செங்கோட்டையன் முடிவால்.. துள்ளி குதித்த டெல்லி.. பாஜகவிற்கு இவ்வளவு சாதகமா.. ஸ்டன் ஆன எடப்பாடி?
சென்னை: அதிமுகவில் இருந்த செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் அவர் தற்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைகளை இந்த முடிவு உற்சாகபடுத்தி உள்ளதாம். ஏன்? காரணம் இருக்கிறது!
தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்துள்ளார். நேற்று முதல் நாள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவர் நேற்று தவெகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் செங்கோட்டையன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். தவெகவில் இணையும் முன் நேற்று இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்ற கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அதிமுக - செங்கோட்டையன்
பல ஆண்டுகளாக அதிமுகவில் இருந்த செங்கோட்டையன், தற்போது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இந்த விலகல் அதிமுகவில், குறிப்பாக அதன் தலைவர் எடப்பாடி பழனிசாமி மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி விஜயுடன் கூட்டணி வைக்க தீவிரமாக முயன்று வந்தார். எப்படியாவது தவெக உடன் கூட்டணி வைத்து விடலாம் என்று நினைத்தார்.
ஒரு தவெக கொடி கண்ணில் பட்டால் கூட.. பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க.. ஸ்டாலின் அவர்களே கேட்டுச்சா.. சத்தம் கேட்குதா.. மக்களே பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க.. பாருங்க என்ன நடக்குதுன்னு என்றெல்லாம் ஆசையாக கூறினார். மே மாத விடுமுறையில் உள்ள பையன்.. ஐஸ் வண்டி சத்தம் கேட்டதும் வேகமாக வெளியே ஓடுவது போலத்தான் எடப்பாடி ஆர்வமாக இருந்தார்.
ஆனால் அந்த பெல் சத்தம் ஐஸ் வண்டி சத்தம் அல்ல.. இரும்பு, ஈயம், பித்தளை வாங்கும் வண்டியின் சத்தம் என்று தெரிந்து ஏமாந்து போகும் குழந்தை போல எடப்பாடி ஏமாந்து உள்ளார். செங்கோட்டையன் தவெக சென்றதால் எடப்பாடியின் அதிமுக - தவெக கூட்டணி உருவாகாமல் போகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
செங்கோட்டையன் விட மாட்டார்
செங்கோட்டையன் எப்படியும் எடப்பாடி உடன் கூட்டணி வைக்க விட மாட்டார். எடப்பாடி தலைமை வேண்டாம், எடப்பாடி முதல்வர் வேட்பாளர் வேண்டாம், ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வைத்தவர்தான் செங்கோட்டையன். அதே செங்கோட்டையன் இப்போது எடப்பாடியை முன்னிறுத்தி அதிமுக - தவெக கூட்டணி உருவாக அனுமதிக்க மாட்டார்.
அதேபோல் முதல்வர் வேட்பாளர் இல்லாமல் கூட்டணி அமைய எடப்பாடி பழனிசாமியும் விரும்ப மாட்டார். இதனால் செங்கோட்டையன் வரவால் இந்த கூட்டணி உருவாகாமல் போய்விட்டது.
பாஜக ஹாப்பி அண்ணாச்சி
இதனால் பாஜக உற்சாகம் அடைந்துள்ளது. எடப்பாடிக்கு இனி வேறு சான்ஸ் இல்லை, சாய்ஸ் இல்லை. பாஜக சொல்வதை கேட்க வேண்டும். கூட்டணியை விட்டு வெளியே செல்ல முடியாது. கட்சியே உடையும் நிலையில் உள்ளது.
இதனால் எடப்பாடிக்கு பாஜகவை தவிர எந்த வழியும் இல்லை. இதை பார்த்தே டெல்லி தலைகள் குஷியாக இருக்கிறார்களாம். அதிமுக இப்போது பாதாளத்தில் உள்ளது. இதைவிட அதிமுகவை இழுத்த இழுப்பிற்கு கொண்டு செல்ல வேறு சூழல் வராது. நமக்குத்தான் இப்போது பார்கெயினிங் பவர் இருக்கு.. இனி ஆட்டத்தை பாருங்க என்று சந்தோஷத்தில் இருக்கிறதாம்.
-
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
அஜித்தை உள்ளே இழுத்த சீமான்! பொன்ராஜ் விஷயத்தில்.. விஜய்க்கு ஆதரவளிக்காததற்கு காரணம் இதுதான் -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம்












Click it and Unblock the Notifications