Thulam Rasi Palan: அடித்தாடும் துலாம் ராசி.. எல்லாமே ஜெயம்.. அதிர்ஷ்ட மழை கொட்டும்
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம் என்பது மாசி மாதம் ஆகும். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

சனிப்பெயர்ச்சி
வாக்கியப்படி மார்ச் 6 ஆம் தேதி காலை 8.26 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 17 ஆம் தேதி மயானக் கொள்ளை நடைபெறும். மார்ச் 3 ஆம் தேதி சந்திரகிரகணம் மாலை 3.30 மணி முதல் 6.47 வரை கிரகணம் நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் விரதம், வழிபாடு செய்வது நன்மையைத் தரும். இதைத்தொடர்ந்து, மாசி மகம் நடைபெறவுள்ளது.
கும்பத்தில் சூரியன் இருந்து தன் சொந்த வீட்டைப் பார்ப்பார். இந்த மாதத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் குறித்து பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த மாசி மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்துப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத விஷயங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். லாபத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்க கூடாது. அபிராமியில் 40, 59, 75 பாடல்களைப் படிப்பது நல்லது. செவ்வாய் உச்சமாக இருப்பதால் மற்றவர்களால் கணவன், மனைவிக்குள் சண்டைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
வார்த்தையில் கவனம்
குடும்ப விஷயத்தில் வெள்ளைக் கொடி காட்டுவது நல்லது. சண்டை, சச்சரவுகளில் ஈடுபடுவது, கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. பண வரவுக்கான உத்தரவாதம் ஏற்படும். சனி பகவான் 6 இல் இருப்பதால் பேச்சில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும்.
லாபம் ஏற்படும்
யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லம் படிப்படியாக மாறும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கும். யோகம், சந்தோஷம், அனுகூலம், லாபம் ஏற்படக்கூடிய அற்புதமான நேரம் இது. பூர்வ புண்ணிய தோஷம் இருப்பதால் அபிராமி அந்தாதியைப் படிப்பது நன்மை பயக்கும். மற்றபடி அனைத்து விஷயங்களிலும் யோகம் உண்டாகும்.
தொழில்
புதிதாக தொழில், வியாபாரத்தை ஆரம்பிக்கும் யோகம் உண்டாகும். வார்த்தை, குடும்பம், வெளியிடம், தொழில், வியாபாரம், நண்பர்களுக்கு ஆலோசனை கூறுவதைத் தவிர்ப்பது நல்லது. சுக்கிரன் அதிபதியாக இருப்பதால் நிறைய படிப்பீர்கள், நிறைய விஷயங்கள் உங்களுக்குத் தெரியும். செவ்வாய் தற்போது உச்சமாக இருப்பதால் வம்பு வழக்கில் சிக்க வைக்கும் என்பதால் கவனம் தேவை.
தொட்டது துலங்கும்
குடும்பத்தில் இருப்பவர்களே உங்களைப் பற்றி தப்பாகப் பேசும் சூழல் உள்ளதால் கவனம் தேவை. பிடித்த நண்பர்கள், உறவினர்களுடன் நேரத்தை செலவிடுவது நன்மை பயக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கும் யோகம் உண்டாகும்.
முதுகு தண்டுவடம், பாதம், நகம், முட்டி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். நரசிம்மர் காயத்ரி கேட்பது, சொல்வது நன்மையைத் தரும். நரசிம்மர் கவசம் சொல்லி வருவது ஏற்றம்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications