வார ராசி பலன்: கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. ரொம்ப கவனம்
Kadagam Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கிரக நிலைகள்
புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் நிறைவடைந்து பிப்ரவரி 13 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. சூரியன் கும்பத்திற்கு பிரவேஷம் ஆகிறார். சூரியன், புதன், சுக்கிரன், ராகு, திரிகோணத்தில் குரு வக்கிரமாக அமர்கிறார். இந்த 4 கிரகங்கள் சேருவது நல்லது இல்லை. அதுவும், புதனும் ராகுவும், சுக்கிரனும் ராகுவும், சூரியனும் ராகுவும் சேருவது மோசமான நிலையாகும். இப்போது 4 கிரகங்களும் சேருவது பொதுவாக நன்மையைத் தராது. சனியின் வீட்டில் 4 கிரகங்கள் இருந்தாலும் குருவின் பார்வை பலத்தால் இருப்பதால் சிறு சிறு பிரச்சனைகள் நீங்கும்.
இந்த வார ராசி பலன்
சிங்கப்பூர், சிவகங்கை, தேவக்கோட்டை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் கோயில்களில் தீ விபத்து, அசம்பாவிதங்கள், சிலிண்டர் வெடிப்பது, அரசியல் கட்டடங்களில் தாக்குதல், விமான விபத்து போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கலை உலகம் சார்ந்த நபரின் உயிரிழப்பு ஏற்படும். இந்த வாரத்தில் மகரம், ரிஷபம், கன்னி ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன் (Kadagam Rasi Palan)
கடகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். மாசி மாதத்தில் அஷ்டமத்தில் சூரியன், ராகு, செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் உள்ளன. வண்டி வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது. மாசி மாதம் முழுவதும் விநாயகர், அனுமன் வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
வழிபாடு
கணபதி காரியசித்தி மாலை, அனுமன் சாலிஷா கேட்பது, படிப்பது ஏற்றத்தைத் தரும். கையெழுத்து போடுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்வது நல்லது. அரசுத் துறை அரசியல்வாதிகள், மேலதிகாரிகள் அதீத கவனமாக இருக்க வேண்டும். தொழில் விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.
ஆரோக்கியம்
அடிவயிறு, உஷ்ணம் , நண்பர்களால் பிரச்சனை, பெரியவர்களின் ஆரோக்கியத்தில் பிரச்சனை, பயணங்களில் பிரச்சனை, மூத்தவர்களால் சிறு பாதிப்புகள் வரக்கூடிய சூழல் உண்டு. 7 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் குடும்ப வாழ்க்கையில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். கண்ணில் முகத்தில் அடிபடுவது, சூட்டுக் காயங்கள், வெட்டிக் காயங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
பொறுமை
எந்த முடிவுகளாக இருந்தாலும் பொறுமையாக எடுப்பது நல்லது. கோபத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற எண்ணம் தோன்றும். கணவன், மனைவி விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சனி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும்போது புதிய விஷயங்களை ஆராய்ச்சி செய்வது, எடுத்து செய்வது போன்ற திட்டமிடல் இருக்கும். இந்த காலகட்டத்தில் ராஜகோபால சுவாமியை வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
வழிபாடு
பெண்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. வாழ்க்கைத் துணைக்கு பெரிய வெற்றி ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். யோக பலன்களை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். வாகனத்தில் சாகசங்களைத் தவிர்ப்பது நல்லது. தேக ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை அலட்சியம் செய்யாமல் இருப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். ருத்ரன் வழிபாடு நன்மையைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications