Rasi Palan This Week: மிதுன ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்.. முழு பலன்கள்
Mithunam Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மாசி மாதம் பிறந்துள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன் (Mithunam Rasi Palan)
மிதுனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளது. உறவுகளில் தேவையில்லாத பிரச்சனைகள் காணப்படக்கூடிய அமைப்பு உள்ளது. தொழில், உத்தியோகம், வியாபாரம் ரீதியாக அனைத்து விஷயங்களிலும் கையெழுத்திடுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து விட்டு கையெழுத்திடுவது நன்மை பயக்கும்.
கவனம்
ஆரோக்கியத்தில் இடது பக்கம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. ரத்த அழுத்தம், சர்க்கரை, குறை ரத்த அழுத்தம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. புதிய அறிமுகத்தில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். பயணங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
அமைதி நல்லது
தொழிலில் இருந்த சிக்கல்கள் தீர அமைதியைக் கடைப்பிடிப்பது நன்மையைத் தரும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவுகளுடன் சிறிய வாக்குவாதங்கள் செய்வது கூட பெரிய சங்கடத்தையும், கஷ்டத்தையும் தரலாம் என்பதால் பொறுமையாகச் செல்வது நல்லது. மகான்கள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். பிள்ளைகள் விஷயம், துணை விஷயத்தில் சந்தோஷமும், ஏற்றமும் ஏற்படும்.
பிரச்சனைகள் வரும்
யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் நல்ல காலகட்டம். அஷ்டமத்தில் சந்திர மங்கள யோகம் சனியின் வீட்டில் ஏற்படுவது அவ்வளவு நல்லதல்ல. ஆண்களால், செக்யூரிட்டிகளால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பாக்கிய ஸ்தானத்தில் ஏராளமான கிரகங்கள் அமருவது வெளிநாடு செல்வது, வெளியூர் செல்வது, பயணங்கள் செய்வது, முன்னோர்கள், பெரியவர்களின் உதவிகள் கிடைப்பது போன்ற யோகம் உண்டாகும்.
வழிபாடு
எல்லோருடனும் நல்ல நட்பு உருவாகும். தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இந்த வாரத்தில் இரண்டாம் பாதி அற்புதமான மாற்றத்தைக் கொடுக்கும். மந்திராலய ஸ்ரீ குரு ராகவேந்திரர் வழிபாடு நன்மையை அள்ளிக் கொடுக்கும்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications