"இல்ல ஸார்..... அவங்க மட்டும்தான்".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (20)
- ராஜேஷ்குமார்
டி.ஜி.பி.வைகுந்த் தன்னுடைய உதவியாளர் சொன்ன செய்தியைக் கேட்டு ஒரு சில விநாடிகள் திகைத்துப் போனாலும் அந்த உணர்வைக் காட்டிக் கொள்ளாமல் இண்டர்காம் ரீஸீவரில் இயல்பாய் பேசினார்.
" எடிட்டர் வாஹினியோடு யாராவது வந்திருக்காங்களா ..... ? "
" இல்ல ஸார்..... அவங்க மட்டும்தான் "
" சரி.... என்னோட ரூமுக்கு அனுப்புங்க "
" எஸ்..... ஸார் "
வைகுந்த் ரீஸீவரை வைத்துவிட்டு எதிரில் உட்கார்ந்திருந்த சந்திரசூடனை சற்றே இறுகிப்போன முகத்தோடு பார்த்தார்.

" மிஸ்டர் சந்திரசூடன்.... மார்ச்சுவரியில் இருக்கிற கறுப்புப் பெயிண்ட் பூசப்பட்ட அந்தப்பெண்ணோட டெட்பாடியைப் பார்க்கணும்ன்னு ஸ்மேஷ் ஆங்கிலப் பத்திரிக்கையின் எடிட்டர் வாஹினி வந்திருக்காங்களாம்.... ஸ்மேஷ் பத்திரிக்கை பெண்களின் பிரச்சனைகளுக்காக நடத்தப்படற வெரி பவர்ஃபுல் மேகஸின். உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன் "
" நல்லாவே தெரியும் ஸார்..... பத்து இலட்சம் சர்க்குலேஷன். இந்தியாவின் எந்த மூலையாக இருந்தாலும் சரி, பெண்கள் பாதிக்கப்படுகிற மாதிரி ஒரு விஷயம் நடந்தா போதும் உடனே அந்தப் பத்திரிக்கையின் ரிப்போர்ட்டர் அந்த இடத்துக்கு போயிடுவார்ன்னு கேள்விப்பட்டிருக்கேன் "
" எடிட்டர் வாஹினியும் சாதாரண பெண் கிடையாது. எல்.எல்.எம். படிச்சுட்டு அஞ்சு வருஷம் அரசு வக்கீலாய் வேலை பார்த்த பின்னாடி அந்த வேலையை ராஜினாமா பண்ணிட்டு ஸ்மேஷ் பத்திரிக்கையை ஆரம்பிச்சு சக்சஸ்ஃபுல்லா நடத்திட்டு வர்றாங்க.... வைகுந்த் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கதவருகே நிழலாடியது. தொடர்ந்து ஒரு பெண்ணின் கணீர் என்ற குரல் கேட்டது.
" மே.ஐ.கம் இன் ஸார் ..... ? "
" கெட் இன் மிஸஸ் வாஹினி "
அந்த வாஹினி உள்ளே வந்தாள். நாற்பது வயது இருக்கலாம். ஒரு ஆணுக்கு இருக்க வேண்டிய உயரம். சதைப்பற்றான முகம். அணிந்திருந்த கோல்டன் ஃப்ரேம் ஸ்பெக்ஸ் முகத்திற்கு கூடுதல் பொலிவை கொடுத்திருந்தது. மெலிதான பச்சை வண்ண காட்டன் சேலையை நேர்த்தியாக கட்டி, சுருட்டையான தலைமுடியை அழுந்த வாரி தூக்கலாய் ஒரு கொண்டை போட்டிருந்தாள். இரு புருவங்களுக்கு நடுவில் ஒரு சிவப்பு ஸ்டிக்கர் துணுக்கு பொட்டாக மாறியிருந்தது.
வைகுந்த் தனக்கு முன்னால் இருந்த காலியான இருக்கையைக் காட்டினார்.
" ப்ளீஸ்........ "
வாஹினி உட்கார்ந்ததும் வைகுந்த் சந்திரசூடனிடம் திரும்பினார்.
" மிஸ்டர் சந்திரசூடன்.... ஷி ஈஸ் மிஸஸ் வாஹினி...... ஸ்மேஷ் பத்திரிக்கையோட எடிட்டர் "
சந்திரசூடன் மெல்ல சிரித்தபடி " இவங்களைத் தெரியாதவங்க நம்ம டிபார்ட்மெண்ட்ல யாரும் இருக்க முடியாது ஸார் " என்றார்.
வைகுந்த் வாஹினிக்கு சந்திரசூடனைக் காட்டியபடி சொன்னார்.
" ஹி ஈஸ் சந்திரசூடன் அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ் "
சந்திரசூடனைப் பார்த்து " நைஸ் டூ மீட் யூ " என்று சொன்ன வாஹினி டி.ஜி.பி.வைகுந்தை ஏறிட்டாள்.
" ஸார்...... ஒரு சின்ன திருத்தம். நான் மிஸஸ் கிடையாது. இன்னும் மிஸ்தான் "
" ஒ ஸாரி.... ஐ தாட் யூ மைட் ஹேவ் காட்டன் மேரீட் "
" நோ ..... நோ நாட் யெட் "
" எனி ரீஸன் ..... ? "
" வெரி சிம்பிள்..... என்னோட எண்ணங்களுக்கும் நோக்கங்களுக்கும் ஏற்ற மாதிரியான ஒருத்தரை நான் இதுவரை பார்க்கலை. அதுக்காக நான் கவலைப்பட்டதே இல்லை. அம்மாவும் அப்பாவும் தான் கொஞ்ச நாள் கவலைப்பட்டாங்க.... அதுக்கப்புறம் அவங்களும் என்னிக்காவது ஒரு நாள் கவலைப்படறதோடு சரி ஆனா நான் அந்த ஒரு நாள் கூட கவலைப்படறதில்லை. இப்போதைக்கு என்னோட வாழ்க்கையே ஸ்மேஷ் பத்திரிக்கைதான். இட்ஸ் ஒ.கே... நான் இப்ப உங்களை எதுக்காக பார்க்க வந்திருக்கேன்னு உங்க உதவியாளர் சொல்லியிருப்பார்ன்னு நினைக்கிறேன் "
" ம்... சொன்னார் "
" கொலை செய்யப்பட்ட ஒரு இளம்பெண்ணோட டெட்பாடி கறுப்புப் பெயிண்ட் பூசப்பட்ட நிலையில் ஒரு கார் டிக்கியிலிருந்து எடுக்கப்பட்டதாக பேப்பரிலும் பார்த்தேன். டி.வி.நியூஸிலும் கேட்டேன். அந்தப் பெண் யார்ங்கிறதை கண்டுபிடிச்சுட்டீங்களா ..... ? "
" இன்னும் இல்லை.... சந்திரசூடன்தான் அந்த இன்வெஸ்டிகேஷனை பண்ணிட்டிருக்கார். மார்ச்சுவரியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிற அந்தப் பெண்ணோட உடம்பை நீங்க பார்க்க விரும்பறீங்களா ..... ? "
" ஆமா "
" எதுக்காக பார்க்க விரும்பறீங்கன்னு சொல்ல முடியுமா..... ? "
" எஸ் " என்று சொன்ன வாஹினி தன்னுடைய செல்போனின் வாட்ஸ் ஆப்பை உயிர்ப்பித்து அதிலிருந்த ஒரு பெண்ணின் போட்டோவை ஜூம் செய்து டி.ஜி.பி.யிடம் நீட்டினாள். அவர் அந்த போட்டோவை வாங்கிப் பார்த்துவிட்டு சந்திரசூடனிடம் கொடுத்தபடியே வாஹினியிடம் கேட்டார்.
" யார் இந்தப் பெண் ..... ? "
" பெண்ணோட பேரு லட்சணா. ஜர்னலிஸம் படிச்சுட்டு ப்ரீலான்ஸர் ரிப்போர்ட்டராய் ஒர்க் பண்ணிட்டு இருக்கா. நான் நடத்தற ஸ்மேஷ் பத்திரிக்கைக்கும் நிறைய ஆர்டிகள்ஸ் குடுத்திருக்கா. எல்லா ஆர்டிகள்ஸூம் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளாகத்தான் இருக்கும். ரெண்டு வாரத்துக்கு முந்தி லட்சணா என்னோட பத்திரிக்கை ஆபீஸூக்கு வந்து என்னை மீட் பண்ணி பெண்களுக்கு எதிராய் இப்ப முளைவிட்டிருக்கிற ஒரு புதிய பிரச்சினையைப் பத்தி சொன்னா. அதைக்கேட்டு ஒரு விநாடி நான் அதிர்ந்து போயிட்டேன் "
வைகுந்தும், சந்திரசூடனும் முகங்கள் மாறிப் போனவர்களாய் வாஹினியை ஏறிட்டார்கள்.
" பெண்களுக்கு எதிராய் முளைவிட்டிருக்கிற புதிய பிரச்சினையா ..... ? "
" எஸ். "பீடோ ஃபைலிக்" என்கிற வார்த்தையை கேள்விப்பட்டு இருக்கீங்களா ? "
" இல்லை "
" சரி.... " செக்ஸ் டூரிஸம்" என்கிற வார்த்தையையாவது கேள்விப்பட்டு இருக்கீங்களா ..... ? "
" ஸாரி.... நீங்க சொல்ற இந்த புதுவகையான வார்த்தைகளை இன்னிக்குத்தான் கேள்விப்படறோம் "
" நானும் ரெண்டு வாரத்துக்கு முந்தி லட்சணா சொல்லித்தான் கேள்விப்பட்டேன். லட்சணா என்கிட்டே சொன்னது இதுதான். ஆறு வயசிலிருந்து பனிரெண்டு வயசு வரை உள்ள அழகான பெண் குழந்தைகளைக் கடத்திக் கொண்டு போய் வக்கிர எண்ணங்களோடு பாலியல் பலாத்காரம் செய்து சந்தோஷப்படுகிற ஒரு வெறி பிடித்த கும்பலின் பெயர்தான் "பீடோ ஃபைலிக்". டூரிஸ்ட்கள் போல் இந்த கும்பல் இப்போது இந்தியாவிலும் ஊடுருவி பெண் குழந்தைகளைக் கடத்திச் செல்லும் வேலையில் ஈடுபட்டிருக்கு.... இது ஒரு மிகப் பெரிய செக்ஸ் வணிகம். இந்த வணிகம் பற்றி எனக்கு ஒரு புது க்ளூ கிடைச்சிருக்கு மேடம். அது குறித்த கட்டுரையோடு நான் அடுத்த வாரம் உங்களைப் பார்க்க வர்றேன்னு லட்சணா என்கிட்டே சொல்லிட்டு கிளம்பிப் போனா. நானும் ஒரு வாரம் வெயிட் பண்ணிப் பார்த்துட்டு அவளுக்கு போன் போட்டேன். போன் ஸ்விட்ச் ஆஃப் ன்னு ரிக்கார்டட் வாய்ஸ் கேட்டது. அதுக்குப்பிறகு ரெண்டு தடவை லட்சணாவோடு பேச முயற்சி பண்ணியும் அதே ரிக்கார்டட் வாய்ஸ் கேட்டது. இனி அவளுக்கு என்ன பிரச்சினையோன்னு நானும் போன் பண்ணலை. ஆனா நேத்திக்கு காலையில் லட்சணாவோட ஃப்ரண்ட் ஒருத்தி எனக்கு போன் பண்ணி " மேடம்..... லட்சணா கடந்த பத்து நாளா ஹாஸ்டல் ரூமுக்கு வரலை.... நீங்க ஏதாவது வேலை கொடுத்து வெளியூர்க்கு அனுப்பியிருக்கீங்களான்னு" கேட்டா..... நான் இல்லையேன்னு சொன்னேன். அந்த ஃப்ரண்ட் போன் பண்ணி கேட்டபிறகுதான் எனக்கு பேப்பர்ல டி.வியில் பார்த்த நியூஸ் ஞாபகத்துக்கு வந்தது. மனசுக்குள்ளே ஒரு சந்தேகமும் வந்தது "
சந்திரசூடன் குறுக்கிட்டார்.
" கொலை செய்யப்பட்டு கறுப்புப் பெயிண்ட் பூசப்பட்ட பெண் லட்சணாவாய் இருக்கலாமோன்னு சந்தேகப்படறீங்களா ..... ? "
" ஆமா..... "
" லட்சணா ஏன் ஹாஸ்டலில் ஸ்டே பண்ணனும் ? அந்தப் பெண்ணுக்கு சொந்த ஊர் எது ..... ? "
" லட்சணாவுக்கு சொந்த ஊர் விஜயவாடா. அம்மா இல்லை..... அப்பா மட்டும்தான். அப்பாவோட குடிபழக்கமும் நடத்தையும் சரியாய் இல்லாததால வீட்டை விட்டு வெளியே வந்துட்டா. அவளோட அப்பாவும் அதைப்பத்தி கவலைப்படாமே பொண்ணு கூட எந்தத் தொடர்பும் இல்லாமே இருக்கார் "
" லட்சணா எந்த ஹாஸ்டலில் ஸ்டே பண்ணியிருக்கா ..... ? "
" வெஸ்ட் மாம்பலத்த்தில் பூரணி லேடீஸ் நெஸ்ட் என்கிற பேர்ல ஹாஸ்டல் இருக்கு. அங்கதான் ஸ்டே பண்ணியிருக்கிறா "
" அந்த லட்சணாவோட போட்டோவை காட்டுங்க "
வாஹினி தன் செல்போனின் வாட்ஸ் ஆப்பை மறுபடியும் உயிர்ப்பித்து லட்சணாவின் போட்டோவை பெரிதுபடுத்திக் காட்டினாள்.
சந்திரசூடன் போட்டோவை சில விநாடிகள் வரை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு பெருமூச்சோடு வாஹினியை ஏறிட்டார்.
" ஷி ஈஸ் வெரி க்யூட் "
" நேர்ல பார்க்க இன்னமும் அழகாய் இருப்பா "
" லட்சணாவோட செல்போன் நெம்பர் என்ன ..... ? " ஒவ்வொரு எண்ணாக வாஹினி சொல்ல சந்திரசூடன் அந்த எண்ணை ஒரு தாளில் எழுதிக் கொண்டார். கேட்டார்.
" நீங்க லட்சணாவுக்கு இப்ப போன் பண்ணினாலும் ஸ்விட்ச் ஆஃப் ன்னு ரிக்கார்டட் வாய்ஸ் வருதா ..... ? "
" ரெண்டு நாளா நான் போன் பண்ணலை. ஆனா ரெண்டுநாளைக்கு முன்னாடி அந்த நெம்பர்க்கு போன் பண்ணின போது எந்த ஒரு ரிக்கார்டட் வாய்ஸூம் கேட்கலை.... ஒரு டீப் சைலன்ஸ் மட்டும் மெயிண்டைன் ஆகுது "
" அதாவது எந்த ரெஸ்பான்ஸூம் இல்லை ..... ? "
" ஆமா.... "
" சைபர் க்ரைம்க்கு இந்த போன் நெம்பரை கொடுத்து போன் எங்கே இருக்குன்னு லொகேட் பண்ணச் சொல்லலாம் "
வைகுந்த் சந்திரசூடனை ஏறிட்டார்.
" மிஸ்டர் சந்திரசூடன்..... நீங்க முதல்ல மிஸ்.வாஹினியை கூட்டிகிட்டு மார்ச்சுவரிக்கு போய் கறுப்புப் பெயிண்ட் பூசப்பட்ட அந்தப்பெண்ணோட டெட்பாடியை காட்டுங்க. அது லட்சணாவா இல்லையான்னு அவங்க பார்த்துட்டு சொல்லட்டும் "
" எஸ் ஸார் "
சந்திரசூடன் எழுந்து டி.ஜி.பிக்கு ஒரு சல்யூட்டைக் கொடுத்துவிட்டு வாஹினியைப் பார்த்தார்.
" புறப்படலாமா ..... ? "
வாஹினி டி.ஜி.பியிடம் விடைபெற்றுக்கொண்டு அறையினின்றும் வெளிப்பட்டு சந்திரசூடனோடு வராந்தாவில் நடந்தாள்.
லிஃப்ட்டை நெருங்கியபோது சந்திரசூடனின் செல்போன் ரிங்டோனை வெளியிட்டது.
எடுத்து டிஸ்ப்ளேயைப் பார்த்தார்.
கோபிகா கூப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
( தொடரும்)
[அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 ]
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications