For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினி அரசியலுக்கு வருவாரா? வந்தாலும் ஜெயிப்பாரா? - எண் கணித நிபுணரின் அடடே கணிப்பு

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு இதோ வரப்போகிறார் அதோ வரப்போகிறார் என்று சொல்லி 3 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த ஆண்டு நிச்சயம் ரஜினி அரசியலுக்கு கண்டிப்பாக வந்தே தீருவார் என்று சொல்கின்றனர். அவர் கட்சியி

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவர் ஜொலிக்க மாட்டார் என்று அடித்து கூறியுள்ளார் எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன்.
ரஜினிகாந்த் தனது கட்சிப்பெயரை இந்த ஆண்டு அறிவித்து விடுவார் என்று சொல்கின்றனர். அவராக அறிவிக்கும் வரை அது நிச்சயமில்லை. ஏழரை சனியில் ஜென்ம சனி நடக்கும் இந்த நேரத்தில் 69 வயதாகும் ரஜினிகாந்த் சினிமாவில் ஜெயித்தது போல அரசியலில் சாதிப்பாரா அல்லது சறுக்குவாரா அவரது ஜாதகம் என்ன சொல்கிறது. கிரகங்கள் கை அவருக்கு கொடுக்குமா என்று பார்க்கலாம்.

Recommended Video

    களைகட்டுகிறதா ரஜினியின் அரசியல் பிரவேசம்.. மாவட்ட செயலாளர்களை சந்திப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது லட்சக்கணக்கான ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. ஆனால் ஆன்மீக அரசியல் என்று சொன்ன ரஜினி போர் வரட்டும் என்று கூறியிருந்தார், அவர் சொன்ன பிறகு நாடாளுமன்ற தேர்தல் முடிந்து விட்டது. இடைத்தேர்தல், உள்ளாட்சித்தேர்தல் என பல போர்கள் வந்து நடந்து முடிந்து விட்டன. ஆனால் ரஜினிகாந்த் மட்டும் எந்த தகவலையும் வெளியிடவே இல்லை

    ரஜினிகாந்த் 1996 ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது திமுக - தமாக கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்தார். அப்போது முதலே வா தலைவா என்று அவரை அரசியலுக்கு அழைத்துக்கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். ஆனால் கருணாநிதி, ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் 2017ஆம் ஆண்டில்தான் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்தார் ஆனாலும் ரஜினிகாந்த் முழுவீச்சில் அரசியலில் இறங்கவில்லை. சைலண்ட் ஆக இருந்த கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கி தமிழக அரசியலில் கால் பதித்து விட்டார்.

    அரசியலுக்கு வருவாரா ரஜினி

    அரசியலுக்கு வருவாரா ரஜினி

    அரசியலில் ஜெயிக்க மக்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் அவசியம். ரஜினிகாந்த் சினிமாவில் நடித்து பிரபலமானவர்தான். ஆனால் அவர் என்றைக்கு அரசியல் பேச ஆரம்பித்தாரோ அன்றில் இருந்தே அவர் பேசுவது அனைத்தும் சோசியல் மீடியாவில் மீம்ஸ் ஆக பகிரப்படுகிறது. அவரது ஒவ்வொரு பேச்சையும் உன்னிப்பாக கவனிக்கின்றனர். ரஜினி அரசியலில் முழு வீச்சில் இறங்கினால் மட்டுமே அவர் சாதிப்பாரா அல்லது சறுக்குவாரா என்பது தெரியவரும்.

    ரஜினிக்கு ஜென்ம சனி

    ரஜினிக்கு ஜென்ம சனி

    ரஜினிகாந்த் மகர ராசி, திருவோணம் நட்சத்திரம் இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் ஏழரை சனியில் ஜென்ம சனி தொடங்கியுள்ளது. ரஜினி எப்போது கட்சி தொடங்கினாலும் அவர் தமிழக முதல்வராக வலம் வரக்கூடிய யோகம் அவருக்கு இருக்கிறது என்று கேரளா ஜோதிடர்கள் கூறியுள்ளார்களாம்.

    69 வயதில் அரசியல் கட்சி

    69 வயதில் அரசியல் கட்சி

    ரஜினிகாந்துக்கு கடந்த 19 வருடங்களாக சனி தசை நடந்தது. அவருக்கு உடல்நல பாதிப்பு இருந்தது. 2018 ஜனவரி 21 தேதியுடன், ரஜினிகாந்த்துக்கு சனி திசை முடிவடைந்து புதன் திசை தொடங்கியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்பதைத்தான் அவரின் ஜாதகம் சொல்கிறது. தனிக்கட்சி தொடங்கத்தான் வாய்ப்பு அதிகம். 69 வயது 6 மாதங்களுக்குள் ரஜினியின் அரசியல் பிரவேசம் இருக்கும். அப்படி அவர் அரசியலுக்கு வந்தாலும், எல்லாமே வெற்றிதான் என்று மற்றொரு ஜோதிடர் கூறியுள்ளார் ஜோதிடர்.

    ரஜினி சாதிப்பாரா

    ரஜினி சாதிப்பாரா

    அதே நேரத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன், ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்றும் அப்படி வந்தாலும் ஜொலிக்க மாட்டார் என்று கூறியுள்ளார். ஜெயலலிதா கருணாநிதி இல்லாத தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பலரும் கருதினாலும் அதிமுக,திமுகவை அசைக்க புதிய கட்சிகள் எதுவும் வரவில்லை. 2021 அதிசயம் நிகழும் என்று கூறிய ரஜினி தனது நிலைப்பாட்டை இன்னமும் உறுதியாக வெளிப்படுத்தவில்லை என்கிறார் ஜெஎன்எஸ் செல்வன்.

    ரஜினி எண் கணிதம்

    ரஜினி எண் கணிதம்

    ரஜினி காந்த் பிறந்த தேதி 12- 12-1950 கூட்டுத்தொகை 3. இது குருவின் எண். தெய்வபக்தி, தேச பக்தி, உழைப்பாளி. பிறரின் கஷ்டங்களை வாங்கிக்கொள்வார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் என்ற பெயரின் கூட்டுத்தொகை 28 மொத்தம் 1 வருகிறது. உடல் ரீதியாக மனரீதியாக பல போராட்டங்களை பெற்றிருக்கிறார். ஆன்மீகத்தில் ஈடுபட்டிருந்த பலரும் 3 ஆம் எண்ணில் பிறந்தவர்கள்தான். சுவாமி விவேகானந்தர், ரமணமகரிஷி, முத்துராமலிங்கத்தேவர், சுத்தானந்த பாரதி, ஆப்ரஹாம் லிங்கன், டார்வின் ஆகியோர் 3ஆம் எண்ணின் கூட்டுத்தொகையில் பிறந்தவர்தான்.

    ரஜினி கமல் கூட்டணி

    ரஜினி கமல் கூட்டணி

    அரசியலை விட ஆன்மீகம்தான் சிறந்தது. 69 வயதில் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை. காரணம் 3 ஆம் எண் குரு 69 கூட்டுத்தொகை 6 அது சுக்கிரனின் எண். ரஜினிகாந்த் இந்த வயதில் அரசியலுக்கு வந்தாலும் அவர் வெற்றி பெற வாய்ப்பு இல்லை அதே போல கமல்ஹாசனுடன் இணைந்து செயலாற்ற வாய்ப்பே இல்லை என்றும் கூறியுள்ளனர். கமலும் ரஜினியும் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார் எண் கணித நிபுணர் செல்வன்.
    ரஜினிகாந்த் பயணம் எப்படி இருக்கப் போகிறது என பார்க்கலாம்.

    நிபுணரின் கணிப்புகள் பலித்தது

    நிபுணரின் கணிப்புகள் பலித்தது

    எண் கணித நிபுணர் டாக்டர் ஜெஎன்எஸ் செல்வம், கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என்று கூறினார். அதே போல இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் கோத்தபய ராஜபக்சே ஆட்சியை பிடிப்பார் என்றும் கணித்திருந்தார். இந்த இரண்டு கணிப்புகளுமே பலித்துள்ளது. அதே போல ரஜினிகாந்த் பற்றிய கணிப்பும் பலிக்குமா என்று பார்க்கலாம்.

    English summary
    Numerologist JNS Chelvan has predicted Actor Rajinikanth will not shine when it comes to politics.Rajinikanth is 69 years old. Let’s see if the planets lend a hand.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X