சனி வக்ர பெயர்ச்சி 2022: மகரத்தில் இருந்து சூரியனை பார்க்கும் சனி..யாருக்கு வெற்றி தேடி வரும்?
ஜாதகத்தில் சூரியன் சனி சேர்க்கை இருந்தால் அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் என்று சொல்வார்கள். கடக ராசியில் உள்ள சூரியனை பார்க்கும் மகர சனியால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.
சென்னை: சனியும் செவ்வாயும் பகை கிரகங்கள் ஒரு ராசியில் சஞ்சரித்தாலோ பார்த்துக்கொண்டாலோ பிரச்சினைதான். அதுபோல சூரியனும் சனியும் ஒரே ராசியில் சஞ்சரித்தாலோ எதிர் எதிராக பார்த்துக்கொண்டாலோ பாதிப்புதான். கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியனுக்கு மகர ராசியில் பயணிக்கும் வக்ர சனியின் பார்வை கிடைக்கிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பாதிப்பு வரும் பரிகாரங்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் பார்க்கலாம்.
ஜோதிடத்தில் சூரியன் சனிக்குப் பகைவன், சனி சூரியனுக்குப் பகைவன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் சனி சேர்க்கை இருந்தால் அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் என்று சொல்வார்கள்.
கோச்சார ரீதியாக சூரியன் சனி சேர்க்கை மற்றும் பார்வையானது சில ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் தொழிலில் பாதிப்பை உருவாக்கும். இந்த கால கட்டத்தில் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

மேஷம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே,சூரியன் உங்க ராசிக்கு பூர்வ புண்ணியாதிபதி. இந்த மாதம் நான்காவது வீட்டில் பயணம் செய்யும் சூரியன் மீது வக்ரமடைந்த சனிபகவானின் பார்வை கிடைக்கிறது. குழந்தைகளின் திருமண விசயமாக பேசி முடிவு எடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை பிள்ளைகளையும் ஆலோசனை செய்வது அவசியம். வியாபாரம் நன்றாக லாபகரமாக இருக்கும். வேலையில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும். கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருப்பது அவசியம். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். ஆடி அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

ரிஷபம்
சுக்கிர பகவானை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, சூரியன் இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீட்டிற்கு பயணம் செய்வதால் பேச்சில் இருந்த கடுமை நீங்கும். அலுவலகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் சமாளித்து வெற்றிகரமாக செய்வீர்கள். உங்களுக்கு நன்மைகள் அதிகம் நிறைந்த மாதமாக அமையும். மாற்றுத்திறனாளிகள் குறிப்பாக கண் தெரியாதவர்கள், காதுகேளாதவர்களுக்கு உதவி செய்ய நன்மைகள் அதிகம் நடைபெறும். சூரியனுக்கு சனியின் பார்வை கிடைப்பதால் யாருக்கும் பணம் கடனாகக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.

மிதுனம்
சூரியன் உங்கள் ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு பயணம் செய்கிறார். உடல் உஷ்ண நோய்கள் நீங்கும். இரண்டாம் வீட்டில் உள்ள சூரியன் மீது சனிபகவானின் பார்வை விழுவதால் பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் நிதானம் தேவை. இளைய சகோதர சகோதரிகளால் உங்களுக்கு செலவுகள் வரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசும் போது நிதானம் அவசியம். கோபத்தைக்கட்டுப்படுத்துங்கள்.

கடகம்
விரைய ஸ்தானத்தில் பயணித்த சூரியன் உங்கள் ராசிக்கு வந்துள்ளார். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். சின்ன சின்ன விசயத்திற்கெல்லாம் கோபப்படுவீர்கள். கோர்ட் வழக்குகளில் கவனம் தேவை அலட்சியம் வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையை சின்னச் சின்ன சண்டைகள் வரலாம். கண்டகச்சனியால் ஞாபக மறதி ஏற்படும். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். உங்கள் ராசியில் உள்ள சூரியன் மீது சனிபகவான் பார்வை விழுவதால் பேச்சில் கோபத்தை குறைத்துக்கொள்ளுங்கள். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. இரவு நேர பயணங்களை தவிர்க்கவும்.

சிம்மம்
ராசிநாதன் சூரியன் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். ஆறாம் வீட்டில் உள்ள சனியின் பார்வை படுவதால் அலைச்சல் டென்சன் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் சுமை ஏற்படும். வேலையில் கவனம் தேவை. தூக்க குறைபாடு ஏற்படும். பயணங்களின் போது கவனம் தேவை. குறிப்பாக இரவு நேர பயணங்களை தவிர்த்து விடவும். ஞாயிறு கிழமைகளில் பைரவரை வணங்க நன்மைகள் நடைபெறும்.

கன்னி
சூரியன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். சனியின் பார்வையில் சூரியன் இருந்தாலும் நிதி விவகாரங்களில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதுவும் இருக்காது என்றாலும் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவி இடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். நீண்ட நாட்களுக்கு முன்பு கடனாக கொடுத்த பணம் திரும்ப வர வாய்ப்பு உள்ளது. ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வணங்க பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

துலாம்
பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சூரியன் பயணம் செய்கிறார். சூரியன் மீது சனியின் பார்வை விழுவதால் வேலையில் கவனம் தேவை. வேலையில் கூடுதல் பொறுப்பும் சுமையும் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளைப் பற்றி விமர்சித்து பேச வேண்டாம். அப்பாவிற்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பண வரவு அதிகரிக்கும். ஷேர்மார்க்கெட் மூலம் லாபம் வரும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு சாதகமாக பயணம் செய்வதால் நிதி நெருக்கடிகள் நீங்கும் கடனை பைசல் செய்யலாம். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுங்கள்.

விருச்சிகம்
எட்டாம் வீட்டில் பயணித்த சூரியன் 9ஆம் வீட்டிற்கு வந்துள்ளார். சூரியனுக்கு சனியின் பார்வை கிடைப்பதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திடீர் மருத்துவ செலவுகள் வரும். சொத்து பாகப்பிரிவினை சாதகமாக முடியும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சகோதரன் சகோதரிகளிடைய இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். ஏழை நோயாளிகளுக்கு உதவி செய்யுங்கள் பாதிப்புகள் குறையும்.

தனுசு
சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். அஷ்டம ஸ்தானத்தில் பயணிக்கும் சூரியன் மீது இரண்டாம் வீட்டில் உள்ள சனிபகவானின் பார்வை விடுவதால் பணம் விசயத்தில் கவனம் தேவை. செலவில் சிக்கனம் தேவை. அப்பா வழியில் திடீர் மருத்துவ செலவுகள் வரும். எட்டாம் வீட்டில் பயணித்த செவ்வாய் 9ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைவதால் தடைகள் விலகும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும்.

மகரம்
சூரியன் இந்த மாதம் முழுவதும் உங்களுடைய களத்திர ஸ்தானமான ஏழாவது வீட்டில் பயணம் செய்கிறார். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பெற்றோர்களின் சொல்பேச்சு கேட்டு நடப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை. அரசு தொடர்பான காரியங்களில் கவனம். உங்கள் ராசியில் அமர்ந்துள்ள ராசிநாதன் சனிபகவானின் பார்வை நேர் எதிரே உள்ள சூரியன் மீது விழுகிறது.பயணங்களின் போது கவனமாக இருக்கவும். சொத்து விற்பனை, பாகப்பிரிவினையில் கவனம் தேவை. அலுவலகத்தில் உயரதிகாரிகளிடம் பேசும் போது கவனம் தேவை. ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து வணங்குங்கள் பாதிப்புகள் நீங்கும். குல தெய்வ வழிபாடு மனதில் நிம்மதி சந்தோஷத்தை கொடுக்கும்.

கும்பம்
உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இருந்த சூரியன் ஆறாவது வீட்டில் பயணம் செய்வதால் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து விடவும். இரவு நேர பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். அதே நேரத்தில் சூரியன் மீது சனியின் பார்வை விழுவதால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன கருத்து மோதல்கள் ஏற்படும் விட்டுக்கொடுத்து செல்லவும்.ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபடுவது மன நிம்மதியைக் கொடுக்கும்.

மீனம்
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்வதால் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உடல் ரீதியாக உங்களுக்கு சில தொந்தரவுகள் ஏற்படும். திடீர் மருத்துவ செலவுகளும் வரும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சனியின் பார்வை ஐந்தாம் வீட்டில் உள்ள சூரியன் மீது விழுவதால் கர்ப்பிணி பெண்கள் அதிக கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். உங்களுக்கு வெற்றி அதிகரிக்க தினசரி சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications