"ஒரே நாடு, ஒரே கட்சி" பாஜகவின் உண்மையான நோக்கம் இதுதான்.. புட்டுவைத்த சுப.வீரபாண்டியன்!
திருநெல்வேலி: ஒரே நாடு ஒரே கட்சி என்பது தான் பாஜகவின் உண்மையான நோக்கம் என்று திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
நெல்லை வண்ணார்பேட்டையில் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் திராவிட நட்பு கழகம் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சுப.வீரபாண்டியன் பேசுகையில், யாரெல்லாம் பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை என்று கருதுகிறார்களோ அவர்களெல்லாம் கைகோர்க்கும் நேரம் இது. இந்த சூழ்நிலையில் நாம் நல்ல முடிவு எடுக்கவில்லை என்றால் அழிந்துவிடுவோம். பாஜகவின் நோக்கம் முதலில் இஸ்லாமியர்களை அழிப்பது, பின்பு கிறிஸ்தவர்களை அழிப்பது, கேரளாவில் கம்யூனிசத்தை அழிப்பது, தமிழகத்தில் திராவிடத்தை அழிப்பது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை.

பாஜகவின் நோக்கம்
எனவே தான் தற்போது அவர்கள் 'ஒரே நாடு ஒரே மொழி' என்று பேசுகிறார்கள். ஆனால் அது அவர்கள் நோக்கம் அல்ல. ' ஒரே நாடு ஒரே கட்சி' என்பதுதான் அவர்களின் உண்மையான நோக்கம். 'மாநில சுயாட்சிதான் இந்தியாவின் எதிர்காலம்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளாவில் மிக அழுத்தமாக கூறியுள்ளார், மாநில சுயாட்சி கருத்து இந்தியா முழுவதும் பரவுமானால் நாட்டில் இருந்து பாஜக விரட்டி அடிக்கப்படும்.

ஜெயலலிதா பற்றி கருத்து
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என எச்சரிக்கிறேன். மதத்திற்கு எதிராக இருங்கள் என்று நாங்கள் கூறவில்லை. அந்த மதத்தோடு கரைந்து போகாதீர்கள் என்று தான் வலியுறுத்தி வருகிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட ஒரு சில நேரங்களில் மத்திய அரசை எதிர்த்து பேசியுள்ளார்.

இபிஎஸ், ஓபிஎஸ்
ஆனால் அதிமுக என்றால் அமித் ஷா திமுக-வா என்று கேட்கும் நிலையில் அதிமுக உள்ளது. எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் நீதிமன்றம் செல்வது தவிர வேறு எந்த வேலையும் இல்லாமல் இருக்கிறார்கள். இந்த நிலைக்கு அவர்களை ஆளாக்கியவர்கள் யார் என்பதை கூட புரியாமல் உள்ளார்கள். அவர்களும் முடிந்தால் திராவிட நட்பு கழகத்தில் வந்து சேரலாம்.

திராவிடர்கள்
இனத்தால் நாம் திராவிடர்கள் என்று சொல்லவில்லை, சித்தாந்தத்தால் கருத்தியலால் திராவிடனாக இருங்கள் என்று முக ஸ்டாலின் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். திராவிடம் என்றால் சமூகநீதி, சமத்துவம், பெண் விடுதலை. திராவிடனாய் -நண்பர்களாய் இணைவோம். இதை நாடு முழுவதும் எடுத்துச் செல்வோம் என்று தெரிவித்தார்.
-
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications