Viruchigam Rasi Palan: ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிகம்.. திடீர் அதிர்ஷ்டம்.. ஒரு விஷயத்தில் கவனம்
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம் என்பது மாசி மாதம் ஆகும். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

சனிப்பெயர்ச்சி
வாக்கியப்படி மார்ச் 6 ஆம் தேதி காலை 8.26 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 17 ஆம் தேதி மயானக் கொள்ளை நடைபெறும். மார்ச் 3 ஆம் தேதி சந்திரகிரகணம் மாலை 3.30 மணி முதல் 6.47 வரை கிரகணம் நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் விரதம், வழிபாடு செய்வது நன்மையைத் தரும். இதைத்தொடர்ந்து, மாசி மகம் நடைபெறவுள்ளது.
கும்பத்தில் சூரியன் இருந்து தன் சொந்த வீட்டைப் பார்ப்பார். இந்த மாதத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் குறித்து பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த மாசி மாதத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்துப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிரிகள் விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். வழக்கு, கோர்ட், கேஸ் போன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தாய் வழி உறவு, தந்தை வழி உறவு, ரத்த பந்த உறவுகள் விஷயங்களில் கவனம் தேவை. பெரியவர்களின் தேக ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
திடீர் அதிர்ஷ்டம்
ஆனால், திடீர் அதிர்ஷ்டங்களும் உண்டாகும். நிலம் வாங்குவது, வீடு வாங்குவது, மண் வாங்குவது, விவசாயம் செய்வது, கால்நடைகள் வாங்குவது, பசுமாடுகள் வாங்குவது போன்ற அபரிமிதமான நன்மைகள் உண்டாகும். மகாலட்சுமியின் அனுக்கிரகம் உண்டாகும். இதயத்தில் பாதிப்புகள் இருப்பவர்கள் கவனத்துடன் இருப்பது நல்லது.
பணவரவு
மற்றபடி பண வரவு, தொழில் வரவு அற்புதமாக இருக்கும். சூரியன் தன்னுடைய இடத்தைப் பார்ப்பதால் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என எல்லாமே நன்றாக இருக்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். செல்வாக்கு கூடும். யோக பலத்தை அதிகளவில் பெறும் யோகம் உண்டாகும். உத்தியோக மேலாண்மையில் உங்களுக்கு நல்ல பெயர், புகழ் ஏற்படும்.
எதிர்பாராத நன்மை
தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். விசா, கிரீன் கார்டு, துபாய் கோல்டன் கிடைக்கவில்லை என வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும் யோகம் உண்டு. படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர் எல்லோரும் நன்றாக இருக்கும் காலகட்டம். ஆரோக்கியம், எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை.
வழிபாடு
ரத்த தானம் செய்வது நன்மை பயக்கும். செவ்வாய்க்கிழமைகளில் செய்வது நல்லது. அடிவயிறு, ரத்த அழுத்தம், கொழுப்பு, மன அழுத்தம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். துர்க்கை வழிபாடு செய்வது அற்புதமான மேன்மையைத் தரும். துர்க்கை கவசம் தினந்தோறும் கேட்பது, படிப்பது நன்மையைக் கொடுக்கும்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications