்களும் பாரதியை புரிந்து கொண்ட பிறகு கண்ணம்மாவுக்கு வந்த கலங்கத்தையும் பாரதி துடைத்து அதனால் தலையில் அடிபட்டு பழசை எல்லாம் மறந்த நிலையில் மீண்டும் பாரதிக்கு பழைய நினைவுகள் கண்ணம்மாவால் தான் வந்திருக்கிறது.

இறுதி அத்தியாயம்
இந்த நிலையில் கண்ணமா பாரதியை மன்னித்து ஏற்றுக்கொண்டு இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கின்றனர். இவர்களுடைய திருமணத்தோடு இந்த சீரியல் முடிவடைய இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவர்களுடைய திருமண எபிசோட் தற்போது ஷூட்டிங் செய்யப்பட்டு விட்ட நிலையில் அதில் ஷிவின் கலந்து கொண்டிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று தெரியவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த ஷிவினுக்கு தற்போது முதல் முறையாக டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் வாய்ப்பு கிடைத்திருப்பது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தான் கொடுத்திருக்கிறது. பலர் ஷிவனுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
-
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே












Click it and Unblock the Notifications