புத்தாண்டு ராசி பலன் 2026: கும்ப ராசிக்கு இந்த ஆண்டு பணம் கொட்டும்.. ஆபத்தும் காத்திருக்கு கவனம்
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில் கும்பம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறந்துள்ளது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும்.

திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் கும்பம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
கும்பம் (Kumbam new year rasi palan):
கும்ப ராசிக்கு ராசியிலேயே ராகு பகவான் டிசம்பர் வரை இருக்கிறார். ராசிக்கு 2 ஆம் இடத்தில் சனி பகவான் ஆண்டு முழுவதும் இருக்கிறார். 5 ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவான் ராசிக்கு 6 ஆம் இடத்தில் மே மாதம் வருகிறார். ராசிக்கு 7 ஆம் இடத்தில் கேது இருக்கிறார். இந்த ஆண்டு உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும்.
வேலை மாற்றம்
வேலை மாற்றம் ஏற்படும். இருக்கின்ற வேலையில் இருந்து சம்பள உயர்வுடன் கூடிய வேலைவாய்ப்பு கிடைக்கும். பூர்வீக வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். இருக்கும் வேலையில் இருந்து பதவி உயர்வு கிடைக்கும். சமுதாயத்தில் அங்கீகாரம், மதிப்பு உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு, மரியாதை, நிரந்தரத்தன்மை கிடைக்கும்.
கூடுதல் வருமானம்
உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். கூடுதல் வருமானம் ஏற்படும். பரிணாம வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதீத உடலுழைப்பு போடுவீர்கள். அதன் மூலமாக எடை குறையும் வாய்ப்புள்ளது. பிறர் மூலமாக ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். பார்ட்னர்களே உங்களை பண விஷயத்தில் ஏமாற்றும் நிலை உண்டு.
மன அழுத்தம்
நினைத்தது நடக்கவில்லை என்கிற ஒரு மன அழுத்தம் ஏற்படும். சுகம், நிம்மதி, தூக்கம் என அனைத்துமே இந்த ஆண்டு குறையும். அதனால், தூக்கத்தைக் கூட திட்டமிட்டுக் கொள்வது நல்லது. மனதளவில் உடைந்து போகும் சூழ்நிலை, தன்னம்பிக்கை இல்லாத நிலை ஏற்படும். அதிக மன அழுத்தம் ஏற்படும். கடன் வாங்கி எதையும் துவங்காமல் இருப்பது நல்லது. அப்படி துவங்கினால் பெரிய இழப்பு ஏற்படும் சூழல் உண்டாகும்.
நண்பர்களை இழக்கும் நிலை
நல்ல நண்பர்களை இழக்கும் வாய்ப்பு ஏற்படும். வீட்டில் உறவுகளுடன் கசப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. யாருக்கும் வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. அப்படி தந்தால் அந்த வாக்குறுதியை காப்பாற்றுவதில் மிகுந்த சிக்கல் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். திட்டமிட்டு காரியங்களைச் செய்வது வெற்றியைக் கொடுக்கும்.
-
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு வரப்போகும் சிக்கல்.. இந்த விஷயங்களில் எல்லாம் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: விருச்சிகம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. வரும் 7 நாட்கள் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ஒரு விஷயத்தில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: கன்னி ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்டம்.. ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு காத்திருக்கும் பேராபத்து.. கண்டத்திற்கு மேல் கண்டம் -
Rasi Palan This Week: கடக ராசிக்கு 15 நாட்களில் அடிக்கப் போகும் ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் துலங்கும் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு வெற்றியை குவிக்கும் நேரம்.. வேலையில் மட்டும் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷபம் ராசிக்கு பணம் கொட்டப் போகுது.. புது வேலை கன்ஃபார்ம் -
Rasi Palan This Week: மேஷம் ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்.. முழு பலன்கள் விவரம் இதோ -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications