For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவிளக்கில் ஒளிரும் மகாலட்சுமி - எந்த திசையில் தீபம் ஏற்றினால் என்ன பலன்

விளக்கில்லாமல் எந்த வழிபாடும் நடக்காது. இந்துக்கள் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினால் கிறித்துவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றுகின்றனர். தீபம் மத நல்லிணக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தீபம் ஏற்றுவதை முறையாக

Google Oneindia Tamil News

Recommended Video

    எந்த திசையில் தீபம் ஏற்றினால் என்ன பலன்-வீடியோ

    சென்னை: விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் இறைவனின் அருளை எளிதில் பெறலாம். தீபங்கள் நமது கர்ம வினையை நீக்குகின்றன. தெய்வங்களை அமைதிபடுத்தக்கூடியவை. விளக்கேற்றை முறையாக ஏற்ற வேண்டியது அவசியம்.

    தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை தீபம் ஏற்றி வழிபடலாம்.

    காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லெட்சுமி வாசம் செய்வாள்.

    மண்ணால் செய்யப்பட்ட விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும். வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் திருமகள் அருள் கிடைக்கும். பஞ்ச லோக விளக்கில் தீபம் ஏற்றினால் தேவதை வசியம் உண்டாகும். வெண்கல விளக்கில் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் உண்டாகும். இரும்பு விளக்கில் தீபம் ஏற்றினால் சனி கிரக தோஷம் விலகும்.

    குல தெய்வ அருள்

    குல தெய்வ அருள்

    பசு நெய்யில் தீபம் ஏற்றினால் மோட்சம் கிடைக்கும். பாவங்கள் தீரும். மகாலட்சுமி அருள் கிடைக்கும். விளக்கெண்ணையில் தீபம் ஏற்றினால் குடும்ப சுகம் சகல சவுபாக்கியமும் கிடைக்கும். இலுப்பை எண்ணெய் தீபத்தினால் குல தெய்வ அருள் கிடைக்கும். முன்னோர் சாபங்கள், முற்பிறவிப் பாவங்கள் நீங்கும். நல்லெண்ணெய் தீபத்தினால் கடன்கள் தீரும். நோய்கள் நீங்கும். தேங்காய் எண்ணெய் தீபத்தினால் திருமணத்தடை நீங்கும்.

    மூன்று வகை எண்ணெய்கள்

    மூன்று வகை எண்ணெய்கள்

    முக்கூட்டு எண்ணெய் எனப்படும் பசு நெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகியவைகளை சமஅளவில் கலந்து தீபம் ஏற்றுவதால் தேவஆகர்ஸ்ணம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். செல்வம் சேரும். கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.

    ஐஸ்வர்யம் தரும் 5 முக தீபம்

    ஐஸ்வர்யம் தரும் 5 முக தீபம்

    ஒரு முக தீபம் ஏற்றினால் நினைத்த செயல்கள் நடக்கும். இரு முக தீபம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை கிட்டும். முன்று முக தீபம் ஏற்றினால் புத்திரதோஷம் நீங்கும். நான்கு முகம் ஏற்றினால் பசு,பூமி,செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும். ஐந்து முகம் ஏற்றினால் சகலநன்மையும்,ஐஸ்வர்யம் பெருகும்.

    முன்னோர் சாபம் நீங்கும்

    முன்னோர் சாபம் நீங்கும்

    திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். திரிகளும்,பயன்களும் குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன. பருத்திப் பஞ்சு வைத்து தீபம் ஏற்றினால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும். வாழைத் தண்டின் நாரில் தீபம் ஏற்றினால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும். தாமரைத்தண்டு நூலில் தீபம் ஏற்றினால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும். வெள்ளை எருக்கம்பட்டையில் தீபம் ஏற்ற செல்வம் பெருகும். புதிய மஞ்சள் துணியில் தீபம் ஏற்ற நோய்கள் குணமாகும்.

    புதிய சிவப்பு வண்ண துணியில் தீபம் ஏற்ற குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும். புதிய வெள்ளை துணி திரியில் தீபம் ஏற்ற அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.

    கிழக்கு திசை விளக்கு

    கிழக்கு திசை விளக்கு

    கிழக்கு திசை நோக்கி விளக்கேற்றுவது துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி ஏற்படும். மேற்கு திசையில் விளக்கேற்றுவது கடன், தோஷம் நீங்கும்.

    வடக்கு நோக்கி தீபம் ஏற்றினால் திருமணத்தடை அகலும். தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது அப்படி ஏற்றினால் மரண பயம் ஏற்படும்.

    பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும்.

    பூவால் குளிர்விக்கலாம் அல்லது குச்சியால் குளிர்விக்க வேண்டும்.

    English summary
    Hindu ritual begins with the lighting of the lamp, an extension of the daily lamp-lighting ritual in the morning and evening that one can see in most Hindu households, beginning and ending the day with an invocation to light. The flame thus lit is called jyoti or deepak — representing agni; it refers to not just the physical fire but symbolises the cosmic force or Divine Light.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X