Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரட்சிதாவின் கணவர் சொன்னது போலவே நடந்து விட்டதே! நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ராபர்ட் செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து ஆறாவது வாரத்தில் வெளியேற்றப்பட்ட ராபர்ட் மாஸ்டர் கூறிய கருத்தை நெட்டிசன்கள் பலர் கலாய்த்து வருகின்றனர்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் ராபர்ட் மாஸ்டர் இருக்கும்போதே அவர் வெளியே வந்தால் இதைத்தான் செய்வார் என்று ரட்சிதாவின் கணவர் கூறி இருந்தார். அதேபோலவே தற்போது ராபர்ட் மாஸ்டர் செய்திருக்கிறார்.

மாற்றம் எதுவும் இல்லை

மாற்றம் எதுவும் இல்லை

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி, எட்டாவது வாரத்தில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இதில் கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் முதல் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் போட்டியாளர்கள் பலரையும் பற்றி தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். இதை ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இவர் இருக்கும் போது ரட்சிதாவின் கணவரான தினேஷ் வெளியே வந்து ராபர்ட் இப்படித்தான் சொல்வார் என்று கூறியிருந்தார். அவர் எதிர்பார்த்தபடியே முதல் வீடியோவில் பேசி இருக்கிறார் அதுவும் குறிப்பாக ரட்சிதாவின் விஷயத்தில் மாற்றம் எதுவும் நடக்கவில்லை.

அன்பு பிளாக் மெயில்

அன்பு பிளாக் மெயில்

ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ்க்குள் இருக்கும்போது சின்னத்திரை நடிகை ரட்சிதாவுடன் அதிகமாக உரிமை எடுத்து பழகி வந்தார். கடந்த வாரம் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விடுவோம் என்று தெரிந்தே ரட்சிதாவிடம் மீண்டும் மீண்டும் போன் நம்பர் கேட்டு தொந்தரவு செய்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் கிரஷ் என்று கூறிக்கொண்டு அவரிடம் அடிக்கடி உரிமையாக சண்டை போட்டு ஒரு நாள் பேசவில்லை என்றாலும் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து "அன்பு பிளாக்" மெயில் செய்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் இருந்தே ரட்சிதா ராபர்ட் மாஸ்டரின் பேச்சிகளை அந்த அளவிற்கு தவிர்க்காமல் இருந்து வந்தாலும் கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் அரசவை டாஸ்க்கில் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்து கொஞ்சம் உஷாராகி விட்டார்.

அன்றே கணித்த தினேஷ்

அன்றே கணித்த தினேஷ்

தன்னிடம் ரகசியத்தை சொல்லவில்லையே என அழுத பிறகு இப்படி விளையாடினால் நம்முடைய பெயர் கெட்டுப் போய்விடும் என்பதை புரிந்து கொண்டார் ரட்சிதா. அதற்குப் பிறகு நாமினேஷனில் ராபர்ட் மாஸ்டரின் பெயரை கூறியிருந்தார். அது அனைவருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது அதுபோல நேற்று எபிசோட்டில் கூட ராபர்ட் மாஸ்டர் சரியாக விளையாடவில்லை என்று கமல் முன்னிலையில் கூட தெரிவித்து இருந்தார் .இந்த நிலையில் நேற்று குறைவான வாக்குகள் பெற்ற அடிப்படையில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார் .ஆனால் ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவிடம் உள்ளே நடந்து கொள்ளும் விதத்தைப் பற்றி ஏற்கனவே பேட்டி ஒன்றில் பேசிய தினேஷ், ராபர்ட் வெளியே வந்ததும் நான் தப்பாக எதுவும் நான் பழகவில்லை. நான் நட்பாக தான் பழகினேன் என்று தான் கூறுவார் என ரட்சிதாவின் கணவர் ஏற்கனவே கூறியிருந்தார்.

நட்பு மட்டும்தானாம்

நட்பு மட்டும்தானாம்

அது மட்டுமல்லாமல் அந்த வீடியோவின் தொடக்கத்தில் எனக்கு வாக்களித்த ரசிகர்களுக்கு ரொம்பவே நன்றி, அதுபோல இந்த நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காகவே நான் ஏற்கனவே சொல்லிக் கொண்டுதான் போனேன் ஃபன் பண்ணுவதற்காக தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்று அதுபோலத்தான் இருந்தேன் அதுபோல நான் வெளியே வந்ததும் எனக்கு சந்தோசம் தான். உள்ளே இருக்கும்போது எப்படி சப்போர்ட் பண்ணு நீங்களோ அதுபோலவே சினிமா துறையில் எனக்கு சப்போர்ட் பண்ணுங்க என்றும் "ரட்சிதாவுக்கும் எனக்கும் இருப்பது பிரண்ட்ஷிப் தான் ஆனால் வெளியே இருந்து பார்க்கிறவங்க தான் வேற மாதிரி பார்த்துட்டு இருக்கீங்க. ரட்சிதாவுக்கு எதை யார் கிட்ட சொல்லனும்னு தவிச்சுக்கிட்டு இருந்தாங்க அந்த டைம்ல நான் பேச ஆரம்பிச்சேன். எங்களுக்குள் நல்ல பிரண்ட்ஷிப் வந்து இருக்கு" அது போல விக்ரமனை பத்தி சொல்லணும்னா எப்ப யாரு என்ன பண்ணுவாங்கன்னு காத்துக்கிட்டே இருந்து அதில் இருக்கும் குறைகளை சொல்வதற்காகவே பார்த்துக் கொண்டே இருப்பார்.
அதுபோல விக்ரமன் தான் பண்ணும் குறையை மறைப்பதற்காக நிறைய விஷயங்களை பண்ணுறார். அசீம் எடுத்த எடுப்பிலேயே கோபப்படுகிறார். ஆனால் இவங்க இரண்டு பேருமே நம்ம வெளியே தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று கூறி, கண்டிப்பா நான் இன்டர்வியூவில் நிறைய பேசுவேன் என முடித்திருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து கடைசியில் தினேஷ் சொன்னது போலவே நான் ரட்சிதா உடன் நட்பாக தான் பழகினோம் என்று ராபர்ட் சொல்லிட்டாரே என கலாய்த்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+