For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய பணத்தை ஏப்பம் விட்ட திமுக தொழிற்சங்க நிர்வாகி

Google Oneindia Tamil News

கரூர்: டி.என்.பி.எல். ஆலை ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்துக்கு கிடைக்க வேண்டிய பென்ஷன் பணத்தை முறைகேடு செய்த திமுக தொழிற்சங்க நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக நிர்வாகிகளே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே ஆசியாவிலேயே மிகப் பெரிய காகித ஆலை செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆலமரத்துமேடு பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். இதையடுத்து அவரது குடும்பத்திற்கு டி.என்.பி.எல். ஆலையில் இருந்து ரூ.2,94,820 கிடைத்தது. இதை தொழிற்சங்க செயலாளர் முருகானந்தம்(திமுக) என்பவர் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் முறைகேடு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் டி.என்.பி.எல். ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களுக்கு போட்டியாக மற்றொரு ஒப்பந்த தொழிலாளர் சங்க அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

இதையடுத்து இரு தரப்பும் இந்த விவகாரம் குறித்து திமுக தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளது.

English summary
DMK functionary Muruganandam allegedly swindled the pension amount of a deceased employee of TNPL factory. Other DMK functionaries protested infront of the factory seeking action against him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X