Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவாரூர், திருப்பரங்குன்றத்துக்கு எப்போது இடைத் தேர்தல்.. ஹைகோர்ட் அதிரடி கேள்வி

2 தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என மதுரை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தலை நடத்துவீர்கள் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

திமுகவின் கருணாநிதி மற்றும் அதிமுகவின் போஸ் இருவரும் இறந்துவிட்டதால், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் உடனடியாக நடத்தப்படவில்லை.

When Thiruparankundram, Thiruvarur ByElection: Madurai High Court

எனவே கே.கே. ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றினை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். அதில், "பருவமழையால், தற்போது தேர்தல் நடத்த வேண்டாம் என தலைமைத் தேர்தல் தேர்தல் கமிஷனுக்கு, தமிழக அரசு பரிந்துரைத்தது. இது ஏற்புடையதல்ல.

தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து, 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

[நல்ல வேகம்.. பெரிய வெளிச்சம்.. 2 பறக்கும் தட்டுகளை பார்த்தோம்.. விமானிகள் பரபர வாக்குமூலம்!]

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது இது சம்பந்தமாக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு நீதிபதிகள் சரமாரியான கேள்வி எழுப்பினார்கள். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னென்ன?

எப்போது இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்படும்? மேலும் அந்த 2 தொகுதிக்கான தேர்தல் கால அட்டவணை ஏதாவது இருக்கிறதா? அப்படி இருந்தால் அதனை நவம்பர் 26-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அட்டவணை தாக்கல் செய்யப்படும் அன்றைய தினத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+