திருமலையில் ஈஸியா சுற்றி வரலாம்.. கூகுள் மேப் வசதியுடன் க்யூ ஆர் கோடு ஸ்கேன்.. தேவஸ்தானம் அசத்தல்
திருமலை: திருமலையில் உள்ள இடங்களை பக்தர்கள் எளிமையாக தெரிந்து கொள்ளும் வகையில் 'க்யூ ஆர் கோடு ஸ்கேன்' வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவத்தில் பரிசோதனை முறையில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். பிரம்மோற்சவ விழா இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளதால் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்கும் அறைகள் உள்ள இடத்துக்கு செல்லவும் விரும்பிய பகுதிகளை பார்க்கவும், சுவாமி தரிசனம், லட்டு பிரசாதம், உணவு கூடம் போன்றவற்றுக்கு செல்ல வழி தெரியாமல் தவிக்கின்றனர்.

க்யூ ஆர் கோடு வசதி
இதையடுத்து பக்தர்கள் வசதிக்காக திருமலை-திருப்பதி தேவஸ்தான பொறியாளர்கள், மக்கள் தொடர்புத்துறையினர் இணைந்து 'க்யூ ஆர் கோடு ஸ்கேன்' உருவாக்கியுள்ளனர். திருமலையில் உள்ள தனது அலுவலகத்தில் செயல் அதிகாரி தர்மா இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.

கூகுள் மேப்
இதன்படி, திருமலைக்கு வரும் பக்தர்கள் ஆன்ட்ராய்டு போன் இருந்தால் யாரிடமும் கேட்காமல் எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் விதமாக இந்த க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்தால் உரிய இடத்தை கூகுள் மேப் வசதியுடன் செல்லும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழி காட்டும் வசதி
திருமலையில் உள்ள தேவஸ்தானத்துக்கு தொடர்பான 40 துறைகள், விருந்தினர் இல்லங்கள், பக்தர்கள் ஓய்வறை, வைகுண்டம் காம்பளக்ஸ், லட்டு கவுண்டர்கள், மருத்துவமனை, காவல் நிலையங்கள், விஜிலென்ஸ் அலுவலகங்கள் போன்ற வழித்தடங்களை வழங்கவும் திருமலை பஸ் நிலையத்தில் இறங்கும் பக்தர்கள் அந்த பகுதியில் வைக்கப்பட்ட க்யூ ஆர் கோடில் அவர்கள் செல்ல விரும்பும் இடத்தை ஸ்கேன் செய்தால் கூகுள் மேப் வசதியுடன் சுலபமாக வழி காண்பிக்கும்.

பிரம்மோற்சவம்
இந்த சேவை பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திருமலையில் ஸ்ரீவாரி சேவா திட்டத்தில் சேவை செய்ய பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் தன்னார்வலர்களுக்கும் இந்த க்யூ ஆர் கோடு ஸ்கேன் வசதி பயனுள்ளதாக இருக்கும். எனவே, பிரம்மோற்சவத்தில் பரிசோதனை முறையில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று செயல் அதிகாரி தர்மா தெரிவித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications