Kanni Rasi Palan: பணக்கார யோகம் பெறும் கன்னி ராசி.. நினைத்து பார்க்காத அதிர்ஷ்டம் கொட்டும்
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம் என்பது மாசி மாதம் ஆகும். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

சனிப்பெயர்ச்சி
வாக்கியப்படி மார்ச் 6 ஆம் தேதி காலை 8.26 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 17 ஆம் தேதி மயானக் கொள்ளை நடைபெறும். மார்ச் 3 ஆம் தேதி சந்திரகிரகணம் மாலை 3.30 மணி முதல் 6.47 வரை கிரகணம் நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் விரதம், வழிபாடு செய்வது நன்மையைத் தரும். இதைத்தொடர்ந்து, மாசி மகம் நடைபெறவுள்ளது. கும்பத்தில் சூரியன் இருந்து தன் சொந்த வீட்டைப் பார்ப்பார். இந்த மாதத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் குறித்து பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த மாசி மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்துப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்காரர்களுக்கு கெளரவம் ஏற்படும். புதிய பொறுப்புகள், பதவிகளுக்கு வரும் யோகம் உண்டாகும். எல்லா விஷயங்களுமே அற்புதமாக இருக்கும். வெளியிடம், உத்தியோகம், தொழில், வண்டி வாகனம், வியாபாரம் என அனைத்துமே நன்றாக இருக்கும். புதிய ஏற்றங்கள் ஏற்படும். எதிர்பார்க்காத இடங்களில் இருந்து நன்மைகள் உண்டாகும்.
மாற்றம், முன்னேற்றம்
இடமாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம், உத்தியோக மாற்றம் என அனைத்து மாற்றங்களும் ஏற்படும் அற்புதமான காலகட்டம். நீங்கள் நினைத்து பார்க்காத அளவுக்கு நன்மைகள் ஏற்படும். யோக பலன்களை அதிகமாகப் பெறுவீர்கள். செல்வாக்கு கூடும். இழந்த பெருமைகளை திரும்பப் பெறும் ஆச்சரியமான யோகம் உண்டாகும்.
கவனம்
சனி இருப்பதால் குடும்ப விஷயத்தில் மட்டும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் உங்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில், உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதைத் தவிர்த்துக் கொள்வதும் நன்மை பயக்கும். அதில் மிகுந்த கவனம் தேவை. இல்லையெனில் பெரிய பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.
சொத்துகள் வாங்கும் யோகம்
வண்டி வாகனம் வாங்குவது, வீடு, நிலம் வாங்குவது, ஆடை, ஆபரணங்கள் வாங்குவது என அதிர்ஷ்டம் நிறைந்த காலகட்மாக இருக்கும். அனைத்து விதமான ஏற்றங்ளும் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். அதற்கான முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.
சுபவிரயம்
வெளிநாட்டுத் தொடர்புகள் மூலமாக நல்ல லாபங்கள் ஏற்படும். வேற்று மொழி மனிதர்களால் அதிகமான ஆதாயம் ஏற்படும். யோக பலத்தை அதிகளவில் பெறுவீர்கள். சுப விரயம் ஏற்படும். விரய ஸ்தானதிபதி விரயத்தைப் பார்க்கிறது. மாசி மாதம் முழுவதும் மதிய வேளைகளில் சாப்பாடு மற்றும் ஊறுகாய் தானமாகக் கொடுப்பது ஏற்றத்தைத் தரும்.
வழிபாடு
வயிறு சம்பந்தப்பட்ட விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications