‘ஜன நாயகன்’ ரிலீஸ் குழப்பம்… விஜய்யை மையமாக வைத்து களமிறங்கிய ஜீ தமிழ்? அடுத்த பஞ்சாயத்து?
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருந்து அரசியல் பாதையில் அடியெடுத்து வைத்த நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜன நாயகன்'. இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் சேனல் வாங்கிய தகவல்கள் பரவின.
மேலும், மலேசியாவில் நடைபெற்ற 'ஜன நாயகன்' படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியையும் சில தினங்களுக்கு முன் ஜீ தமிழ் நேரடியாகவும், மறுஒளிபரப்பாகவும் ஒளிபரப்பியது. அந்த தினத்தில் விஜய் டிவி வழக்கமாக ஒளிபரப்பும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து எபிசோடை மறு ஒளிபரப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டிஆர்பி ரேட்டிங் போட்டியில் ஜீ தமிழ் தைரியமாக களமிறங்கியது என்று சின்னத்திரை வட்டாரங்களில் பேசப்பட்டது.

இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் வெளியீடு தொடர்பாக தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், படம் எப்போது திரைக்கு வரும் என்பது குறித்த தெளிவான முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. படம் ரிலீஸ் ஆகாமல் தாமதமாகும் சூழலில், இதற்காக பெரிய தொகையை செலவழித்து உரிமை வாங்கிய ஜீ தமிழ் சேனலும் குழப்பமான நிலையில் இருப்பதாக சேனல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் பெரிய அளவில் புரமோஷன் செய்து, டிவி மற்றும் ஓடிடி ஒளிபரப்பின் மூலம் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கணக்கில் சேனல் இருந்த நிலையில், தற்போதைய நிலைமை அவர்களை சங்கடப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ப்ரமோஷன் அரசியல்
ஜன நாயகன் படத்தின் உரிமையை வாங்கும் போதே, அடுத்த சில மாதங்கள் குறிப்பாக தேர்தல் வரையிலும், விஜய் மற்றும் படம் தொடர்பான பேசுபொருள் தொடர்ந்து சேனலில் வரும்படி கவனமாக திட்டமிட வேண்டும் என மேலிடத்தில் இருந்து ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதனால்தான் சமீப காலமாக ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சில இசை மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் விஜய் பற்றிய பேச்சு மற்றும் விஜய் பாடல்கள், அவரது சினிமா பயணத்தை நினைவுபடுத்தும் நிகழ்ச்சிகள் அதிகமாக இடம்பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
'சரிகமப' போன்ற இசை நிகழ்ச்சிகளில் விஜய்யின் ஹிட் படங்களின் பாடல்கள் அடிக்கடி பாடப்படுவதும், தொகுப்பாளர்கள் விஜய்யை புகழும் விதமாக பேசுவதும் ஒரு திட்டமிட்ட ப்ரமோஷன் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல், புதிதாக தொடங்கப்பட்ட 'கில்லாடி ஜோடிஸ்' என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவை கொண்டு வந்திருப்பதும், விஜய் பெயரைச் சுற்றி சேனல் உருவாக்கும் ஒரு பிராண்ட் இமேஜ் முயற்சியின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.
அரசியல் பின்னணியில் அதிகரிக்கும் கவனம்
சினிமா நட்சத்திரமாக இருந்த விஜய், அரசியல் களத்தில் இறங்கிய பிறகு அவரது ஒவ்வொரு பொது நிகழ்வில் அவர் பேசுவது அதிகமாக பார்க்கப்படுகின்றன. 'ஜன நாயகன்' என்ற தலைப்பே அரசியல் நிழலுடன் இருப்பதாக பலர் விமர்சித்த நிலையில், அந்த படத்தின் டிவி உரிமையை ஜீ தமிழ் வாங்கியது கூட அரசியல் ரீதியான விவாதங்களை கிளப்பியது.
குறிப்பாக தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஒரு தனி அரசியல் அடையாளத்தை உருவாக்க முயலும் விஜய்யின் படத்தை மையமாக வைத்து டிவி சேனல் தொடர்ச்சியாக ப்ரோமொஷன் வழங்குவது, எதிர்காலத்தில் சில சிக்கல்களை உருவாக்கலாம் என்ற கருத்தும் சின்னத்திரை வட்டாரங்களில் நிலவுகிறது.
-
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு? -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்? -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான்











Click it and Unblock the Notifications