Magaram: மகர ராசிக்கு வாயில் தான் கண்டமே.. சிக்கலில் சிக்கும் நேரம்.. கவனம்
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம் என்பது மாசி மாதம் ஆகும். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

சனிப்பெயர்ச்சி
வாக்கியப்படி மார்ச் 6 ஆம் தேதி காலை 8.26 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 17 ஆம் தேதி மயானக் கொள்ளை நடைபெறும். மார்ச் 3 ஆம் தேதி சந்திரகிரகணம் மாலை 3.30 மணி முதல் 6.47 வரை கிரகணம் நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் விரதம், வழிபாடு செய்வது நன்மையைத் தரும். இதைத்தொடர்ந்து, மாசி மகம் நடைபெறவுள்ளது.
கும்பத்தில் சூரியன் இருந்து தன் சொந்த வீட்டைப் பார்ப்பார். இந்த மாதத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் குறித்து பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த மாசி மாதத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்துப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன்
மகர ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சனி பரிபூரணமாக விலகப் போகிறது. வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாகச் செல்ல வேண்டும். சாகசங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. அஷ்டமத்தில் இருக்கும் கேது ஏதாவதொரு யோசனையை கொடுத்துக் கொண்டே இருக்கும். தூக்கம் கெடும். நிறைய சப்ளிமென்டுகள், பழம், காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பேச்சில் கவனம்
வேலை, தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என எல்லா இடங்களிலும் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வாக்கு ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன், ராகு ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. மாசி மாதத்தில் எப்போதுமே சூடு, சொரணை என இல்லாமல் கொஞ்சம் இணக்கமாகச் சென்று கொள்வது நன்மை பயக்கும். பயணங்கள் சமயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
கவனம்
தவறே செய்யவில்லை என்றாலும் நீங்கல் சிக்கிக் கொள்ளும் சூழல் உண்டாகும். அரசியல்வாதிகள், அரசுத் துறையினர், சினிமா துறையினர் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. சளி தொந்தரவு, சுவாசக் கோளாறுகள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. ரத்தத்தில் பரவும் தொற்று நோய் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
எந்தவொரு காரியத்தை செய்வதற்கு முன்பும் ஒருமுறைக்கு, இருமுறை யோசித்து செய்வது நன்மையைத் தரும். திட்டமிட்டுச் செய்யும் காரியங்களில் ஏற்றம் உண்டாகும். தொற்றுநோய் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. சிவன் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். சிவ மந்திரங்களை கேட்பது சொல்வது, இந்திராட்சி கவசம், கோளார்பதிகம் சொல்வதும் அற்புதமான நன்மைகளைத் தரும்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications