For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களை கேவலப்படுத்தும் அரசியல்வாதிகள்

By Staff
Google Oneindia Tamil News

Naqvi
மும்பை: மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக அந்த நகரில் மெழுகுவர்த்திகள் ஏந்தி அமைதிப் போராட்டம் நடத்திய மக்களை கேவலமாகக் கிண்டலடித்துள்ளார் பாஜக முக்கியத் தலைவரான முக்தார் அப்பாஸ் நக்வி.

மும்பையில் நடந்த தாக்குதலையடுத்து அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து அரசியல் தலைவர்களுக்கு நாடு முழுவதுமே அலை பரவியுள்ளது.

தாக்குதல் நடந்த இடங்களில் மெழுகுவர்த்திகளையும் நாட்டை இந்த அளவுக்குக் கொண்டு வந்துவிட்ட அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளுக்கும் எதிராக பேனர்கள் ஏந்தியபடி மக்கள் நிற்பதைப் பார்க்க முடிகிறது.

இந்த இடங்களுக்குச் செல்லும் அரசியல்வாதிகள் அனைவருமே இந்த மக்களால் விரப்பட்டு வருகின்றனர். அதில் எல்லா கட்சிகளையும் அரசியல்வாதிகளுமே அடக்கம்.

இந் நிலையில் நேற்று மும்பைக்குச் சென்ற முக்தார் அப்பாஸ் நக்விக்கும் இந்த அனுபவம் நேர்ந்தது. இதையடுத்து நிருபர்களிடம் பேசிய நக்வி,

நாங்கள் (அரசியல்வாதிகள்) ஐஎஸ்ஐயுடனும் பாகிஸ்தானுடனும் மோதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இங்கே சிலக் டை, சூட், கோட் எல்லாம் போட்டுக் கொண்டு அரசியல்வாதிகளுக்கும் ஜனநாயகத்துக்கும் எதிராக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு கையில் பேனர் பிடித்துவிட்டால் போதுமா?. பெளடர் போட்டுக் கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தினால் போதுமா?. இதைத் தான் காஷ்மீரி்ல் தீவிரவாதிகளும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.

ராம்கோபால் வர்மாவுடன் சென்ற முதல்வர்:

இதற்கிடையே நேற்று தாஜ் ஹோட்டலை பார்வையிடச் சென்ற மகாராஷ்டிர காங்கிரஸ் முதல்வர் தேஷ்முக் தன்னுடன் இயக்குனர் ராம்கோபால் வர்மாவையும், தனது மகன் ரித்தேஷ் தேஷ்முக்கையும் அழைத்துச் சென்று இந்த சம்பத்ததையே கேலிக்கூத்தாகியது நினைவுகூறத்தக்கது.

அண்டர்வோல்ர்ட்டை அடிப்படையாக வைத்து படமெடுக்கும்ம் ராம்கோபால் வர்மா தனது அடுத்த படத்துக்கான திரைக்கதைக்காக இங்கு வந்ததாகத் தெரிகிறது. அந்தப் படத்தில் ரித்தேஷ் தான் ஹீரோவோ என்னவோ?.

அச்சுதானந்தனுக்கு விழுந்த திட்டு:

அதே போல தாக்குதலில் பலியான என்எஸ்ஜி வீரர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் வீட்டுக்குச் சென்ற கேரள முதல்வர் அச்சுதானந்தன் கேவலப்பட்டு திரும்பியதும் குறிப்பிடத்தக்கது.

தனது மகனை பலிகொடுத்த தந்தை உன்னிகிருஷ்ணன், அச்சுதானந்தனை வறுத்தெடுத்து வீட்டை விட்டு வெளியே விரட்டிவிட்டார்.

சந்தீப்பின் உடலுக்கு மரியாதை செலுத்தக் கூட கேரளத்தில் இருந்து ஒரு அதிகாரியோ, அமைச்சரோ பெங்களூர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எல்லா பத்திரிக்கைகளும் திட்டிய பிறகே 3 நாட்களுக்குப் பின் ஓடி வந்தார் அச்சுதானந்தன்.

இவர்களை எல்லாம் என்ன செய்வது...?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X